தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விவசாயிகள் என்ற பெயரில் வண்டல் மண் அள்ளி செல்லும் மண் வியாபாரிகள்: அதிகாரிகள் ஆய்வு செய்ய வலியுறுத்தல்

6 Jul 2026, 1:16 am
விவசாயிகள் என்ற பெயரில் வண்டல் மண் அள்ளி செல்லும் மண் வியாபாரிகள்: அதிகாரிகள் ஆய்வு செய்ய வலியுறுத்தல்
<p><strong>விவசாயிகள் என்ற பெயரில் வண்டல் மண் அள்ளி செல்லும் மண் வியாபாரிகள்: அதிகாரிகள் ஆய்வு செய்ய வலியுறுத்தல்</strong></p><p>மேட்டுப்பாளையம், ஜூலை 5- பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில், விவசாயிகள் என்ற பெயரில் மண் வியாபாரிகள் வண்டல் மண் அள்ளி செல்லும் சம்பவம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை அருகே பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுக்க தமிழக அரசு அனுமதியளித்தது. இதனையடுத்து விவசாயிகள் சிலர் பட்டா, சிட்டா உடன் உரிய அனுமதி பெற்று லிங்காபுரம், பெத்திக்குட்டை, புதுக்காடு ஆகிய பகுதிகளில் விவசாய டிராக்டர் மூலம் மண் எடுத்துச் செல்ல துவங்கினர். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வண்டல் மண் எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அனுமதி அளித்திருந்தனர். இதனை விவசாயிகள் முறையாக பின்பற்றினர். ஆனால், இதில் குறுக்கே புகுந்து லாபம் பார்க்க துவங்கியுள்ள மண் வியாபாரிகள் மற்றும் இடைத்தரகர்கள், விதிமுறைகளை குறிப்பிட்ட மீறி அதிகாலை முதலே டிப்பர் லாரிகளில் வண்டல் மண் எடுக்க தொடங்கினார்கள். மாலை 4 மணிக்கு பின்னரும் இருளிலும் லாரிகள் வரிசை கட்டி செல்ல துவங்கின. வண்டல் மண் எடுத்துச் செல்லும் லாரிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்ததால், வாகனங்கள் செல்லும் வழி நெடுகிலும் புழுதி காற்று பறந்து, விதிகளுக்கு மீறி அதிக பாரத்துடன் இவை கடந்து செல்லும் சாலைகளும் சேதமடைய துவங்கியுள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள், லாரிகளை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டாலும் பிரச்சனை தொடரவே செய்கின்றன. கோவை மாவட்ட அரசு அதிகாரிகள் மற்றும் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் ஆகியோர், வண்டல் மண் எடுப்போர் விவசாயிகள் தானா? என உரிய ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுப்பது அவசியம் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். உரிய அனுமதி மற்றும் உரிமம் இல்லாமல் வண்டல் மண் எடுத்து செல்லும் டிப்பர் லாரிகளில் பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.