400 ஆண்டுகால வரலாற்றில் 2ஆவது இந்தியப் பெண் விஞ்ஞானி உலகப் புகழ்பெற்ற ராயல் சொசைட்டியில் கால் பதிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சௌமியா சுவாமிநாதன்
22 May 2026, 8:44 pm

400 ஆண்டுகால வரலாற்றில் 2ஆவது இந்தியப் பெண் விஞ்ஞானி உலகப் புகழ்பெற்ற ராயல் சொசைட்டியில் கால் பதிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சௌமியா சுவாமிநாதன்

லண்டன் ராயல் சொசைட்டி என்பது உலகின் மிகப்பழைமை யான, மிகவும் புகழ்பெற்ற அறி வியல் அமைப்பாகும். இது 1660 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் லண்டன் நகரில் தொடங்கப்பட்டது.

இங்கிலாந்து மன்னர் இரண்டாம் சார்லஸ் இந்த அமைப்பிற்கு அதி காரப்பூர்வ அங்கீகாரம் வழங்கிய தால், இது ‘ராயல் சொசைட்டி’ என்று அழைக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த ராயல் சொசைட்டியின் (எப்ஆர்எஸ்) உறு ப்பினராக சௌமியா சுவாமிநாதன் (67) என்ற இந்திய விஞ்ஞானி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தனது மறைந்த தந்தையும், பாரத ரத்னா விருது பெற்றவருமான எம்.எஸ். சுவாமிநாதனின் அடிச்சுவடு களைப் பின்பற்றி வரும் சௌமியா, இந்த புதிய கவுரவமான பொறுப்பின் மூலம் ஐசக் நியூட்டன் போன்ற உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி களின் புகழ்பெற்ற வரிசையில் ராயல் சொசைட்டி உறுப்பினராக இணைந்துள்ளார்.

லண்டனில் செவ்வாயன்று அறிவிப்பு வெளியானவுடன் இந்த செய்தியைப் பகிர்ந்து கொண்ட, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் இயக்குநர் ஜெனரலும், இந்திய தேசிய அறிவியல் அகாடமியின் முன்னாள் தலைவருமான ரகு நாத் மஷேல்கர், “டாக்டர் சௌ மியா சுவாமிநாதன் எப்ஆர்எஸ் (FRS - Fellow of Royal Society) உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

இது ஒரு விஞ்ஞானி பெறக்கூடிய மிக உயர்ந்த உலக ளாவிய கவுரவங்களில் ஒன்றாகும். இவரது தந்தை பாரத ரத்னா எம்.எஸ்.சுவாமிநாதனும் (1973இல் எப்ஆர்எஸ் உறுப்பி னர்) எப்ஆர்எஸ் ஆகத் தேர்ந்தெடு க்கப்பட்டவர் என்பதால், இந்தியாவின் முதல் தந்தை-மகள் எப்ஆர்எஸ் ஜோடி இவர்கள்தான்” என்று பெருமையாக கூறினார். 4

00 ஆண்டுகள் ராயல் சொசைட்டியின் 400 ஆண்டுகளுக்கும் மேலான வர லாற்றில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது இந்தியப் பெண் விஞ்ஞானி என்ற பெருமையை சௌமியா பெற்றுள் ளார்.

இதற்கு முன்பு 2019ஆம் ஆண்டு முதன்முதலாகப் பேராசிரியர் ககன்தீப் காங் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

அதன்பின் சௌமியா ராயல் சொசைட்டிக்குள் நுழைகிறார்.

காசநோய் - கொரோனா தமிழ்நாடு தலைநகர் சென்னை யில் பிறந்த சௌமியா தற்போது தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத் தின் முதன்மை ஆலோசகராக உள் ளார்.

தனது தற்போதைய பொறுப்பில், கொள்கை வழி காட்டுதல்கள் மற்றும் தேவையான திருத்தங்களை ஆலோசிப்பதன் மூலம் காசநோயை ஒழிக்கும் இலக்குகளை அடைவதற்கான உத்திக்கு அவர் தலைமை தாங்கி வருகிறார்.

கொரோனா பெருந்தொற்றின் பரவல் உச்சக்கட்டத்தில் இருந்த போது உலக சுகாதார அமைப் பின் தலைமை விஞ்ஞானியாக வும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் ஜென ரலாகவும் சௌமியா சுவாமிநாதன் திறம்பட பணியாற்றியுள்ளார்.

உலகப் புகழ்பெற்ற ராயல் சொசைட்டியில் கால் பதிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சௌமியா சுவாமிநாதனுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.