சோமையம்பாளையம் ஏரி புனரமைப்புப் பணிகள் நிறைவு
2 Oct 2026, 1:02 am

சோமையம்பாளையம் ஏரி புனரமைப்புப் பணிகள் நிறைவு

கோவை, அக்.1–பாரம்பரிய நீர் மேலாண்மையை மீட்டெடுக்கும் வகையில், கோவையின் பழமையான சோமையம்பாளையம் ஏரியை புனரமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டது.

நீர் மேலாண்மையில் நீண்ட வரலாற்று பின்னணி கொண்ட கோவையில், கொங்கு சோழர் காலத்தில் நொய்யல் ஆற்றைச் சுற்றி ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட நீர்நிலை கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. பாசனம்,நிலத்தடி நீர் செறிவூட்டல் மற்றும் வெள்ள கட்டுப்பாட்டிற்கு பயன்பட்டு வந்த இந்த கட்டமைப்பின் ஒரு பகுதியாக சோமையம்பாளையம் பகுதியில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவிலான ஏரி அமைந்துள்ளது. காலப்போக்கில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள், கட்டிட இடிபாடுகள் மற்றும் கழிவுநீர் கலப்புகாரணமாகவும், நீர்வரத்துப் பாதைகள் தூர்ந்து போனதாலும் இந்த ஏரி பயன்பாடின்றி முடங்கியது.

இந்நிலையில், சோமையம்பாளையம் ஏரியை மீட்டெடுக்கும் முயற்சியாக வாட்டர்டெக் இந்தியா நிறுவனத்தின் நிதி பங்களிப்புடன், ‘கம்யூனிட்ரீ’அமைப்பு மற்றும் உள்ளூர் பொதுமக்களின் ஒருங்கிணைப்பில் தீவிர புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஏரிக்குள் தேங்கிக் கிடந்த கழிவுகள் முற்றிலுமாக அகற்றப்பட்டு, ஆழப்படுத்தப்பட்டதுடன், நீர்வரத்து மற்றும் நீரோட்டப் பாதைகளும் தூர்வாரி சீரமைக்கப்பட்டன. இதன்மூலம் மழைநீரை முழுமையாக சேமிக்கும் நிலைக்குஏரி புத்துயிர் பெற்றுள்ளது.

புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, ஏரியை மக்கள் பயன்பாட்டிற்காக கோவை மாவட்ட உதவி ஆட்சியர் துஷார் சிங் திறந்துவைத்தார். இந்நிகழ்வில் வாட்டர்டெக் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சலில் நாகேஷ் தலால், தலைமைமனிதவள அதிகாரி லியோனல் பால் டேவிட், கம்யூனிட்ரீ அமைப்பின் நிறுவனர் ஹபீஸ் கான் மற்றும் தொழில் பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தின் இணை இயக்குநர் சரவணன் உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர். இந்த ஏரி புனரமைக்கப்பட்டதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், கோவையின் பாரம்பரிய நீர் மேலாண்மை பொக்கிஷம் பாதுகாக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.