தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஒன்றிய கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்! தில்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார் சோனம் வாங்சுக்

28 Jun 2026, 9:55 pm
ஒன்றிய கல்வி அமைச்சர்  பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்! தில்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார் சோனம் வாங்சுக்

ஒன்றிய கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்! தில்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார் சோனம் வாங்சுக்

புதுதில்லி மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வு களில் நடந்துள்ள முறைகேடு களுக்குப் பொறுப்பேற்று, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிர தான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, பிர பல சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் ஞாயிறன்று தில்லி ஜந்தர் மந்தரில் தனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். இந்த போராட் டத்திற்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நேரடியாக ஆதரவு தெரி வித்துள்ளது.

அதே போல சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதத்தைத் தொடங்கிய போது, அவருக்கு ஆத ரவாக நூற்றுக்கணக்கான இளை ஞர்கள், மாணவர்கள் மற்றும் விவ சாயிகள் ஜந்தர் மந்தரில் திரண்ட னர். தேர்வு முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக இரண்டு நிமிட மவுன அஞ்சலி யுடன் இந்த போராட்டம் தொடங்கி யது.

காந்தி நினைவிடத்தில் அஞ்சலி

உண்ணாவிரதப் போராட் டத்தைத் தொடங்குவதற்கு முன்ன தாக, சோனம் வாங்சுக் மற்றும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே ஆகி யோர் தில்லி ராஜ்நாட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத் திற்குச் சென்று மலரஞ்சலி செலுத்தி னர். அப்போது போராட்டம் குறித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிர்வாகிகள் டெக்கான் குரோனிக் கள் செய்தியாளரிடம் அளித்த பேட்டியில்,”நீட் உள்ளிட்ட முறை கேடு என்பது ஏதோ ஒரு குறிப்பிட்ட தேர்வோடு முடிந்துவிடவில்லை. இது ஒட்டுமொத்த கல்வி முறை யின் மீதான வெளிப்படைத்தன்மை யையும், மாணவர்கள் கொண் டுள்ள நம்பிக்கையையும் முழுமை யாகச் சிதைத்துள்ளது. ஒன்றிய கல்வி அமைச்சரின் ராஜினாமா மற் றும் முறைகேடுகளுக்கு உரியத் தீர்வு கிடைக்கும் வரை இந்தப் போராட்டம் தொடரும்” என அவர் கள் அறிவித்துள்ளனர்.

வீட்டுக்காவலில் விவசாயிகள்

சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டத்தில் நாடு முழுவதி லும் உள்ள மாணவர்கள், விவசாயிகள் மற்றும் சமூக அமைப்புகள் பங்கேற்க வேண்டும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி யின் நிறுவனர் அபிஜீத் தீப்கே ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தார். 2020-2021ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற விவசாயிகள் போராட் டத்தை போல, இந்த போராட்டமும் எழுச்சி பெற்று விடுமோ? என்ற அச்சத்தில் மோடி அரசு, மத்தியப்படைகள் மூலமாக உத்தரப்பிர தேசம், ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த பல முக்கிய விவசாயத் தலைவர்களை வீட்டுக்காவலில் வைத்து, அரா ஜகத்தில் ஈடுபட்டுள்ளது. அபிஜீத் தீப்கே தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.