பெண் விடுதலைக்கு சோசலிசமே உண்மையான தீர்வு
14 Jun 2026, 9:42 pm

பெண் விடுதலைக்கு சோசலிசமே உண்மையான தீர்வு

கரூர், ஜூன் 14 - பெண் விடுதலைக்கு சோசலிசமே உண்மை யான தீர்வு என்று கரூர் பொதுக் கூட்டத்தில் உ.வாசுகி, கே.பாலபாரதி ஆகிய தலைவர்கள் பேசி னர். பாலின சமத்துவத்தை முன்வைத்தும், பெண் கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை களைக் கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கரூர் மாவட்ட குழு சார்பில் மாபெரும் பொதுக் கூட்டம் ஜூன் 13 (சனிக்கிழமை) அன்று கரூர் உழவர் சந்தையில் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் மா. ஜோதிபாசு தலைமை வகித்தார். ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.ரஞ்சிதா வரவேற்பு ரையாற்றினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கே.கந்தசாமி, மாதர் சங்க மாவட்ட தலைவர் வி.சசிகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் உ.வாசுகி, மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மாநில குழு உறுப்பினர் எஸ்.பாலா ஆகியோர் சிறப்புரை யாற்றினர். இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஜீவானந்தம், பி.ராஜூ, கே. சக்திவேல், சி.முருகேசன், சி.ஆர்.ராஜாமுகமது, இரா.முத்துச்செல்வன், கரூர் மாநகர செயலா ளர் எம்.தண்டபாணி, ஒன்றிய செயலாளர்கள் எம். ஆறுமுகம், ஜி.தர்மலிங்கம் உட்பட ஆயிரத் திற்கும் கலந்து கொண்டனர்.

சோசலிசமே பெண்களின் விடுதலைக்கு வழி

பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய அரசி யல் தலைமைக் குழு உறுப்பினர் உ.வாசுகி, பெண்களின் சமத்துவத்திற்கும் விடுதலைக்கும் சோசலிச சமூக அமைப்பே உண்மையான தீர்வு என்பதை வரலாற்று உதாரணங்களுடன் விளக்கி னார். “1917 இல் ரஷ்யாவில் சோசலிச புரட்சி ஏற்பட்ட போது, உலகிலேயே முதன்முதலாக பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய நாடு சோவியத் யூனியன் தான். பெண்கள் பொது வாழ்க்கையிலும் அரசிய லிலும் ஈடுபட தடையாக இருக்கும் வீட்டு வேலைகள் மற்றும் குழந்தை பராமரிப்புப் பாரத்தைக் குறைக்க, தோழர் லெனின் மலிவு விலை உண வகங்களையும், கட்டணமில்லா குழந்தை காப்பகங் களையும், பொது சலவையகங்களையும் உரு வாக்கினார். இந்த சோசலிச கட்டமைப்புதான் பெண்களை சுதந்திரமாகச் செயல்பட வைத்தது. இந்தியாவிலும் அத்தகைய சோசலிச சமூகம் அமைய வேண்டும் என்பதே கம்யூனிஸ்டுகளின் லட்சியம்” என்று குறிப்பிட்டார்.

சர்வதேச நெருக்கடிகளும் அமெரிக்க ஏகாதிபத்தியமும்

உலக அளவில் நடக்கும் போர்கள் பெண்க ளையும் குழந்தைகளையும் எவ்வாறு வதைக் கின்றன என்பதைப் பட்டியலிட்ட அவர், காசா, பாலஸ்தீனத்தின் மேற்கு கரை மற்றும் லெப னான் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களை யும், ஈரான் மீதான அமெரிக்காவின் அராஜகங் களையும் சாடினார். மத்திய கிழக்கில் நடக்கும் இந்த ஏகாதிபத்திய போர்களே இந்தியாவில் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக் குக் காரணம் என்று சுட்டிக்காட்டினார். மேலும், 60 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகளையும் மின் வெட்டு உள்ளிட்ட பல்வேறு ஆழமான நெருக்கடி களையும் எதிர்கொண்டு வரும் சோசலிச நாடான கியூபாவிற்கு ஆதரவாக நாம் சர்வதேச ஒற்றுமை யுடன் குரல் கொடுக்க வேண்டும் என்றும் வலி யுறுத்தினார்.

