தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மோடி அரசு மக்களை துன்புறுத்துகிறது சோனியா காந்தி கடும் கண்டனம்

20 Dec 2025, 2:23 pm
மோடி அரசு மக்களை துன்புறுத்துகிறது சோனியா காந்தி கடும் கண்டனம்
<p><strong>மோடி அரசு மக்களை துன்புறுத்துகிறது சோனியா காந்தி கடும் கண்டனம்</strong></p> <p>புதுதில்லி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் மாற்றப்பட்டதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி எம்.பி., கடும் கண்டனம் தெரி வித்துள்ளார். &nbsp;இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,&rdquo;20 ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த அந்த நேரத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் (MGNREGA - 100 நாள் வேலை திட்டம்) நாடாளுமன்றத்தில் ஒருமித்த &nbsp;கருத்துடன் நிறைவேற்றப்பட்டது. இது ஏழைக ளுக்கு வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான சட்டப்பூர்வ உரிமையை வழங்கியது. அதன் மூலம் கிராம பஞ்சாயத்துகளை வலுப்படுத்தியது. &nbsp;தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மூலம், மகாத்மா காந்தியின் கனவுகளை நோக்கி ஒரு உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த 11 ஆண்டுகளில், கொரோனா காலத்திலும் ஏழைகளுக்கு வாழ்வாதாரமாக இருந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை பலவீனப்படுத்த மோடி அரசு அனைத்து முயற்சிகளையும் மேற் ்கொண்டது. எதிர்க்கட்சிகள் உள்பட யாரிடமும் எந்தவொரு ஆலோசனையும் நடத்தாமல் 100 நாள் வேலைத் திட்டம் சிதைக்கப்பட்டுள்ளது. 100 நாள் திட்டத்தின் அடிப்படையை மாற்றி விவசாயிகள், ஏழை மக்கள் மீது மோடி அரசு தாக்குதல் நடத்தியுள்ளது. &nbsp;அதாவது 100 நாள் வேலை உறுதித் திட்டத்தின் மீது மோடி அரசு புல்டோசர் ஏற்றித் தகர்த்துள்ளது. எங்கே யாருக்கு எவ்வளவு வேலைவாய்ப்பு கிடைக்கிறது என்பதை தில்லியில் அமர்ந்திருக்கும் அரசால் எப்படி முடிவு செய்ய முடியும்?&rdquo; என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.