சவுரவ் தாஸ், அஷுதோஷ் ரங்காக்கு நீதிமன்ற காவல்! – தில்லி நீதிமன்றம் உத்தரவு
yesterday
<p>கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர்கள் சவுரவ் தாஸ் மற்றும் அஷுதோஷ் ரங்கா ஆகிய இருவரையும் 5 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும், எஸ்.ஐ.ஆர் பணிகளை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தில்லி ஜந்தர் தொடர் போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், போராட்டத்தை ஒடுக்க போராடும் இடங்களின் பட்டியலில் இருந்து ஜந்தர் மந்தரை நீக்கியது ஒன்றிய அரசு. நேற்று அதிகாலையில், சிஜேபி-யின் சவுரவ் தாஸ், அஷுதோஷ் ரங்கா, அஜிங்கியா உள்ளிட்டோர் ஜந்தர் மந்தர் பகுதியில் அனுமதியின்றி நுழைந்து தேசிய கொடியை ஏந்தி ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று முழக்கமிட்டனர். இதை தொடர்ந்து, அவர்கள் கைது செய்யப்பட்டு நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.</p><p>இதனை தொடர்ந்து, சவுரவ் தாஸ், அஷுதோஷ் ரங்கா மற்றும் அஜிங்கியா ஆகியோர் தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். சவுரவ் தாஸ் மற்றும் அஷூதோஷ் ரங்கா இவரும் 5 நாள்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட நிலையில், அஜிங்கியா ஷிண்டே பிணைப்பத்திரத்தில் கையெழுத்திட்ட பிறகு விடுவிக்கப்பட்டர். </p>
