தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சோசலிசம் அல்லது வீரமரணம் - செ.முத்துக்கண்ணன்

13 Jun 2026, 10:02 pm
சோசலிசம் அல்லது வீரமரணம் - செ.முத்துக்கண்ணன்

சோசலிசம் அல்லது வீரமரணம் - செ.முத்துக்கண்ணன்

இரண்டு மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டால், “ஐயோ என்ன இது” என நாம் விமர்சிக்கிறோம். ஆனால், ஒரு தேசத்தின் மின் உற்பத்தியையே முடக்கி, மின்சாரம் இல்லாமல் நாள்கணக்கில் மக்களை இருட்டில் வைத்துள்ளது அமெரிக்க ஏகாதிபத்தியம்.

அதன் கொடூரமான பொருளாதாரத் தடை, கியூப வர்த்தகத்தை முடக்கி யது, ராணுவத்தைக் கொண்டு அச்சுறுத்துவது, இதர நாடுகளுடனான அரசியல், சமூக, கலாச்சாரத் தொ டர்புகளுக்குத் தடை விதிப்பது என, தனக்குக் கீழ்படிய வேண்டும் என்று 1959 முதல் இன்று வரை அமெரிக்கக் கழுகுகளால் கியூப மக்களின் வாழ்க்கை சிதைக்கப்பட்டுக்கொண்டே வருகிறது. சோசலிச நாடுகள் உள்ளிட்ட இதர நாடுகளின் உதவியுடன், ஐநா சபையிலும் சர்வதேச அளவிலும் தொடர் ஆதரவைப் பெற்று இதுவரை சமாளித்த கியூபா, அமெரிக்கப் பொருளாதாரத் தடையால் தற்போது கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

“கடைசி கியூபக் குடிமகனும், கடைசிச் சொட்டு இரத்தமும் இருக்கும் வரை போராடுவோம், ஒருபோதும் சரண டைய மாட்டோம்” எனச் சிம்ம கர்ஜனையாய் கியூபா அறிவித்துப் போராடி வருகிறது. இந்த நிலையில், உலக ஏகாதிபத்திய எதிர்ப்பின் அடை யாளமாய் மாறிப்போன மகத்தான புரட்சியாளர் சேகுவேராவின் பிறந்த தினத்தையொட்டி, கியூபா ஆதரவு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவ டிக்கையை ஜூன் 14 அன்று (இன்று) சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் ஆகிய மையங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு வடிவங்களில் நடத்தவுள்ளது.

தீ பற்றவை, மக்கள் நெருப்பென எழுவார்கள்

1929 ஜூன் 14 அன்று பிறந்த சேகுவேரா, இரண்டரை வயதிலேயே ஆஸ்துமா நோய்க்கு ஆட்பட்டுத் தனது இறுதி நாட்கள் வரை அதோடு போராடியவர். பள்ளிப் பருவம் தொட்டே இடதுசாரிக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டுக் கம்யூனிஸ்டாகத் தன்னைச் செதுக்கிக் கொண்டவர். பாசிச, ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஆயுதம் ஏந்தி, ஒடுக்கப்பட்ட நாடுகளின் விடுதலைக்காகப் போராடியவர்.

“தீ பற்றவை, மக்கள் நெருப்பென எழுவார்கள்” என்ற சேவின் முழக்கம் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இன்றும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் காட்டுமிராண்டித்தனமான கொள்ளை லாப வேட்டைக்கு எதிராக இன்றும் கியூபாவில் மக்கள் லட்சக்கணக்கில் கிளர்ந்தெழுந்து போராடுகிறார்கள். ஏனென்றால், அவர்களின் இதயங்களில் தாங்கி நிற்கும் மகத்தான சோசலிச உணர்வும் தத்துவமுமே அவர்களை வழிநடத்துகிறது. மரணத்தைக் கண்டு அச்சமில்லை என லட்சம் சேகுவேராக்களாய்க் களத்தில் போராடுகிறார்கள். சே புரட்சியின் அடையாளமாக மாறிவிடக்கூடாது என்பதில் ஏகாதிபத்தியத்திற்கும் அதன் கூட்டாளிகளுக்கும் நோக்கம் இருந்தது. ஆனால், இன்றைய உலகில் நிலைமை தலைகீழாகி, அவர் ஏகாதிபத்திய எதிர்ப்பின் உலகளாவிய அடையாளமாக மாறியுள்ளார்.

