நீட், சிபிஎஸ்இ தேர்வு மோசடிளுக்கு பொறுப்பேற்க மறுத்துப் பிடிவாதம் வாங்சுக் வலுக்கட்டாயக் கைது; மோடி அரசு அராஜகம்!
18 Jul 2026, 9:44 pm

நீட், சிபிஎஸ்இ தேர்வு மோசடிளுக்கு பொறுப்பேற்க மறுத்துப் பிடிவாதம் வாங்சுக் வலுக்கட்டாயக் கைது; மோடி அரசு அராஜகம்!

புதுதில்லி, ஜூலை 17- நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதி ராக 21 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த கல்வி மற்றும் சூழலியல் ஆர்வலர் சோனம் வாங் சுக்கை, ஒன்றிய பாஜக அரசு சனிக் கிழமையன்று வலுக்கட்டாயமாக கைது செய்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. ஆனால், தமது நிலைபாட்டில் உறு தியாக இருக்கும் சோனம் வாங்சுக், மருத்துவமனையிலும் உண்ணாவிர தத்தைத் தொடர்ந்து வருகிறார். ஜூலை 20 - நாடாளுமன்றம் நோக் கிய பேரணியில், சோனம் வாங்சுக் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டால், சோனம் வாங்சு இடத்தில் தான் முன் னின்று அந்தப் போராட்டத்தை வழி நடத்துவேன் என்று வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி அறிவித்துள்ளார். மறுபுறத்தில், கைது - அடக்குமுறை களால், தங்களை அச்சுறுத்த முடி யாது என்று அறிவித்துள்ள கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபி ஜித் திப்கே, மாணவர்களுடன் இணைந்து, சோனம் வாங்சுக் நடத்திய காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடர்வதாகவும், ஜூலை 20 நாடாளு மன்றம் நோக்கிய பேரணி திட்டமிட்ட படி நடைபெறும் என்றும் அறிவித் துள்ளார்.

எதிர்காலத்தை சிதறடிப்பதா?

நீட் தேர்வு வினாத்தாள் முறைகேடு, கியூட், சிபிஎஸ்இ தேர்வுகள் குளறுபடி களுக்குப் பொறுப்பேற்று ஒன்றி கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்; 7 கோடி மாணவர் களின் எதிர்காலத்தை கேள்விக்குறி யாக்கும் தேசிய தேர்வுகள் முகமை (NTA) கலைக்கப்பட வேண்டும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (Cockroach Janata Party) கோரிக்கை விடுத்து வந்தது. இந்தக் கோரிக்கை களுக்காக, அந்தக் கட்சியின் ஒருங்கி ணைப்பாளர் அபிஜித் தீப்கே தலை மையில், நாடாளுமன்றம் அமைந் துள்ள தில்லி ஜந்தர் மந்தர் வீதியில் கடந்த ஜூன் 20 அன்று தொடர் போராட் டமும் துவங்கியது.

வாங்சுக் உண்ணாவிரதம்

இந்நிலையில், புகழ்பெற்ற கல்வி மற்றும் சூழலியல் செயற்பாட்டா ளர் சோனம் வாங்சுக், மாணவர்கள் - இளைஞர்களின் இந்தப் போராட் டத்திற்கு, நேரில் சென்று ஆதரவு தெரி வித்துடன், இளைஞர்களின் கோரிக் கைகளுக்காக, ஜூன் 28 அன்று கால வரையற்ற உண்ணாநிலைப் போராட் டத்தைத் துவங்கினார். அவரது இந்தப் போராட்டம், சர்வ தேச அளவில் கவனத்தை ஈர்த்தது. சோனம் வாங்சுக் மற்றும் சிஜேபி போராட்டத்திற்கு, நாளுக்கு நாள் மாணவர்கள், இளைஞர்கள் ஆதரவு பெருகியது. அவர்கள் ஆயிரக்கணக் கில் ஜந்தர் மந்தரில் திரண்டனர்.

20 நாட்களைக் கடந்தது

இடதுசாரிகள், காங்கிரஸ், திமுக, சிவசேனா, ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ் என நாட்டின் முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர் களும் சோனம் வாங்சுக் போராட்டத் திற்கு ஆதரவு தெரிவித்து, அவரை உண்ணாவிரதப் பந்தலுக்கே சென்று சந்தித்தனர். இப்போராட்டம், 20 நாட்களைக் கடந்த நிலையில், வாங்சுக் உடல்நிலை மோசமடைந்தது. எனினும், மனந்தள ராத அவர், மாணவர்களின் கோரிக்கை களுக்காக ஜூலை 20 அன்று அறி விக்கப்பட்டுள்ள ‘நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணியில் பங்கேற்று மனு அளிக்கும் நிகழ்வில்’ தான் அவசியம் பங்கேற்பேன் என்றும், “அதற்கு முன் என் உயிர் பிரியாது” என்றும் உருக்க மாக பேசியிருந்தார். 20 கிலோ வரை எடைகுறைந்து பலவீனமான நிலை யிலிருந்த சோனம் வாங்சுக்கின் புகைப் படங்களும் வெளியாகின.

