கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
3 Dec 2025, 2:59 pm

சோலார் புதிய பேருந்து நிலையம் இன்று சேவையை தொடங்குகிறது!

ஈரோடு, டிச.3- தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட சோலார் புதிய பேருந்து நிலையம் வியாழனன்று (இன்று) முதல் சேவையைத் தொடங்குகிறது. ஈரோடு மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்ப தற்காக சோலாரில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இதனை கடந்த நவ.26ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் நேரில் திறந்து வைத்தார். இதன் தொடர்ச்சியாக கரூர், மதுரை, வெள்ளகோவில் மார்க்கங்களில் செல்லும் அனைத்து பேருந்துகளும் வியாழனன்று (இன்று) காலை 11 மணி முதல் சோலார் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட வுள்ளன. அதேபோல மதுரை, திருச்சியில் இருந்து கரூர் மார்க்கமாகவும் மற்றும் வெள்ளகோவில் மார்க்கமாகவும் ஈரோடு வருகின்ற பேருந்துகள் சோலார் பேருந்து நிலை யத்திற்கு வந்து சேரும் வகையில் இயக்கப்படும். சோலார் பேருந்து நிலையத்திலிருந்து ஈரோடு மத்திய பேருந்து நிலை யம் மற்றும் அதனைத் தாண்டி பயணிக்கும் பயணிகளுக்கு நகர பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஈரோடு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கரூர் மார்க்கமாகவும் மற்றும் வெள்ளகோயில் மார்க்கமாகவும் பயணிக்கும் பய ணிகள் சோலார் பேருந்து நிலையம் செல்வதற்கும் நகர பேருந்து வசதி செய்து தரப்பட்டுள்ளது. அத்துடன் சோலார் பேருந்து நிலையத்திலிருந்து ஈரோடு நகரத்திற்குள் வருவ தற்கு போதுமான ஆட்டோ மற்றும் டாக்ஸிகள் சேவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ச.கந்த சாமி தெரிவித்துள்ளார்.

நலத்திட்ட உதவிகள் வழங்கல்

தருமபுரி, டிச.3- மாற்றுத்திறனாளிகள் விழாவில், ரூ.5.18 லட்சம் மதிப்பி லான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலை அரங்கில், உலக மாற்றுத்திறனாளிகள் நல விழா புதனன்று நடைபெற்றது. இந் நிகழ்விற்கு மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் தலைமை வகித்து, மொத்தம் 11 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5.18 லட்சம் மதிப்பி லான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதைத்தொ டர்ந்து பல்வேறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி

உதகை, டிச.3- பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிமூட்டம் காரண மாக, வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டவாறு வாகனங்களை இயக்கினர். நீலகிரி மாவட்டத்திற்கு புதனன்று ஆரஞ்சு எச்ச ரிக்கை விடுக்கப்பட்டிருந் தது. அதன்படி, காலை முதல் வெயிலின் தாக்கம் குறைந்தே காணப்பட்டது. அதேபோல் கூடலூர் அருகே தேவாலா, பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறைந் தது, குடியிருப்புகள், தேயி லைத் தோட்டங்கள் மற்றும் சாலைகள் முழுவதும் பனி மூட்டம் காணப்பட்டது. தேவாலா பகுதியிலிருந்து கேரளம் மாநிலம் செல்லும் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அள விற்கு சாலை முழுவதும் கடும் பனிமூட்டம் காணப் பட்டதால், வாகன ஓட்டிகள் இருபுற திசை விளக்குகளை ஒளிரவிட்டவாறு வாகனங் களை இயக்கினர்.

புலியை பிடிக்க வைத்திருந்த கூண்டில் சிறுத்தை!

உதகை, டிச.3- மாவனல்லா கிராமத்தில் புலியை பிடிக்க வைக்கப்பட்டிருந்த கூண்டில், சிறுத்தை ஒன்று சிக்கியது. நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்த மாவனல்லா கிராமத்தில், கடந்த நவ.24 ஆம் தேதியன்று நாகியம்மாள் (61) பழங்குடி யின பெண்ணை டி37 என்ற புலி வேட்டை யாடியது. இதனையடுத்து அந்த புலியை பிடிக்க 5 இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட் டன. மேலும், 40க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, புலியின் நடமாட்டம் குறித்து வனத்துறையி னர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில், புதனன்று அதிகாலை மாவனல்லாவில் குடி யிருப்பு பகுதி மற்றும் பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியையொட்டி வைக்கபட்ட சிறிய கூண்டில் சிறுத்தை ஒன்று சிக்கியுள் ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத் துறையினர், பிடிபட்ட சிறுத்தையை விடு வித்து, புலியை பிடிப்பதற்காக கூண்டை சரி செய்து வைத்தனர். புலி நடமாட்டம் இதேபோல், முதுமலை புலிகள் காப்ப கம், வெளி மண்டல வனப்பகுதியில் அமைந் துள்ள மசினகுடி - மாயார் சாலையில் சுற்று லாப் பயணிகள் ஜீப் சவாரி சென்றபோது புலி ஒன்று சாலையோரம் வந்து மரத்தின் அடி யில் நின்றது. அப்போது சுற்றுலாப் பயணி கள் அதிர்ச்சியுடன் அந்த புலியை பார்த்துக் கொண்டிருந்தபோது, திடீரென வனப்பகுதி யிலிருந்து மற்றொரு புலியின் உறுமல் சத் தம் கேட்டது. இதனால் சாலையோரம் நின்றி ருந்த புலி வனப்பகுதிக்குள் ஓடிப் பதுங்கி யது. இந்த காட்சி தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

மதுபோதையில் தந்தை தகராறு: மகன் தற்கொலை

தருமபுரி, டிச.3- மதுபோதையில் தந்தை அடிக்கடி தக ராறில் ஈடுபட்டு வந்ததால், விரக்தியடைந்த மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டை அருகேயுள்ள எர்ரப்பட்டி கிரா மத்தைச் சேர்ந்தவர் சிவகுமாா் (45). லாரி ஓட்டு நரான இவர், மதுப்பழக்கத்துக்கு அடிமை யானதுடன், மதுகுடித்துவிட்டு அடிக்கடி வீட் டில் உள்ளவர்களிடம் தகராறு செய்து வந் துள்ளார். இதனால் அதியமான்கோட்டை பகு தியிலுள்ள பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்த இவரது 2 ஆவது மகன் ஹரிஷ் (16), தந்தையின் நடவடிக்கையால் பாதிக்கப் பட்டு அக்கம் பக்கத்தினரிடம் வருத்தப்பட் டுள்ளார். இந்நிலையில், திங்களன்று இரவும் சிவகுமார் மது அருந்திவிட்டு வந்து, அவரது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இத னால் விரக்தியடைந்த ஹரீஷ் செவ்வாயன்று காலை தூக்கிட்டு தற்கொலைக்கு முயன் றார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற் றோர் அவரை மீட்டுப் பார்த்தபோது, அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஹரிஷ் இறப்பதற்கு முதல்நாள் இரவு தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ள கைப்பேசி குறுஞ்செய்தி யில், ‘நான் இறந்துவிட்டால் அனைவரும் வந்து இறுதிச் சடங்கில் பங்கேற்பீர்களா?’ என்று தெரிவித்துள்ள சம்பவம் அனைவ ரையும் சோகத்தில் தள்ளியது.