தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சோனம் வாங்சுக் போராட்டத்திற்கு ஆதரவாக இடதுசாரி அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

20 Jul 2026, 10:07 pm
சோனம் வாங்சுக் போராட்டத்திற்கு ஆதரவாக இடதுசாரி அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

சோனம் வாங்சுக் போராட்டத்திற்கு ஆதரவாக இடதுசாரி அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர், ஜூலை 20- ஒன்றிய பாஜக அரசின் கல்விக் கொள் கைக்கு எதிராக 20 நாட்கள் தொடர்ந்து உண் ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட சோனம் வாங்சுக்கிற்கு ஆதரவாகவும், ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரியும், சிஐடியு, விச, விதொச, மாதர் சங்கம், வாலிபர், மாணவர் சங்கம் ஒரு வேளை உணவை தவிர்த்து ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மூளிப்பட்டி அரண்மனை அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐ டியு மாவட்டத் தலைவர் எம்.மகாலட்சுமி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் பி.என்.தேவா, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் உமா மகேஸ்வரி, மாவட்ட பொருளாளர் ராஜேஸ்வரி, விதொச மாவட்ட பொரு ளாளர் சி.ஜோதிலட்சுமி, வாலிபர் சங்க நகர் குழு உறுப்பினர்கள் ஆன்ட்ரூ, ஜீவா ஆகி யோர் பேசினர். சிஐடியு நிர்வாகிகள் ஆர். பாலசுப்பிரமணியன், எம்.சாராள், எம்.சி. பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அருப்புக்கோட்டையில் ஒன்றிய செய லாளர் எம்.கணேசன் தலைமையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.முரு கன் துவக்கி வைத்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முத்துக்குமார், மாவட்டக் குழு உறுப்பி னர்கள் எம்.தாமஸ், எஸ்.பூங்கோதை ஆகி யோர் பேசினர். மாவட்டச் செயலாளர் ஆ. குருசாமி கண்டன உரையாற்றினார். திருச் சுழி ஒன்றியச் செயலாளர் மார்க்கண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.

சிவகங்கை

காரைக்குடி ஆரியபவன் அருகில் மாவட்டத் தலைவர் அய்யம்பாண்டி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சேதுராமன், ஜெயவீரபாண்டி யன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் சத்ய சீலன், மாவட்டச் செயலாளர் சேவுகப்பெரு மாள், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ரோகிணி, மாநில குழு உறுப்பினர் சாந்தி ராணி, தேன்மொழி, வீரமணி, பவித்ரா உள் பட பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.