பெருகிய ஆதரவு

வாங்சுக்கின் போராட்டத்திற்கு ஆதரவாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜூலை 20 அன்று நாடு தழு விய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. சிஐடியு, அகில இந்திய விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழி லாளர் சங்கம், அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட அமைப்புக்களும் ஒரு வேளை உணவுப் புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்களை அறிவித் தன. ஜூலை 20 - நாடாளுமன்றத்தை நோக்கியப் பேரணியிலும் பல்லாயி ரக்கணக்கில் பங்கேற்கப் போவதாக அறிவித்தன.

மோடி அரசு கலக்கம்

இதனால், ஒன்றிய பாஜக அரசு கலக்கம் அடைந்தது. போராட்டத்தைத் தடுக்கும் முயற்சிகளில் இறங்கியது. அதனொரு பகுதியாக, 21-ஆவது நாளாக உண்ணாவிரதத்தைத் தொடர்ந்த சோனம் வாங்சுக்கை, சனிக் கிழமையன்று காலை, சீருடை அணி யாத காவல்துறையினர் மூலம் மோடி அரசு வலுக்கட்டாயமாக கைது செய்து, சப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. வாங்சுக்கை அவ ரது தனிப்பட்ட வழக்கறிஞர்கள் மற்றும் மருத்துவர்கள் சந்திப்பதற்குக் கூட அனுமதிக்கவில்லை.

திப்கே எச்சரிக்கை

இந்த நடவடிக்கை, போராட்டக் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தினா லும், வாங்சுக் கைது செய்யப்பட்ட உட னேயே, அவரது காலவரையற்ற உண் ணாவிரதப் போராட்டத்தை தொடர்வ தாக சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே அறிவித்தார். “சோனம்ஜியை வெளியே தூக்கிச் செல்லும் ஆர்.எஸ்.எஸ் குண்டர்களின் இந்த அட்டூழி யம்... இது போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் என்று அவர்கள் நினைத்தால், அது நடக்காது. நாங்கள் இங்கேயே இருப்போம். ஜூலை 20 அன்று இங்கிருந்தே நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி செல்வோம், இந்த வகையான சர்வாதி காரத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற செய்தியை நாம் கொண்டு சேர்ப்போம்” என்றும் அறைகூவல் விடுத்தார். “இதுவரை, நீட் தேர்வால் உயிரிழந்த குழந்தை களுக்காக நாங்கள் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவைக் கோரி வந்தோம். ஆனால், இன்று வெளிப்பட்ட இழிவான நடத்தைக்குப் பிறகு, நாங்கள் இனி நரேந்திர மோடியின் ராஜினாமா வைக் கோருவோம்” என்றும் திப்கே கூறினார்.

பிருந்தா காரத் ஆதரவு

போராட்டக்களத்திற்கு சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத், அபிஜித் திப்கேவைச் சந்தித்து ஆதரவு தெரி வித்தார். மேலும், “சோனம் வாங்சுக்கிற்கு நடந்த சம்பவம், ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு விழு மியங்களை புல்டோசர் கொண்டு தகர்க்கும் செயலாகும்,” என்றும்; “இது உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் செய்யப்படுகிறது,” என்றும் குற்றம் சாட்டினார். தில்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவு பேரி லேயே இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக தில்லி காவல்துறை கூறியிருந்ததற்கு, சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஜே ஆங்மோ தனது கடுமையான பதிலடியைக் கொடுத்தார். “மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிடவில்லை. உடல் நிலை சீரான இடைவெளியில் கண்காணிக்கப்பட வேண்டும் என்று மட்டுமே கூறியது” என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், “வாங்சுக்கால் ஜூலை 20 பேரணியில் கலந்துகொள்ள முடியாது போனால், அவர் சார்பாக நான் அந்தப் பேரணியை வழி நடத்துவேன்” என்றும் அறிவித்தார்.

தொடரும் போராட்டம்

மேலும், “என்னிடமும், குடும்பத்தினரிடமும், கடந்த 20 நாட்களாக அவரது உடல்நிலையைக் கண்காணித்து வரும் மருத்துவர்களிடமும் அனு மதி பெறாமல், வாங்சுக்கிற்கு வாய்வழியாகவோ அல்லது நரம்பு வழியாகவோ எதுவும் கொடுக்கக் கூடாது” என்றும் எச்சரித்தார். அதற்கேற்ப வாங்சுக்கும் நரம்பு வழியா கவோ, வாய்வழியாகவோ எந்த மருந்தையும் உட்கொள்ள மறுத்து சப்தர்ஜங் மருத்துவமனை யிலும் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்.

