மண் கடத்தல்: வாகனங்கள் பறிமுதல்
22 Nov 2025, 3:59 pm
<p>தருமபுரி, நவ.22- காரிமங்கலம் அருகே சட்டவிரோதமாக மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக னங்களை கனிமவளத்துறை அதிகாரிகள் பறி முதல் செய்தனர். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள ஏரிக ளில் சட்ட விரோதமாக சிலர் மண் வெட்டி கடத்துவதாக புகார்கள் எழுந்தன. பொதுப் பணித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை வசம் உள்ள ஏரியில், சில அதிகாரிகளின் ஒத் துழைப்போடு மண் கடத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், காரி மங்கலத்தை அடுத்த பைசுஅள்ளி குண்டல பட்டி ஏரியில் மண் எடுக்க, பொதுப்பணித் துறை அதிகாரிகள் மற்றும் காரிமங்கலம் வட் டாட்சியர் அனுமதி அளித்ததாக கூறப்படுகி றது. விவசாய பணிகளுக்காக மட்டும் குறிப் பிட்ட அளவு மண் எடுக்க அனுமதி அளித்தி ருந்தனர். ஆனால், மண் கடத்தல் கும்பல் மற்றும் செங்கல் சூளை உரிமையாளர்கள், இரவு பகலாக விதிமுறைகளை மீறி டிப்பர் லாரிகள் உட்பட பல்வேறு பெரிய கனரக வாகனங்களில் மண்ணை லோடு லோடாக கடத்திச் சென்றனர். இதுகுறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைய டுத்து விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தனர். அதன்பேரில் உரிய நட வடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, கனிம வளத்துறை அதிகாரிகள் வெள்ளியன்று குண்டலபட்டி ஏரியில் திடீர் சோதனை மேற் கொண்டனர். அப்போது, மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கமலேசன் என்பவருக்கு சொந்தமான பொக்லைன் இயந்திரம் மற்றும் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து காரிமங்க லம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கொடுத்த புகா ரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். </p>