மோடி அரசின் 12 ஆண்டு கால அவலம்

ஒன்றிய மோடி அரசை கடுமையாக விமர்சித்த உ.வாசுகி, மோடி ஆட்சிக்கு வந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்தியாவின் நிலை உலக அரங்கில் மிக மோசமடைந்துள்ளது என்றார். பட்டினி குறியீடு, மனிதவள மேம்பாடு, பாதுகாப்பு இல்லாத நாடுகள் ஆகியவற்றின் பட்டி யலில் இந்தியா கடைசி இடங்களுக்குத் தள்ளப் பட்டுள்ளது. டொனால்டு டிரம்ப் இந்தியா மீது கூடுதல் வரி விதிப்பேன் என்று மிரட்டியும், அமெ ரிக்காவைத் தட்டிக்கேட்கத் துப்பில்லாத அரசாக மோடி அரசு இருப்பதாகக் குற்றம் சாட்டினார். மேலும், 100 நாள் வேலை திட்டத்தை 125 நாள் களாக மாற்றுவோம் என்று கூறுவதெல்லாம் வெற்றுக்கதை என்றும், தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளுக்கு எதிராகப் பெரிய போராட் டங்களுக்கு நாம் தயாராக வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தார்.

உட்கட்சி ஜனநாயகமும் மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமும்

பெண்ணுரிமை பற்றி மேடைகளில் வசனம் பேசும் பாஜக போன்ற கட்சிகள், பெண்களுக்கு எதிரான மனுவாத சித்தாந்தத்தையே பின்பற்று கின்றன என்று சாடிய வாசுகி, மார்க்சிஸ்ட் கட்சி யின் தனித்துவத்தை எடுத்துரைத்தார்: “எங்கள் கட்சியின் விதிகள் அகில இந்திய பொதுச் செயலாளர் முதல், மாநில செயலாளர், மாவட்ட செயலாளர் மற்றும் உறுப்பினர் வரை அனைவருக்கும் பொதுவானது. குடும்ப வன்முறை யில் ஈடுபட்டாலோ, பாலியல் குற்றங்கள் செய் தாலோ அவர் எப்பேர்ப்பட்ட தலைவராக இருந்தா லும் கட்சியை விட்டு நீக்கப்படுவார் என்ற துணிச்ச லான சட்ட விதி மார்க்சிஸ்ட் கட்சியிடம் மட்டுமே உள்ளது” என்றார்.

தவெக அரசுக்கு எச்சரிக்கையும் ஆலோசனையும்

2026 சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் மாற்றம் குறித்துப் பேசிய உ.வாசுகி மற்றும் கே.பாலபாரதி, தமிழக மக்கள் தவெக தலைமையை நம்பி வாக்களித்து, அக்கட்சியை 108 இடங்களுடன் முன்னிலைக்குக் கொண்டு வந்துள்ளனர் என்றார். முதலமைச்சர் ஜோசப் விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாகக் கூறிய வாக்குறுதியை யும் நினைவுகூர்ந்தார். இருப்பினும், சமீபத்தில் சேலத்தில் 50-க்கும் மேற்பட்ட இளம் பெண்களைப் பாலியல் வன் புணர்வு செய்து, வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வணிகத்தில் தள்ளிய வழக்கில், முதல் குற்றவாளி யான மணிகண்டன் தவெக நிர்வாகி என்று செய்தி கள் வருவதை அவர்கள் சுட்டிக்காட்டினர். ஆளுங்கட்சி என்ற போர்வையில் குற்றவாளி கள் தப்பிக்க தவெக தலைமை இடம் கொடுக்கக் கூடாது என்றும், உடனடியாக விசாரித்து அவர் மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். சிவகங்கையில் பெண் காவலருக்கே கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்துள்ள அவலத்தைச் சுட்டிக்காட்டிய தலைவர்கள், வன்முறையைத் தடுக்க ‘சிங்கப் பெண்கள் படை’ போன்ற திட்டங்கள் மட்டும் போதாது என்றனர். அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அனுபவமிக்க பெண்கள் அமைப்புகளை அழைத்து, வன்முறையை ஒழிக்கக் கலந்துரையாடல் நடத்தி, முறையான கொள்கையைத் தவெக அரசு வகுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். கொள்கை சார்ந்த மாற்று அரசியல் மத்திய குழு உறுப்பினர் கே.பாலபாரதி தனது உரையில், 1967 இல் அறிஞர் அண்ணா தலை மையில் காங்கிரஸ் ஆட்சி வீழ்த்தப்பட்ட வர லாற்றுப் பின்னணியையும், 2026 இல் திராவிட இயக்க ஆட்சிகள் சந்தித்துள்ள பின்னடை வையும் ஒப்பிட்டுப் பேசினார்.