எதிர்க்கட்சிகள் கண்டனம்

இதனிடையே, வாங்சுக்கின் கைதுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. “வாங்சுக் வலுக்கட்டாய கைது. ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் மீதான ஒரு கரும் புள்ளி” என்று காங்கிரஸ் தலைவர் கார்கே, கண்ட னம் தெரிவித்துள்ளார். “

சோனம் வாங்சுக், அபிஜித் திப்கே மற்றும் பிறர் மீதான தடுப்புக்காவல், மாறுபட்ட கருத்துக் களைக் கூறுவதற்கான அரசியலமைப்பு உரிமை மீதான தாக்குதல் ஆகும். அவர்கள் உடனடியாக வும் நிபந்தனையின்றியும் விடுவிக்கப்பட வேண்டும்,” என்று கேரள முன்னாள் முதல்வர் பின ராயி விஜயன் கூறினார். “வாங்சுக் கைது செய்யப்பட்டது, இந்திய வர லாற்றின் வெட்கக்கேடான செயல்களில் ஒன்றா கும்” என்று சமூக செயற்பாட்டாளர் யோகேந்திர யாதவ் சாடியுள்ளார்.

“வாங்சுக் பேச்சுவார்த் தையை மட்டுமே கோரினார், ஆனால் அவரது வேண்டுகோளுக்கு வாரக்கணக்கில் மவுனமே பதி லாகப் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு ஜனநாயகத்தில், அமைதியான எதிர்ப்பு என்பது மவுனத்தை அல்ல, கலந்துரையாடலையே சார்ந்திருக்க வேண்டும்” என்று திரிணாமுல் காங்கிரஸ் தலை வர் மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார். “மோடி அரசின் அடிப்படைக் கொள்கைகள் அசத்யாவும் ஹிம்சாவுமே ஆகும்” என்று காங்கி ரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

வாங்சுக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பெற்றோர்களும் மாணவர்களும் இணைய வேண்டும் என்று ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரி வால் வேண்டுகோள் விடுத்துள்ளார். . எங்கெல்லாம் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாடு உள்ளதோ, அங்கெல்லாம் எதிர்வினையாற்றி, இயக்கங்களை பாஜக கலைக்கிறது.

ஆனால், இன்றைய இளைய தலைமுறை ‘டிஜிட்டல் ஒற்றுமை’ மூலம் ஒரு சித்தாந்தப் புரட்சியைக் கொண்டுவர வல்லது என்பதை பாஜக மறந்துவிட்டது. அது நிகழ்ந்து உள்ளது, நிகழ்ந்து கொண்டிருக்கிறது, மீண்டும் நிகழும்...” என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் குறிப்பிட்டுள்ளார். அமைதிவழிப் போராட்டங்கள் சகித்துக் கொள்ளப்படாத ஒரு நாட்டில், ஜனநாயகம் பல வந்தமாக நொறுக்கப்படுவதை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது சிவசேனா (யுபிடி) தலைவர் ஆதித்ய கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிபிஎம் கடும் கண்டனம்

ஜந்தர் மந்தரில் இருந்து சோனம் வாங்சுக் மற்றும் அபிஜீத் திப்கே ஆகியோரை தில்லி காவல்துறை யினர் வலுக்கட்டாயமாகத் தடுப்புக் காவலில் வைத்ததற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. “லட்சக்கணக்கான மாணவர் களின் எதிர்காலத்தைப் பாதித்துள்ள தேர்வுத்தாள் கசிவு ஊழலுக்குப் கார ணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும், ஒன்றிய கல்வி அமைச் சரைப் பொறுப்பேற்க வைப்பதற்கும் பதிலாக, மோடி அரசு அமைதியான ஜனநாயகப் போராட்டத்தை ஒடுக்கு கிறது. இந்த எதேச்சதிகார செயல், அரசு அதன் தவறுக்கு பொறுப்பேற்க மறுக்கும் போக்கையே சுட்டிக்காட்டு கிறது. இந்த நடவடிக்கைக்குச் சற்று முன்பு தில்லி காவல்துறை ஆணை யர் திடீரெனப் பதவி நீக்கம் செய்யப் பட்டுள்ளார். இந்த நடவடிவக்கை காவல்துறையை அரசியல் ரீதியாகத் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்துக் கடுமையான கேள்வி களை எழுப்புகிறது” என்று, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள் ளது.