அச்சுறுத்தும் ஏகாதிபத்தியக் கழுகு

அனைத்து வளங்களையும் கைப்பற்றும் நோக்கோடு கியூபாவை அடிபணிய வைக்க, அமெரிக்க நாசகாரி போர்க்கப்பல் ‘நிமிட்ஸ்’ கரீபியன் கடலில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், ‘ஆபிரகாம் லிங்கன்’ கப்பலையும் அனுப்பி வைப்போம் என மிரட்டுகிறது. பொருளாதாரத் தடைகளைத் தேசத்தின் மீது மட்டுமல்லாது தனிநபர்கள் மீதும் விதித்து அமெரிக்கா தாக்குதலைத் தொடங்கியுள்ளது. டிரோன்கள், உளவு விமானங்கள் போன்றவற்றை இறை யாண்மை மிக்க கியூப எல்லைக்குள் அனுப்பி அச்சுறுத்தி, அத்துமீறுகிறது

ஏற்கெனவே நவீன அறிவியல் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஈரானின் தலைவரைக் கொன்றது. வெனிசுலாவில் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவையும் சிலியா புளோரஸையும் நள்ளிரவில் ராணுவ நடவடிக்கை மூலம் தாக்கி, கடத்திச் சென்று தனது (அமெரிக்கச்) சிறையில் அடைத்து வைத்துள்ளது. தற்போது கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி ரால் காஸ்ட்ரோ மீது 30 ஆண்டுகளுக்கு முந்தைய பிரச்சனையைக் குற்றச்சாட்டாக்கி, குற்றவாளி என அறிவித்துக் கைது செய்ய முயற்சி செய்து வருகிறது. இதற்காக எத்தகைய ராணுவ நடவடிக்கையையும் எடுப்போம் என டொனால்டு டிரம்ப் மிரட்டுகிறார்.

இதன் பகுதியாக, கியூப நிறுவனங்களோடு வணிகம் செய்யும் எந்தவொரு அயல்நாட்டு நிறுவனங்களின் மீதும் கட்டாய இரண்டாம் நிலை பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என ஆணை பிறப்பித்துள்ளார்கள். இது இறையாண்மை மிக்க நாடுகளின் மீதான நேரடியான தாக்குதலாகும். கச்சா எண்ணெய், மின் உற்பத்திக்கான சூரிய சக்தி தகடுகள், மனிதாபிமான முறையிலான உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் ஆகியவற்றை இதர நாடுகளில் இருந்து கியூபா பெறுவதையும் இது தடை செய்கிறது. உதவிடும் நாடுகள் மீதும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என மிரட்டுகிறது. அமெரிக்காவின் இந்தச் செயலைச் சீனா, ஐரோப்பிய யூனியன், ஜெர்மனி, பிரேசில், மெக்சிகோ உள்ளிட்ட பல நாடுகள் கண்டித்துள்ளதோடு, அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளன. ஆனால், இந்திய அரசு மௌனம் காப்பது அதன் நடுநிலைக் கொள்கைக்கு எதிரானது.

ரௌத்திரம் பேசும் கியூபா

சுமார் 1.25 கோடி மக்களைக் கொண்டுள்ள நாடான கியூபா, 1959 முதல் கடும் பொருளாதாரத் தடையையும் அமெரிக்க அரசின் கொலைபாதகச் செயல்களையும் எதிர்த்து நின்று போராடுகிறது. உலகின் கல்வித் தரத்திற்கும், குறிப்பாக மருத்துவக் கல்விக்கும், சர்க்கரை உற்பத்தியிலும், உலக ஒலிம்பிக் குத்துச்சண்டையிலும் சாம்பியன்களாக வலம் வருபவர்கள் கியூப தேசத்தினர். இன்றும் உலகின் அனைவருக்குமான மருத்துவம் என்பதில் அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் உள்ள நாடு கியூபா ஆகும். புற்றுநோய்க்கான மருத்துவத்தில் இரண்டாம் கட்டச் சோதனையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளதாகவும் அது அறிவித்துள்ளது.

அத்தகைய கியூபாவில் இன்று மருந்துப் பொருட்கள், உணவுப் பண்டங்கள், எரிபொருட்கள் ஆகியவற்றுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. காரணம், அமெரிக்காவின் அத்துமீறிய அராஜகமே. நாளொன்று க்கு 3100 மெகாவாட் மின்சாரம் தேவை என்ற நிலையில், 1800-1900 மெகாவாட் மட்டுமே கிடைக்கிறது. இதனால் நாளின் பெரும் பகுதி நேரம் மின்வெட்டு ஏற்பட்டு, கடும் நெருக்கடியைக் கியூபர்கள் சந்தித்து வருகிறார்கள். கச்சா எண்ணெய் இறக்குமதியை அமெரிக்கா தடை செய்த காரணத்தி னால் மின் உற்பத்தி நிறுவனங்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. அரசுக்குச் சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுவனமான ‘குபெட்’ பல பத்தாண்டுகளாக எந்த முதலீடும் செய்யப்படாமல் பாதிக்கப்பட்டுள்ளது. 1960 முதல் 1980 வரை சோவியத் மற்றும் ஜப்பான் நாடுகளின் உதவி யால் கட்டப்பட்ட அனல் மின் நிலை யங்கள் முடங்கிப் போயுள்ளன. குடிநீர் விநியோகம் தடைப்பட்டதும் மக்களைக் கடும் பாதிப்புக்குள்ளாக்கி யுள்ளது. மறுபுறம் பணவீக்கம், விலை வாசி உயர்வு, உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு ஆகியவை நெருக்கடியைத் தீவிரப்படுத்தியுள்ளன. அதிகளவில் ரேஷன் முறை மூலமே மானிய விலை யில் உணவுப் பொருட்கள் விநியோகிக் கப்பட்டு வந்த நிலையில், தற்போது இருப்பு இல்லாத சூழலில் மக்கள் கடும் வறுமையை நோக்கித் தள்ளப் பட்டுள்ளனர்.

