கோரிக்கைகளை பரிசீலிக்கிறதாம் மோடி அரசு உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் வாங்சுக்
24 Jul 2026, 9:03 pm

கோரிக்கைகளை பரிசீலிக்கிறதாம் மோடி அரசு உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் வாங்சுக்

புதுதில்லி நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் ராஜினாமா மற்றும் கல்வி முறை சீர்திருத்தங்களை வலி யுறுத்தி கடந்த 26 நாள்களாக உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், கோரிக்கை கள் தொடர்பான ஒன்றிய அமைச்சர்களின் எழுத்துப்பூர்வ உறுதிமொழியை ஏற்று தனது உண்ணாவிரதத்தை அதிகாரப்பூர்வமாக முடித்துக் கொண்டுள்ளார்.

தில்லி உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ள மேதாந்தா தனியார் மருத்துவமனையில் வியா ழனன்று இரவு ஒன்றிய அமைச்சர்கள் ஜெ.பி. நட்டா, ஜிதேந்திர சிங் ஆகியோர் சோனமைச் சந்தித்தனர். கோரிக்கைகளை ஏற்ப தாக ஒன்றிய அரசு எழுத்துப்பூர்வ உத்தர வாதம் அளித்ததால், அமைச்சர்களின் முன்னிலையிலேயே சோனம் பழச்சாறு குடித்து தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். இதனையடுத்து கடந்த 26 நாள்களாக அவர் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது.

எழுத்துப்பூர்வ உத்தரவாதம்

ஒன்றிய அமைச்சர்கள் எழுத்துப்பூர்வமாக அளித்த உத்தரவாதத்தில், “ஜூலை 20 ஆம் தேதி தில்லி ஜந்தர் மந்தரில் அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாண வர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப் படும். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப் படாது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான தீர்வுகளுக்கு நாடாளுமன்றத்தில் விரிவான விவாதங்களை நடத்த அரசு ஏற்கெனவே உறுதியளித்துள்ளது. சமீபத்திய நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரங்களால் தற் கொலை செய்துகொண்டவர்களின் குடும்பத் தினருக்கு தகுந்த இழப்பீடு வழங்குவது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தர்மேந்திர பிரதான் ராஜினாமா குறித்து எவ்வித தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.