முந்தய பக்கம்

திமுக ஆட்சியில் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு!

10 Apr 2026, 5:30 am
திமுக ஆட்சியில் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு!

திமுக ஆட்சியில் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு!

தருமபுரி, ஏப். 9- திமுக ஆட்சியில் தான், பெண்களாகும் மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டது என, அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜி.கே.மணிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

இதையொட்டி, வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் செயற்குழு கூட்டம் பி.அக்ரஹாரம் பகுதியில் வியாழனன்று நடைபெற்றது. தருமபுரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் ஆ.மணி எம்.பி. தலைமை வகித்தார்.

இதில் அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், திமுக ஆட்சியில் தான் பெண்களுக்கான மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், தமிழ்நாட்டிற்கு வழங்கக்கூடிய நிதியை ஒன்றிய அரசு தடுத்து வருகிறது. தருமபுரி மாவட்ட வளர்ச்சிக்கு இடையூறாக உள்ள பாப்பாரப்பட்டி மற்றும் பாலக்கோடு ரயில்வே மேம்பாலப் பணிகளை திமுக அரசு விரைந்து முடிக்கும். எனவே தருமபுரிக்கு நல்ல திட்டங்கள் கிடைக்க உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram