இந்திய நிலைமைகளில் சோசலிசம்: நாம் நடக்க வேண்டிய பாதை - எம்.ஏ. பேபி
22 Nov 2026, 10:40 pm

இந்திய நிலைமைகளில் சோசலிசம்: நாம் நடக்க வேண்டிய பாதை - எம்.ஏ. பேபி

1977-க்குப் பிறகு முதல் முறையாக இம்முறைதான், நமது கட்சி எந்த மாநில அரசுக்கும் தலைமை தாங்கவில்லை. சட்டமன்றத் தேர்தல்களில் கேரளத்திலும் மேற்கு வங்கத்திலும் நாம் கடும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறோம்; வகுப்புவாத, பிளவுபடுத்தும் பிரச்சாரத்தின் மூலம் பாஜக வென்றிருக்கிறது. 1991 முதல், “சோசலிசம் செத்துவிட்டது” என்று கருத்தியல் தாக்குதல் திரும்பத் திரும்ப மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்திய மக்களின் உண்மையான விருப்பங்களிலும், முதலாளித்துவ அமைப்பின் உண்மையான நெருக்கடியிலும் வேரூன்றிய சோசலிச மாற்றைத் துணிவுடன் முன்வைப்பதே நமது பதில்.

மக்களின் கனவுகளும்பொய்ப் பிரச்சாரமும்

வறுமைக்கும் சுரண்டலுக்கும் முடிவு; நிலம், உணவு, நியாயமான கூலி, வீடு, கல்வி, மருத்துவம், வேலை; சாதியத்திலிருந்தும் மதவெறியிலிருந்தும் விடுதலை – இவையே சுதந்திர இந்தியாவிடம் மக்கள்

எதிர்பார்த்தவை. 79 ஆண்டுகள் கழிந்தும் பெரும்பாலான மக்களுக்கு இவை நிறைவேறவில்லை. நவதாராளமயக் கட்டத்தில் இருக்கும், மனுவாத இந்துத்துவாவோடு பிணைக்கப்பட்ட முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ அமைப்பு இவற்றுக்குப் பதில் தரவில்லை; தரவும் முடியாது. தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், சிறுபான்மை யினர், தலித்துகள், ஆதிவாசிகள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்களின் இந்தக் கனவுகளே இந்தியாவில் சோசலிசத் திட்டத்தின் உயிர்ப்புமிக்க மூலப்பொருள்.

சோசலிசம் ஓர் அந்நிய இறக்குமதி, 19-ஆம் நூற்றாண்டு ஐரோப்பியச் சிந்தனை, 1991-இல் சோவியத் யூனியனோடு வீழ்ந்துவிட்டது என்ற பிரச்சாரத்தின் ஒவ்வொரு பகுதியும் தவறு. சமத்துவச்சமூகத்துக்கான ஏக்கம் என்பது, வர்க்கச் சமூகம் அளவுக்கு பழமையானது. மாவேலி நாடாண்டபோது மனிதர்கள் அனைவரும் சமமாக இருந்தனர் என்கிறதுகேரளத்தின் ஓணப்பாட்டு. வர்க்கமற்ற லட்சியத்தைப் பொற்காலமாகக் காணும் மக்களின் கனவு அல்லாமல் வேறு என்ன இது? 1809-இல் திருவிதாங்கூரில் ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்த அய்யா வைகுண்ட சுவாமிகள், 1836-இல் “சமத்துவ சமாஜம்” அமைத்தார். அவர் கார்ல் மார்க்ஸை விட ஒன்பது வயது மூத்தவர்; அவரது அமைப்பு கம்யூனிஸ்ட் அறிக்கைக்கு 12 ஆண்டுகள் முந்தையது. ஒத்த ஒடுக்குமுறை நிலைமைகள், திருவிதாங்கூரிலும் ஜெர்மனியிலும் ஒத்த விடுதலை விருப்பங்களை உருவாக்குகின்றன. எனவே, சமத்துவப் போராட்டம் ஐரோப்பிய ஏற்றுமதி அல்ல.

விஞ்ஞான சோசலிசமும் சோவியத் அனுபவமும்

வரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதப் பார்வை,‘உபரி மதிப்பின்’ மூலம் முதலாளித்துவச் சுரண்டலைப் புரிந்துகொண்டது – மார்க்ஸின் இந்த இரு பங்களிப்புகள் சோசலிசத்தைக் கற்பனையிலிருந்துவிஞ்ஞானமாக உயர்த்தின. அந்தத் திட்டம் வரலாற்றின் ஒவ்வொரு திருப்பத்திலும் புதுப்பிக்கப்பட்டது. 72