உலகில் 1000 மக்களுக்கு 8.5 மருத்து வர்கள் கொண்ட தேசமாக கியூபா தான் முதலிடத்தில் உள்ளது (அமெ ரிக்கா 5 மருத்துவர்களைத்தான் கொண்டுள்ளது). இச்சூழலில், மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் போதிய அளவு இல்லாத தால் மருத்துவச் சிகிச்சை வாரக்கணக் கில் தள்ளிப் போகும் நிலை உருவாகியுள்ளது.

கியூபப் பொருளாதாரம் 1959 புரட்சிக்கு முந்தைய காலத்தை விடக் கடும் நெருக்கடியில் உள்ளது. கியூபாவின் அதிக லாபம் ஈட்டும் துறைகளான சுற்றுலாத்துறை (கவியோட்டா), நிதிப் பராமரிப்புத் துறை (சிமெக்ஸ் மற்றும் ஃபின்சிமெக்ஸ்) போன்றவை யும் முடக்கப்பட்டுள்ளன. சுற்றுலாத் துறை வருவாய் 50 சதவீதம் வரை இழப்பைச் சந்தித்துள்ளது. வெளிநாட்டு முதலீடுகள் வேகமாக வெளியேறி வருகின்றன. மேலும், நிதிச் சேவைகள், கனிமங்கள் மற்றும் சுரங்கம், பாது காப்பு ஆகியவற்றை முடக்கும் உத்தரவை அமெரிக்க அரசு அமல்படுத்துவதோடு, கியூபாவின் மாபெரும் ராணுவக் கூட்டமைப்பான ‘GAESA’ மீது அதிகாரப்பூர்வமாக இலக்கு வைக்கவும் உத்தரவிட்டுள்ளது.

தன்னார்வ உழைப்பு

இந்தச் சூழலில்தான் பிடலும், சேவும், ராலும் கட்டியெழுப்பிய மார்க்சிய லெனினிய அம்சங்களின் அடிப்படையை மேலும் பலப்படுத்தும் முயற்சியில் கியூப மக்கள் போராடி வருகிறார்கள். சோசலிசத்தைக் கட்டமைப்பதில் தன்னார்வ உழைப்பை முதன்மை முக்கியத்துவம் வாய்ந்த அம்சமாக சே முன்வைத்தார். அது சோசலிச உணர்வையும் கூட்டுப் பொறுப்புணர்வையும் வளர்க்க உதவும் என நம்பினார். சோசலிசத்தைக் கட்ட மைப்பதில் தொழில்நுட்ப வளர்ச்சியில் கவனம் செலுத்துவது அவசியம் என்றும், அது லாபத்தை விடச் சமூகத் தேவைகளால் இயக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

வறிய மனிதனின் நிலையைக் கண்டு இரக்கம் கொள்வதல்ல, மாறாக அந்த நிலைமையை மாற்றுவதற்கான போராட்டத்தை முன்னெடுப்பதே முக்கியம் என்ற இயக்கவியல் அடிப்ப டையில், சர்வதேச உணர்வோடு முழு உலகையும் மாற்றியமைப்பதைப் பற்றிய கனவோடு அர்ஜெண்டினாவில் பிறந்து, கியூபாவில் புரட்சி செய்து, காங்கோ, பெரு, பொலிவிய விடுதலை எனப் பயணித்தவர் சே. ஏகாதிபத்தி யத்தின் பிடறியை அதன் குகைக்குள் ளேயே (நியூயார்க்கில் உள்ள ஐநா சபையில்) உலுக்கி எடுத்தவர்.

அதனால் தான், “அவர்கள் நினைத்தது போலின்றி நீ வாழ்ந்து கொண்டி ருக்கிறாய் - சே” என்ற முழக்கம் பல்வேறு நகரங்களின் தெருக்களில் எதிரொலிக்கிறது. கியூபாவைப் பாதுகாப்போம், உடன் சேர்ந்து நிற்போம். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை வீழ்த்துவோம் என சேவின் பெயரால் சபதமேற்போம்.

ஏகாதிபத்தியம் ஒழியட்டும் – சோசலிசம் வெல்லட்டும்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.