பள்ளத்தில் விழுந்த நபரை மீட்ட ராணுவ வீரர்கள்
20 Mar 2026, 2:55 pm
<p><strong>பள்ளத்தில் விழுந்த நபரை மீட்ட ராணுவ வீரர்கள்</strong></p>
<p>உதகை, மார்ச் 20- கூடலூர் அருகேயுள்ள ஊசிமலை பள்ளத்தாக்கு பகுதி யில் தவறி விழுந்த நபரை ராணுவ வீரர்கள், வனத்துறை யினர் உயிருடன் மீட்டனர். நீலகிரி மாவட்டம், உதகை - கூடலூர் தேசிய நெடுஞ் சாலை பகுதியில் சுற்றுலாத் தலமான ஊசிமலை பள்ளத் தாக்கு பகுதி உள்ளது. இங்கு செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த சிவகுருநாதன் (35) என்பவர் வியாழனன்று சுற் றுலா வந்துள்ளார். அப்போது, அவர் பள்ளத்தாக்கு பகுதி யில் நின்று தற்படம் (செல்பி) எடுக்க முயன்றபோது, தவறி 150 அடி செங்குத்தான பள்ளத்தில் விழுந்துள்ளார். இதைப் பார்த்த சக சுற்றுலாப் பயணிகள் தீயணைப்பு, காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத் துக்கு தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், இரவு நேரமானதால் தேடும் பணியை காலை தொடரலாம் என திரும்பிச் சென்றனர். இத்தகவலறிந்த நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, மாவட்ட நிர்வாகம் மற்றும் குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமிலுள்ள ராணுவ உயர் அதிகாரிகளிடம் பேசினார். இதையடுத்து ராணுவ வீரர்கள் உதவியுடன் தீயணைப்பு மற்றும் வனத்துறை யினர் பள்ளத்தில் விழுந்த நபரை மீட்டனர். முன்னதாக, 150 அடி செங்குத்தான பள்ளத்தில் மேஜர் கவிதா தலைமையிலான குழுவினர் இறங்கி, பள்ளத்தில் கிடந்த இளைஞருக்கு முதலுதவி சிகிச்சையளித்து உயிருடன் மீட்டனர். இதனையடுத்து இந்த ராணுவ குழுவினருக்கு அப்பகுதியினர் வாழ்த்து தெரிவித்தனர்.</p>
