சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் ஒன்றிய, தில்லி பாஜக அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
15 Jul 2026, 9:08 pm
<p><strong>சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் ஒன்றிய, தில்லி பாஜக அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்</strong></p><p>தில்லி ஜந்தர் மந்தரில் 18ஆவது நாட்க ளாக உண்ணாவிரதம் இருக்கும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கின் உயிரைக் காப்பாற்ற அரசு அவசரமாகத் தலையிடக் கோரி வழக்கறிஞர் ராகேஷ் குமார் சைனி என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு தில்லி உயர்நீதிமன்றத்தில் புத னன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தனது வாதத்தில், “அரசுக்கு எதிரான போராட்டத்தை ஜன நாயக ரீதியில் முன்னெடுக்கும் ஒரு சமூக ஆர்வலர், தனது உயிரைப் பணயம் வைத்து போராடி வருகிறார். இது தேசத் திற்கே அவமானமாக முடியும். எனவே, அவரது உயிரைக் காக்க அரசு உட னடியாகத் தலையிட்டு, அவரை மருத்துவமனையில் அனுமதித்து, கட்டாய மருத்துவ சிகிச்சையாவது அளிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா, நீதிபதி தேஜஸ் காரியா ஆகியோர் அடங்கிய அமர்வு,”இந்த மனுவின் அவசரத் தன்மையைக் கருத்தில் கொண்ட நீதிமன்றம், வழக்கை ஜூலை 16க்கு மீண்டும் விசார ணைக்கு எடுத்துக்கொள்கிறது. மேலும், ஒன்றிய அரசு, தில்லி அரசின் சட்ட அதிகாரிகள் உடனடியாக இதுகுறித்து உரிய அறிவுறுத்தல்களைப் பெற்று பதி லளிக்க வேண்டும்” என உத்தர விட்டனர்.</p>
