சோலார் நிறுவன நில ஆக்கிரமிப்பு! விவசாயிகள் முற்றுகை போராட்டம்!
9 Mar 2026, 4:24 pm
<p><strong>சோலார் நிறுவன நில ஆக்கிரமிப்பு! விவசாயிகள் முற்றுகை போராட்டம்!</strong></p>
<p>ராணிப்பேட்டை, மார்ச் 9 – ஆற்காடு லாடவரம் கிராமத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் சோலார் நிறுவனம், விவசாயிகளின் பட்டா நிலங்களை மிரட்டிப் பறிப்பதோடு அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் நீர் வழிப் பாதைகளை ஆக்கிரமித்துள்ளதைக் கண்டித்து விவசாயிகள் சங்கம் சார்பில் ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாலுகா செயலாளர் ஆர். மோகன்ராஜ் தலைமையில் திரண்ட விவசாயிகள், பொதுப்பாதையை மறித்துக் கல் கம்பங்கள் நட்டுள்ள நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கவும், நில ஆக்கிரமிப்புகளை அகற்றவும் வலியு றுத்தி வட்டாட்சியரிடம் மனு அளித்தனர். புகாரைப் பெற்றுக்கொண்ட வட்டாட்சியர், உரிய விசாரணை நடத்தித் தீர்வு காண்பதாக உறுதியளித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் எஸ். கிட்டு துவக்கி வைத்து பேசினார். மாநில செயலாளர் இரா.சரவணன், மாவட்ட செயலாளர் எல்.சி.மணி, மாவட்ட குழு உறுப்பினர்கள் ஏ.குமார், எம்.ரமேஷ், பி.சேகர், விதொச மாவட்ட தலைவர் டி. சந்திரன், தாலுகா தலைவர் ஜி. மதியழகன்,தாலுகா குழு உறுப்பினர்கள் எஸ்.முரளி தாஸ், வி.பாலாஜி, வி. ராஜாமணி, ஏ. நரசிம்மன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக தாலுகா குழு உறுப்பினர் பி.கன்னியப்பன் நன்றிகூறினார்.</p>
