தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சோனம் வாங்சுக்கை மேதாந்தா மருத்துவமனைக்கு மாற்ற தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

21 Jul 2026, 8:52 pm
சோனம் வாங்சுக்கை மேதாந்தா மருத்துவமனைக்கு  மாற்ற தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

சோனம் வாங்சுக்கை மேதாந்தா மருத்துவமனைக்கு மாற்ற தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

புதுதில்லி சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக, ஜூன் 28ஆம் தேதி முதல் தில்லி ஜந்தர் மந்தரில் கால வரையற்ற உண்ணாவிரதப் போராட் டத்தில் ஈடுபட்டு வந்தார். ஆனால் நீதி மன்ற உத்தரவைச் சாக்காகக் கொண்டு, ஜூலை 18ஆம் தேதி காலை தில்லி காவல்துறையினர் சோனம் வாங் சக்கை ஜந்தர் மந்தரிலிருந்து அப்பு றப்படுத்தி சப்தர்ஜங் அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

இதனைத் தொடர்ந்து,”எனது கண வர் விருப்பமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்; அவர் விரும் பும் மருத்துவமனைக்கு (மேதாந்தா தனி யார்) மாற்ற அனுமதிக்கப்படவில்லை” என்று சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி அங்மோ ஞாயிறன்று தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஆனால் தில்லி உயர்நீதிமன்ற நீதி பதி மினி புஷ்கர்ணா அமர்வு, இந்த விவ காரம் தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க மறுத்தது. இதனை எதிர்த்து, கீதாஞ்சலி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு செவ்வாயன்று தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபத்யாயா, நீதிபதி தேஜாஸ் காரியா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் மற்றும் ஒன்றிய அரசு வாதங்களுக்குப் பிறகு தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு,”ஒரு வயது வந்த குடிமகன் தனக்கு விருப்பமான மருத்துவமனை யைத் தேர்ந்தெடுப்பதும், மருத்துவ சிகிச்சையைப் பெறுவதும் அவரது அடிப்படை உரிமை.

அதனால் வாங் சுக்கை உடனடியாக மேதாந்தா மருத்து வமனைக்கு மாற்ற வேண்டும். சோனம் வாங்சுக்கைச் சந்திப்பதில் அவரது மனைவி கீதாஞ்சலிக்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படக் கூடாது. அவர் விரும்பும் போதெல்லாம் அவரைச் சந்திக்கலாம்” என உத்தரவிட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.