‘நாயகனைத் தேட வேண்டாம்; உங்கள் வாழ்க்கைக்கு நீங்களே நாயகனாக மாறுங்கள்’ 14 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் உருக்கம்
11 Jul 2026, 8:38 pm

‘நாயகனைத் தேட வேண்டாம்; உங்கள் வாழ்க்கைக்கு நீங்களே நாயகனாக மாறுங்கள்’ 14 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் உருக்கம்

புதுதில்லி நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும், மோடி அரசின் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்யக் கோரியும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தொடர் போராட்டம் (22 நாட்க ளாக) நடத்தி வருகிறது. இந்த போராட்டத்தில் இணைந்துள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கடந்த 14 நாட்களாக (சனியன்று வரை) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

7.5 கிலோ இழப்பு

இந்த தொடர் உண்ணாவிரதத்தால் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மிக மோசமாக சோர்வடைந்துள்ளது. இதுவரை அவர் 7.5 கிலோ உடல் எடையை இழந்துள்ளார். அவரது ரத்த அழுத்தம் 106/74 (mm Hg) ஆகப் பதிவா கியுள்ளது. இருப்பினும், தனது கொள்கையில் உறுதியாக இருக்கும் சோனம் வாங்சுக், ஆதரவு தெரிவிக்கும் கட்சி, அமைப்பு மற்றும் மக்களுக்கு சமூக வலைதளங்களில் நன்றி தெரிவித்து வருகிறார். இந்நிலையில், சமூக வலைதளங்களில் தன்னை ‘21ஆம் நூற்றாண்டின் காந்தி’ என்றும், ‘ஹீரோ’ என்றும் அழைப்பவர்களுக்குத் தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,”பலர் என்னை நவீன கால காந்தி என்றோ அல்லது உண்மையான ஹீரோ என்றோ அழைக்கிறார்கள். இந்த வார்த்தைகள் எனக்கு சங்கடத்தை ஏற்படுத்து கின்றன. நான் காந்தியும் அல்ல, ஹீரோவும் அல்ல. எனது குடிமைப் பொறுப்புகளை நிறை வேற்ற முயற்சிக்கும் ஒரு சாதாரண குடி மகன் மட்டுமே. தயவுசெய்து நாயகனைத் தேடாதீர்கள். உங்களின் சொந்த வாழ்க்கைக்கு நீங்களே நாயகனாக மாறுங்கள். ஒரு குடி மகனாக உங்களின் பொறுப்புகளை நிறைவேற்றுங்கள்.

நாடாளுமன்றம் நோக்கி பேரணி

தேர்வு முறைகேடுகளால் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த விவகாரம் தொ டர்பாக மக்கள் மௌனமாக இருக்கக்கூடாது. தற்கொலை செய்து கொண்ட மாணவர்களில் ஒருவர் உங்கள் சகோதரியாகவோ அல்லது மகளாகவோ இருந்திருந்தால் நீங்கள் போராடி யிருப்பீர்கள். அதனால் அனைவரையும் ஒரே மாதிரியாக கண்டு போராடுங்கள். தற்கொலை வரை யாரும் காத்திருக்க வேண்டாம். எதிர்வரும் ஜூலை 20ஆம் தேதி, நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குகிறது. அன்றைய தினம், நாடாளுமன்றத்தை நோக்கி அமைதியான முறையில் பேரணி நடத்துவோம். போராட்டக்களத்தில் இருப்ப வர்கள் தங்களைப் போல பட்டினியாக இருக்க வேண்டியதில்லை. உணவருந்திவிட்டு வாருங்கள். ஆனால், குடிமக்களாக உங்களின் பொறுப்பை உணர்ந்து எங்களுடன் இணையுங்கள்” என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.