தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

15 Feb 2026, 3:03 pm
சென்னை விரைவு செய்திகள்

தந்தையின் ஈமச்சடங்கிற்கு  வந்த ராணுவ வீரர் உயிரிழப்பு

விழுப்புரம், பிப். 15-  விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே, தந்தையின் ஈமச்சடங்கில் பங்கேற்க வந்த ராணுவ வீரர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வானூர் வட்டம் பேராவூர் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூனன் (44), இந்திய ராணுவ வீரராகப் பணியாற்றி வந்தார். இவரது தந்தை கிருஷ்ணன் சில நாட்களுக்கு முன் காலமானார். அவரது ஈமச்சடங்கு காரியங்களுக்காக அர்ஜூனன் ஒரு மாத விடுப்பில் ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை, பிப். 14) அதிகாலை 2:45 மணியளவில் திடீரென அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரைத் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து அர்ஜூனனின் மனைவி தமிழ்ச்செல்வி அளித்த புகாரின் பேரில், கிளியனூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூரில் மயான கொள்ளை திருவிழா:  500 காவலர்கள் பாதுகாப்பு

வேலூர், பிப். 16- வேலூர் மாநகரில் திங்களன்று (பிப்.16)  நடைபெறும் மயான கொள்ளை திரு விழாவை முன்னிட்டு, 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடு படுத்தப்பட்டுள்ளனர்.  சைதாப்பேட்டை, தோட்டப்பாளையம், சத்துவாச்சாரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து  அலங்கரிக்கப்பட்ட அங்காள பரமேஸ்வரி அம்மன் தேர்கள் ஊர்வலமாகச் சென்று பாலாற்றங்கரை மயானத்தை அடைய உள்ளன. இதையொட்டி, புதிய பேருந்து  நிலையப் பகுதியில் நிலத்தைச் சமன் படுத்தும் பணிகள் மற்றும் அம்மன் சிலை  வடிவமைப்புப் பணிகள் முடிக்கப் பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன் ஞாயி றன்று (பிப்,15)  நேரில் ஆய்வு செய்தார். விழா வையொட்டி புதிய பாலாற்று பாலம் போக்கு வரத்திற்குத் தடை செய்யப்பட்டு, பழைய பாலம் ஒருவழிப் பாதையாக மாற்றப் பட்டுள்ளது. ஆந்திரா மற்றும் காட்பாடி மார்க்கமாக வரும் வாகனங்கள் பழைய பைபாஸ் சாலை வழியாகத் திருப்பி விடப் பட்டுள்ளன. சட்டவிரோத செயல்களைத் தவிர்க்கவும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும் விழா ஏற்பாட்டாளர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட் டுள்ளன.

சமையல் மற்றும் சோப்பு தயாரிப்புப் பயிற்சி

சென்னை, பிப். 15- தமிழ்நாடு வேளாண் மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம் சார்பில், எளிதாகச் சமைக்கக்கூடிய உணவுப் பொருட்கள் மற்றும் சோப்பு தயாரித்தல் குறித்த சிறப்புப் பயிற்சிகள் நடைபெற வுள்ளன. இது தொடர்பாக வெளி யிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்ப ட்டுள்ளதாவது: வரும் வியா ழக்கிழமை (பிப். 19) அன்று சமையல் பயிற்சி நடைபெறுகிறது. இதில் ரவா இட்லி மிக்ஸ், அடை, வடை  மற்றும் பாயசம் ஆகிய வற்றை  உடனடியாகச் சமை ப்பதற்கான வழிமுறைகள் குறித்துப் பயிற்சி அளிக்க ப்படும். மேலும், இந்திய வகை அசைவக் குழம்பு களுக்கான மணமூட்டும் மசாலா பொடிகள் தயாரிப் பது குறித்தும் விளக்கப் ப்படும். இதனைத் தொடர்ந்து, வரும் வெள்ளிக்கிழமை (பிப். 20) அன்று சோப்பு தயாரிப்பதற்கான பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இதில் மூலிகைகள், மலர்கள் மற்றும் சந்தன எண்ணெய் ஆகியவற்றைக் கொண்டு சோப்புகளைத் தயாரிப்பது குறித்து நேரடிச் செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளன. இந்த இரண்டு பயிற்சி களும் கிண்டி, திரு. வி. க.  தொழிற்பேட்டையில் உள்ள அக்ரோ டெக் கிரீன் பார்க் வளாகத்தின் முதல் தளத்தில் அமைந்துள்ள பயிற்சி மைய த்தில் நடைபெறும். கூடுதல் விவரங்களுக்கு 044-29530048 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவசப் பட்டா வழங்குவதில் பிரச்சினை: சார் ஆட்சியர் விசாரணை