ஏன் வெளியிலிருந்து ஆதரவு?

தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களைப் பெற்றிருந்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 119 இடங்கள் அதற்கு இல்லை. இத்தகைய சூழலில், குறுக்கு வழியில் குடியரசுத் தலைவர் ஆட்சியோ அல்லது ஆளுநர் மூலமாக பாஜகவின் மறைமுக ஆட்சியோ தமிழகத்திற்குள் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காகவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிலிருந்து தவெக அரசுக்கு ஆதரவளிக் கும் முடிவை எடுத்துள்ளது என்று விளக்கினார். “இந்த செங்கொடி இயக்கம் அமைச்சர் பதவி களையோ, அதிகாரப் பகிர்வையோ கேட்டு இந்த ஆதரவை வழங்கவில்லை. எந்தவித சுயநலமும் இல்லாமல், மதச்சார்பற்ற அரசைப் பாதுகாக்க வும், உழைக்கும் மக்களின் உரிமைகளை நிலை நாட்டவும் இந்த முடிவை எடுத்துள்ளது. கடந்த காலத்தில் 64 எம்பிக்களுடன் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு தந்தபோதுதான், உழைக்கும் வர்க்கத்திற்காக 100 நாள் வேலை திட்டத்தைச் சட்டமாக்கினோம். அதேபோல, இப்போதும் மக்களின் அடிப்படை கோரிக்கைகளுக்காகத் தவெக அரசை வலி யுறுத்துவோம்” என்றார்.

சமரசமற்ற போராட்டக் களம்

தவெக அரசு செய்யும் எல்லாவற்றையும் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்காது என்று தெளிவு படுத்திய பாலபாரதி, மக்களுக்கு நல்லது செய்தால் மட்டுமே ஆதரவு உண்டு என்றார். வேலைவாய்ப்பின்மை, தனியார் நிறுவனங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் 12 மணி நேர உழைப்புச் சுரண்டல், விலைவாசி உயர்வு, சுகா தாரப் பணியாளர்களின் நிரந்தரப் பணி கோ ரிக்கை போன்ற மக்கள் பிரச்சினைகளுக்காகச் செங்கொடி இயக்கம் தொடர்ந்து வீதிகளில் போரா டும் என்றார் அவர். சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை, மதச்சார்பற்ற கல்வி, கல்வி வணிகமயமாக்கலைத் தடுத்தல் போன்ற வற்றில் மார்க்சிஸ்ட் கட்சி உறுதியுடன் நிற்கும். மேலும், அறிவியல் பூர்வமான சமத்துவக் கருத்து களைக் குடும்பம் முதல் நாடாளுமன்றம் வரை கொண்டு சேர்க்கக் கட்சி பாடுபடுகிறது. இடதுசாரி கள் வெறும் பேச்சோடு நிற்காமல், கீழ்வேளூர் தொகுதியில் தோழர் லதாவை வேட்பாளராக நிறுத்தி, சட்டமன்றத்திற்குள் பெண் எம்.எல்.ஏ-வாக அனுப்பிப் பெருமை சேர்த்துள்ளனர் என்றும் கே.பாலபாரதி பெருமிதத்துடன் குறிப்பிட்டார். வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் 18 ஆண்டுகள் பாதிக்கப்பட்ட மக்களுடன் நின்று நீதியைப் பெற்றுத் தந்தது மார்க்சிஸ்ட் கட்சிதான் என்பதை நினைவூட்டிய தலைவர்கள், கரூர் மாவட்டத்தின் ஆக்கிரமிப்புகள், கோயில் நிலப் பிரச்சினைகள் உள்ளிட்ட உள்ளூர் நிலவரங்கள் அனைத்திலும் சமரசமின்றிப் போராடிப் பாதிக்கப் பட்ட மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுத் தரு வோம் என்று உறுதி கூறித் தங்களது உரையை நிறைவு செய்தனர்.