தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் உச்சநீதிமன்றத்தில் அடாவடி! டி.எம்.கிருஷ்ணாவிற்கு எதிரான ‘நக்சலைட்’ கருத்துக்கு மனித உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம் கடும் கண்டனம்

24 Sept 2026, 9:13 pm
ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் உச்சநீதிமன்றத்தில் அடாவடி! டி.எம்.கிருஷ்ணாவிற்கு எதிரான ‘நக்சலைட்’ கருத்துக்கு மனித உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம் கடும் கண்டனம்

ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் உச்சநீதிமன்றத்தில் அடாவடி! டி.எம்.கிருஷ்ணாவிற்கு எதிரான ‘நக்சலைட்’ கருத்துக்கு மனித உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம் கடும் கண்டனம்

புதுதில்லிதேசியப் பாடலான வந்தேமாதரத்தின் 6 சரணங்களையும் பாடுவதைக் கட்டாயமாக்கும் தண்டனைச் சட்டத்தை எதிர்த்துக் கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா தாக்கல் செய்தமனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், பாடலை முழுமையாகப் பாடாதவர்கள் மீது குற்றவியல் வழக்கு தொடுக்கக் கூடாதுஎனச் செவ்வாயன்று உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்குவிசாரணையின் போது, ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார்மேத்தா டி.எம்.கிருஷ்ணாவிற்கு எதிராகத் தெரிவித்த ‘நக்சலைட்’ கருத்துக்கு மனித உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம் (PUCL) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக மனித உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “டி.எம்.கிருஷ்ணாவிற்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.முரளிதர், இந்தச் சட்டத்திருத்தம் அவசர அவசரமாகியும், போதிய ஆலோசனைகள் இன்றியும் நிறைவேற்றப்பட்டது என உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டார்.

இந்த வாதத்திற்குப் பதிலளித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘சட்டம் இயற்றுவது அரசியலமைப்பின்படி நடக்கும்; சட்டம் இயற்றுவது நக்சலைட்டுகளின் எண்ணப்படி இருக்க முடியாது’ என்று கூறினார்.வழக்கறிஞர் முரளிதர் இந்த வார்த்தைப் பிரயோகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதைத் திரும்பப் பெற வேண்டும்எனக் கோரினார். இருப்பினும், சொலிசிட்டர் ஜெனரல் அந்தக் கருத்தைத் திரும்பப் பெற மறுத்துவிட்டார்.ஆனாலும் உச்சநீதிமன்ற நீதிபதி ஜோய்மால்யா பாக்சி, ‘ஒருவரை நீங்கள் நக்சலைட் என்று முத்திரை குத்தினாலும்கூட, அவர் தனது அரசியலமைப்பு உரிமைகளை இழந்துவிட மாட்டார்’ என்று பதிலடி கொடுத்தார்.

ஒன்றிய அரசின் உயரிய சட்ட அதிகாரியான சொலிசிட்டரின் இத்தகைய வாதங்கள் ஒரு அரசு வழக்கறிஞருக்குச் சிறிதும் அழகல்ல; இதுவாதங்களின் தரத்தையும், இந்நாட்டின் உயர்ந்த நீதிமன்றத்தின் கண்ணியத்தையும் குறைக்கிறது. அதனால், நீதிமன்றக் கண்ணியத்தைப் பேண வேண்டும். அரசியல் முத்திரைகளைக் குத்துவதையோ, பெயர் சொல்லி அசிங்கப்படுத்துவதையோ விடுத்து அரசியலமைப்பு விதிகளின் அடிப்படையில் வாதங்களை வைக்க வேண்டும் என மனித உரிமைகளுக்கான மக்கள்ஒன்றியம் கோருகிறது.

மேலும், மாற்றுக் கருத்துகள், விமர்சனங்கள் அல்லது சட்டப் போராட்டங்கள் எதுவாக இருந்தாலும், அரசின் நிலையை எதிர்க்கும் அல்லது விமர்சிக்கும் கருத்துகளை ‘நக்சலைட்’என்று விவரிப்பது ஒன்றிய அரசின் வாடிக்கையான வாதமாக மாறிவிட்டது. இந்தியாவின் அடிப்படைசித்தாந்தத்தில் இவ்வளவு ஆழமான நம்பிக்கை கொண்ட ஒருவரை நக்சலைட் என முத்திரை குத்துவது,அரசியலமைப்பு வழங்கும் பேச்சுரிமையை அச்சுறுத்தவும் மௌனமாக்கவும் செய்யப்படும் முயற்சியைத் தவிர வேறில்லை” எனப்புகழ்பெற்ற அந்த அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.