விழுப்புரம், பிப். 15-  விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே டி.பாஞ் சாலம் கிராமத்தில் இலவசப் பட்டா வழங்குவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையைச் சார் ஆட்சியர் நேரில் சென்று விசாரணை நடத்தினார். திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவிலுக்குச் சொந்த மான தீர்த்தக் குளத்தைச் சுற்றி கட்டப்பட்டிருந்த வீடுகள் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் இடித்து அகற்றப்பட்டன. இதில் வீடு இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்குத் திண்டி வனம் அருகே டி.பாஞ்சாலம் கிராமத்தில் பட்டா தருவ தாக வருவாய்த் துறையினர் உறுதியளித்தனர். சனிக்கிழமை (பிப். 14) காலை சுமார் 10 மணியளவில், திண்டிவனம் வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் தலை மையில் வருவாய்த் துறையினர், டி.பாஞ்சாலம் கிராமத் திற்குப் பட்டா வழங்குவதற்கான இடத்தையை ஆய்வு செய்யச் சென்றனர். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த மக்கள், தங்கள் பகுதி மக்களுக்கு முதலில் பட்டா வழங்கு ங்கள் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதே போன்று கடந்த மாதம் 31-ம் தேதி அளவீடு செய்யச் சென்ற அதிகாரி களிடமும் வாக்குவாதம் செய்தனர். ரோஷணை காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராசன் இரு தரப்பினரையும் சமா தானம் செய்து வைத்தார். இது குறித்துத் தகவல் அறிந்த சார் ஆட்சியர் ஆகாஷ், மதியம் சுமார் 11.45 மணிக்கு நேரில் சென்று பட்டா வழங்க  உள்ள இடத்தை ஆய்வு செய்தார். அப்போது, இடத்தை அளவீடு செய்து, டி.பாஞ்சாலம் மற்றும் தீர்த்தகுளம் பகுதி மக்களுக்குப் பட்டா வழங்குவதற்கு உடனடியாக நட வடிக்கை எடுக்கும்படி வருவாய்த் துறையினருக்கு உத்தர விட்டார். அதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் கலைந்து  சென்றனர்

தட்சசீலா பல்கலைக்கழகத்தில் சர்வதேச திருக்குறள் மாநாடு

விழுப்புரம், பிப். 15-  விழுப்புரம் மாவட்டம், ஓங்கூர் தட்சசீலா பல்கலைக் கழகம் சார்பில் ‘திருக்குறள்: உலக மாற்றத்திற்கான நிலை யான சான்றாண்மை’ என்ற தலைப்பில் இரண்டு நாள் சர்வதேச மாநாடு நடைபெற்றது. தொடக்க நிகழ்ச்சிக்குத் தட்சசீலா பல்கலைக்கழக வேந்தர் தனசேகரன் தலைமை தாங்கினார். இணை வேந்தர்கள் ராஜராஜன், நிலா பிரியதர்ஷினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைவேந்தர் விவேக் இந்தர் கோச்சா இந்தியப் பண்பாட்டின் பெருமைகளை எடுத்து ரைத்தார். தென் கொரியா தமிழ் ஆய்வாளர் சங்கத் தலைவர் ஆரோக்கியராஜ் செல்வராஜ், திருக்குறளின் முக்கியத் துவத்தைத் தனது உரையில் விளக்கினார். இரண்டாம் நாள் இணையவழி மாநாட்டில், மதுரை  திருக்குறள் மன்றச் செயலாளர் அழகுராஜ் கல்வியின் சிறப்பு குறித்துப் பேசினார். சிங்கப்பூர் தமிழ் இலக்கிய மன்றத் தலைவர் ரத்தின வெங்கடேசன் சொற்பொழிவாற்றினார். பல்வேறு நாடுகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட ஆய்வுக்  கட்டுரைகள் இம்மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டன. இதில் பல்கலைக்கழகத் துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரி யர்கள் பலர் கலந்து கொண்டனர்.

சென்னையில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

சென்னை, பிப். 15- கிண்டி, ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், நகை மதிப் பீட்டாளர் குறித்த ஐந்து நாள் பயிற்சி வகுப்பு திங்கட்கிழமை (பிப். 16) தொடங்குகிறது. வரும் 20 ஆம் தேதி வரை நடைபெற வுள்ளது. ஈக்காட்டுத்தாங்கல் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள அந்நிறுவன வளாகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இப்பயிற்சி நடைபெறும். கூடுதல் விவரங்களுக்கு 9360221280 / 8668100181 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவசப் பட்டா வழங்குவதில் பிரச்சினை: சார் ஆட்சியர் விசாரணை

விழுப்புரம், பிப். 15-  விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே டி.பாஞ் சாலம் கிராமத்தில் இலவசப் பட்டா வழங்குவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையைச் சார் ஆட்சியர் நேரில் சென்று விசாரணை நடத்தினார். திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவிலுக்குச் சொந்த மான தீர்த்தக் குளத்தைச் சுற்றி கட்டப்பட்டிருந்த வீடுகள் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் இடித்து அகற்றப்பட்டன. இதில் வீடு இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்குத் திண்டி வனம் அருகே டி.பாஞ்சாலம் கிராமத்தில் பட்டா தருவ தாக வருவாய்த் துறையினர் உறுதியளித்தனர். சனிக்கிழமை (பிப். 14) காலை சுமார் 10 மணியளவில், திண்டிவனம் வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் தலை மையில் வருவாய்த் துறையினர், டி.பாஞ்சாலம் கிராமத் திற்குப் பட்டா வழங்குவதற்கான இடத்தையை ஆய்வு செய்யச் சென்றனர். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த மக்கள், தங்கள் பகுதி மக்களுக்கு முதலில் பட்டா வழங்கு ங்கள் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதே போன்று கடந்த மாதம் 31-ம் தேதி அளவீடு செய்யச் சென்ற அதிகாரி களிடமும் வாக்குவாதம் செய்தனர். ரோஷணை காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராசன் இரு தரப்பினரையும் சமா தானம் செய்து வைத்தார். இது குறித்துத் தகவல் அறிந்த சார் ஆட்சியர் ஆகாஷ், மதியம் சுமார் 11.45 மணிக்கு நேரில் சென்று பட்டா வழங்க  உள்ள இடத்தை ஆய்வு செய்தார். அப்போது, இடத்தை அளவீடு செய்து, டி.பாஞ்சாலம் மற்றும் தீர்த்தகுளம் பகுதி மக்களுக்குப் பட்டா வழங்குவதற்கு உடனடியாக நட வடிக்கை எடுக்கும்படி வருவாய்த் துறையினருக்கு உத்தர விட்டார். அதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் கலைந்து  சென்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.