தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

6 Dec 2025, 2:48 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

சர்வதேச சதுரங்கப் போட்டி

தருமபுரி, டிச.6- தருமபுரியில் சர்வதேச சதுரங்கப்போட்டி, வெள்ளி யன்று துவங்கியது. தருமபுரியில் தகடூர் டிஎன்சி நினைவு கோப்பைக் கான சர்வதேச சதுரங்கப் போட்டிகள் வெள்ளியன்று துவங்கின. தனியார் மண்டபத்தில் இப்போட்டிகளை மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் தொடங்கி வைத்தார். தரு மபுரியில் முதல்முறையாக சர்வதேச சதுரங்கப் போட்டி நடைபெறும் நிலையில், இதில் ஆசியா, அமெ ரிக்கா, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த போட்டி யாளர்களும், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட 18 மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்கின்ற னர். 4 வயது முதல் 80 வயது வரை பல்வேறு பிரிவு களில், 5 நாட்கள் நடைபெறும் போட்டிகளில் மொத்தம் 412 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதில் வெற்றி பெறு வோருக்கு முதல் பரிசாக ரூ.70 ஆயிரம் வழங்கப் படவுள்ளது. பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெறுப வர்களுக்கு மொத்தம் ரூ.7 லட்சம் மதிப்பிலான பரிசு கள் வழங்கப்படவுள்ளன.

புதிய குடிநீர் இணைப்பு வழங்கக் கோரிக்கை

ஈரோடு, டிச.6- பெருந்துறை நகராட்சியில் புதிய குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்பு  அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி யுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இதுவரை குடி நீர் இணைப்பு பெறாத அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டி ருந்தும், பெருந்துறை நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும், இதுவரை புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்படவில்லை. ஆனால், 500க்கும் மேற்பட்ட வீடுகளில் விண்ணப்பங்கள் பெறப்படாமலும், வைப் புத் தொகை வசூலிக்கப்படாமலும் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, இது வரை குடிநீர் இணைப்பு பெறாத, வரி விதிப்பு செய்யப் பட்ட வீடுகள், கட்டிடங்கள், வணிக வளாகங்களுக்கு புதிய குடிநீர் இணைப்பு பெற விண்ணப்பம் பெற அறி விப்பு செய்து, உரிமையாளர்களிடமிருந்து விண்ணப் பங்களை பெற்று உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்க ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண் தின விழிப்புணர்வு பேரணி

கோவை, டிச.6–  தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வெள்ளியன்று காலை உலக மண் தினத்தை முன் னிட்டு மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். “மண்ணை காப்போம் – உயிரை காப்போம்” என்ற  முழக்கத்துடன் நடைபெற்ற இப்பேரணியில் நூற்றுக் கணக்கான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு, மண் வளத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசி யத்தை வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து, பல்க லைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப் பட்டன. பிரபல தனியார் நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில்  இந்த மரக்கன்று வழங்கும் திட்டம் செயல்படுத்தப் பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.