சோனம் வாங்சுக்கு சிஐடியு, விவசாயத் தொழிலாளர் சங்கம் நேரில் ஆதரவு
14 Jul 2026, 9:16 pm

சோனம் வாங்சுக்கு சிஐடியு, விவசாயத் தொழிலாளர் சங்கம் நேரில் ஆதரவு

புதுதில்லி தில்லி ஜந்தர் மந்தரில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்குப் பொறுப் ்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கால வரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

17 நாட்களாக அவரது உண்ணாவிரதப் போராட்டம் நீடித்து வரும் நிலையில், இந்தியத் தொழிற்சங்க மையம் (சிஐடியு), அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் அகில இந்தியத் தலை வர்கள் செவ்வாயன்று நேரில் சென்று சோனம் வாங்சுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அப்போது சிஐடியு மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்க தலைவர்கள்,”சோனம் வாங்சுக்கின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்குத் தாங்கள் முழுமையான ஆதரவைத் தெரிவிக்கிறோம்.

நாட்டின் கல்வி முறையின் நம்பகத்தன்மையைச் சிதைத்து, லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ள மிகப்பெரிய முறைகேடுகளையும், நிர்வாக அலட்சியத்தையும் வன்மையாகக் கண்டிக் கிறோம்.

நீட் ஊழலுக்குப் பொறுப்பேற்பதில் இருந்து ஒன்றிய அரசு தப்பிக்க முடி யாது. இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மாண வர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சமூகத்தின் அனைத்து ஜனநாயகப் பிரிவினரும் ஒன்றிணைந்து வெளிப்படையான, சமத்துவமான கல்வி முறைக்காகப் போராட முன்வர வேண்டும்” என தலைவர்கள் அழைப்பு விடுத்தனர்.

மேலும், இந்தச் சந்திப்பின் போது தலை வர்கள், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அமைப்பின் நிறுவனர் அபிஜித் தீப்கேவை சந்தித்து உரையாற்றினர். அப்போது மாண வர்களின் உரிமைகள் மற்றும் பொதுக் கல்வி முறையின் மாண்பைக் காக்க, ஜனநாயக ரீதியிலான பரந்த அளவிலான ஒற்றுமையை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்து அவர்கள் விவாதித்தனர்.