சோனம் வாங்சுக் கைதுக்கு வலுக்கும் கண்டனம் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சரின் உருவபொம்மை எரித்து கர்நாடகாவில் மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம்
19 Jul 2026, 9:19 pm

சோனம் வாங்சுக் கைதுக்கு வலுக்கும் கண்டனம் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சரின் உருவபொம்மை எரித்து கர்நாடகாவில் மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம்

பெங்களூரு சமூக ஆர்வலர் சோனம் வாங் சுக் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், நீட் தேர்வு முறை கேடுகள் தொடர்பாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும், கர்நாடக மாநி லம் கல்புர்கியில் உள்ள திம்மாபுரி யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஞாயிறன்று போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் ஒன்றிய அரசின் “மதவாத மற்றும் பாசிச அடா வடியைக்” கண்டிக்கும் விதமாக, பிர தமர் மோடி மற்றும் அமைச்சர் தர் மேந்திர பிரதான் ஆகியோரின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. மேலும் ஒன்றிய அரசின் செயல்களைக் கண் டிக்கும் வகையில், மண்ணால் செய் யப்பட்ட பானையை உடைத்தும் போராட்டத்தில் பங்கேற்பாளர்கள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

போராட்டத்தின் போது செய்தி யாளரிடம் பேசிய சிபிஎம் மாவட்டச் செயலாளர் கே.நீலா,”நீட் வினாத் தாள் கசிவு விவகாரத்தில் கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி உண்ணாவிரதம் இருந்த சோனம் வாங்சுக்கை தில்லி காவல்துறை வலுக்கட்டாயமாக அகற்றியது ஜன நாயக உரிமைகள் மீதான தாக்குதலா கும். இந்த விவகாரம் தொடர்பாக தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டக்கா ரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒன்றிய அரசு மறுப்பது கண்டிக்கத் தக்கது. தேசிய கல்விக்கொள்கை (NEP 2020) மூலம் கல்வியை மத்திய மயமாக்குவதும், வணிகமயமாக்கு வதுமே தேர்வு முறைகேடுகளுக்குக் காரணம். நேர்மையான மற்றும் வெளிப்படையான தேர்வுகளை நடத்தத் தவறிய தேசிய தேர்வு முக மையை கலைக்க வேண்டும். தேசிய கல்விக்கொள்கையை ரத்து செய்ய வேண்டும்” என அவர் வலியுறுத்தி னார். இந்த போராட்டத்தில் சிபிஎம் ஊழியர்கள், மாணவர்கள், இளை ஞர்கள் என பலர் கலந்து கொண்ட னர்.