சோனம் வாங்சுக் கைது: மாணவர், வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்
18 Jul 2026, 10:15 pm
<p><strong>சோனம் வாங்சுக் கைது: மாணவர், வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்</strong></p><p>கோவை, ஜூலை 18– மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி, தில்லியில் அற வழியில் போராடிய கல்வியாளர் சோனம் வாங்சுக்கை அராஜக மான முறையில் கைது செய்ததை கண்டித்தும், கோவையில் இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை ரயில் நிலையம் முன்பு சனியன்று நடைபெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, இந் திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கு.பாவெல் தலைமை வகித்தார். இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் டி.தினேஷ் ராஜா ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்திய ஜனநா யக வாலிபர் சங்க மாவட்ட நிர்வாகி கள் சக்திவேல், பிரவீன் மற்றும் இந்திய மாணவர் சங்க மாவட்ட நிர்வாகிகள் பிரசாந்த், பிஸ்மில்லா கான் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.</p>
