திருப்பூரில் ரூ.6.49 கோடியில் திடக்கழிவு மேலாண்மைப் பூங்கா திறப்பு
4 Mar 2026, 5:01 pm
<p><strong>திருப்பூரில் ரூ.6.49 கோடியில் திடக்கழிவு மேலாண்மைப் பூங்கா திறப்பு</strong></p>
<p>திருப்பூர், மார்ச் 4– திருப்பூர் மாநகரில் தீராத தலைவ லியாக இருக்கும் குப்பைப் பிரச்ச னைக்கு தீர்வு காணும் வகையில் அறிவியல் முறையில் செயல்படும் திடக்கழிவு மேலாண்மைப் பூங்கா ரூ.6 கோடியே 49 லட்சம் மதிப்பீட்டில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகரம் நெருப்பெ ரிச்சல் அருகே கல்லாங்குத்து பகுதி யில் இந்த திடக்கழிவு மேலாண்மைப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு குப்பையை தரம் பிரித்து அகற்றும் ட்ரோமல் இயந்திரம் நிறு வப்பட்டுள்ளது. இதை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு. பெ.சாமிநாதன், மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் ஆகியோர் செவ்வாயன்று தொடக்கி வைத்த னர். இவ்விழாவுக்கு மாவட்ட ஆட்சி யர் மனிஷ் நாரணவரே தலைமை ஏற் றார். மேயர் தினேஷ்குமார் முன் னிலை வகித்தார். தேவை மக்கள் ஒத்துழைப்பு திருப்பூர் மாநகராட்சியில் நீண்ட நாட்களாக குப்பைத் பிரச்சனை இருக்கிறது. அதற்கு ஒவ்வொரு பகு தியாக தீர்வு ஏற்படக்கூடிய வகை யில் பணி துவக்கி வைக்கப்பட்டிருக் கிறுது. நவீன முறையில், புதிய யுத்தி களை பயன்படுத்தி இந்த திட்டம் துவங்கப்பட்டிருக்கிறது. புதிதாக இயந்திரங்கள் மாநகராட்சியின் சார்பில் பொருத்தப்பட்டிருக்கிறது. அதே போல, இதற்கு ஏறத்தாழ சுமார் ரூ.6.49 கோடி மதிப்பில் நிரந் தரக் கட்டிடம் அமைக்கப்பட உள் ளது. இந்த குப்பைத் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்கிற அடிப்படையில் மேயர் தினேஷ்கு மார் முயற்சி மேற்கொண்டிருக்கி றார். இதற்கு மக்களுடைய பங்க ளிப்பு தேவைப்படுகிறது. மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து, மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் வரும்பொழுது நம் குப்பை, அது நம் பொறுப்பு என்ற உணர்வோடு மக்கள் அனைவரும் குப்பையைப் பிரித்து வழங்கி ஒத்து ழைப்புத் தர வேண்டும். இங்கே ஒருபுறம் திடக்கழிவு மேலாண்மை அமைத்தாலும், அவர வர் இல்லங்களிலே செய்ய வேண் டிய பணியை செய்தால், இந்த மாநகராட்சி நிச்சயமாக தூய்மை யாகும் என அமைச்சர் சாமிநாதன் கூறினார். ரூ.2500 கோடியில் வளர்ச்சிப் பணிகள் இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு ஏறத்தாழ ரூ.2500 கோடிக்கு மேலே மாநகராட்சிப் பகுதியிலே பணிகள் நடைபெற்றிருக்கிறது. அமர்ஜோதி கார்டன் பகுதியில் ரூ.4.81 கோடியே மதிப்பீட்டில் பல்நோக்கு விளை யாட்டு அரங்கம் துவங்கப்பட இருக் கிறது. தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 85.05 கிலோமீட்டர் தொலைவிற்கு ரூ.51.18 கோடி மதிப் பீட்டில் 752 சாலைப்பணிகள் மற்றும் இரண்டாம் கட்டமாக 7.64 கிலோ மீட் டர் நிலத்திற்கு ரூ.5.01 கோடி மதிப் பீட்டில் 56 சாலைப்பணிகள், வார்டு எண் 25, கல்லாங்குத்து பகுதியில் ஆனந்தா அவன்யூ முதல் சோளி பாளையம் சாலை வரை ஆர்.சி.சி மழைநீர் வடிகால் கால்வாய் அமைக் கும் பணி ரூ.3.73 கோடி மதிப்பீட்டி லும், 15 ஆவது நிதிக்குழு மானிய திட் டத்தின் கீழ் 2.21 கிலோமீட்டர் நீளத் திற்கு ரூ. 2.03 கோடி மதிப்பீட்டில் 17 சாலைப்பணிகள், ஆகியவற்றை செய் தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநா தன், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வ ராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர். மேலும் வாவிபாளையம் பகுதியில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட் டுள்ள நவீன எரிவாயு தகன மேடை யினை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மண்டலத்த லைவர்கள் உமா மகேஸ்வரி (1-ஆம் மண்டலம்), கோவிந்தராஜ் (2-ஆம் மண்டலம்), தலைமைப் பொறியா ளர் முகமது சபியுல்லா, செயற்பொறி யாளர் அலாவூதீன், உதவி செயற் பொறியாளர் ஹரி, மாநகர நல அலு வலர் முருகநாதன், மாமன்ற உறுப்பி னர்கள் மற்றும் துறை சார் அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.</p>