நாள் பாரிஸ் கம்யூன் அனுபவத்துக்குப் பின், “இப்போது எழுதினால் கம்யூனிஸ்ட் அறிக்கையை வேறுவிதமாகஎழுதியிருப்போம்” என்று 1872-இல் மார்க்சும் எங்கெல்சும் அறிவித்தனர்; அடிப்படைப் புரிதல் சரியானதே என்றும்உறுதிப்படுத்தினர். தங்கள் சொந்த ஆவணம் பகுதியளவு காலாவதியாகிவிட்டது என்று நிறுவனர்களேசொன்னார்கள். 1875-இல் ஜெர்மன் தொழிலாளர் இயக்கத்தின் கோத்தா திட்டத்தை மார்க்ஸ் கடுமையாகவிமர்சித்தார்; ஆனால் இயக்கத்துக்குள்ளேயே இருந்து அதைத் திருத்தப் போராடினார்; அந்த விமர்சனம் அடுத்ததலைமுறை முழுவதற்கும் கல்வியானது. அன்றைய மிகச் சிறந்த மார்க்சிய அறிஞராகக் கருதப்பட்டகாவுட்ஸ்கி, ஒரு காலகட்டத்தின் சூத்திரங்களை நிரந்தர உண்மைகளாகக் கருதியதால் லெனின் அவருடன்முறித்துக்கொண்டார்; உயிர்ப்புமிக்க புரட்சிக்கு எதிராக நின்றபோது காவுட்ஸ்கியின் வறட்டுவாதம்துரோகமானது.

பின்தங்கிய, போரால் சிதைந்த, பெரும்பாலும் எழுத்தறிவற்ற விவசாய நாட்டை, வேலையின்மை ஒழிக்கப்பட்ட, அனைவருக்கும் இலவசக் கல்வியும் மருத்துவமும் கொண்ட தொழில் வல்லரசாக சோவியத் ஒன்றியம் மாற்றியது. 1913–1965 காலத்தில் சோவியத் வளர்ச்சியே உலகில் மிக வேகமானது என்று பொருளாதார வரலாற்றாசிரியர் ஆங்கஸ் மேடிசன்பதிவு செய்திருக்கிறார். பதினான்கு நாடுகளின் ஆயுதத் தலையீடு, முற்றுகை, பொருளாதாரத் தடை, பாசிசப் படையெடுப்பு என இடைவிடாத பகைமைக்கு நடுவே இது நடந்தது.

ஆனாலும் 1989–91-இல் சோவியத் ஒன்றியமும் கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகளும் வீழ்ந்தன. சென்னையில் நடந்த நமது கட்சியின் 14-வது அகில இந்திய மாநாடு அதை ஆய்வு செய்தது. மார்க்ஸின் எதிர்பார்ப்புக்கு மாறாக, பின்தங்கிய நாடுகளில் சோசலிசம் கட்டப்பட்டது; அரசுத் துறையை

மிதமிஞ்சிச் சார்ந்திருத்தல், கட்டாயக் கூட்டுப் பண்ணைமயம், அதீத மையப்படுத்திய திட்டமிடல்

கொண்ட சோவியத் மாதிரி பெரும் தொழில்மயத்தைச் சாதித்தாலும் பின்னர் தடுமாறியது; அதிகாரவர்க்க மையவாதம், சோசலிச ஜனநாயகத்தின் அரிப்பு, கட்சியும் அரசும் ஒன்றாகிப் போனது; சோசலிச சட்ட

நெறி மீறல்கள் போன்ற திரிபுகள் குவிந்தன; கட்சியேஅரசின் இடத்தைப் பிடித்தது; யாருடைய பெயரால்அதிகாரம் செலுத்தப்பட்டதோ, அந்த உழைக்கும் மக்களே அதிலிருந்து விலக்கப்பட்டனர்; முதலாளித்துவம் இறுதிச் சிதைவில் இருப்பதாக 1957, 1960 சர்வதேச மாநாடுகள் அறிவித்தது, முதலாளித்துவத்தின் தகவமைப்புத் திறனைக் குறைத்து மதிப்பிட்ட தவறு; அறிவியல்–தொழில்நுட்ப வளர்ச்சியை முதலாளித்து வம் பயன்படுத்திக்கொண்டது; விண்வெளி வெற்றிகளுக்குப் பிறகும், மக்கள் பயன்பாட்டுத் துறையில் சோவியத் மாதிரி அதைச் செய்யத் தவறியது. எனவே,உலகிற்கு தெளிவான படிப்பினை கிடைத்தது: ஒவ்வொரு நாட்டின் உழைக்கும் மக்களும், தங்கள் நாட்டின்சொந்த நிலைமைகளின் மண்ணில்தான் சோசலிசத்தைக் கட்ட வேண்டும்.

இந்தியாவில் ‘மக்கள் ஜனநாயகம்’

சோசலிசம், அதைத் தொடர்ந்து கம்யூனிசம் என்ற இலக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் திட்டம் உறுதியாக நிற்கிறது; ஆனால் சோசலிசப் புரட்சியை உடனடிக்கடமையாக வைக்கவில்லை. ஏனெனில் இந்தியாவில் முதலாளித்துவம் என்பது பழைய சமூகத்தின் மீதுதிணிக்கப்பட்டது. பிரிட்டிஷாரோ இந்தியப் பெருமுதலாளிகளோ பழைய சமூகத்தை தகர்க்கவில்லை;நிலப்பிரபுத்துவம் உருமாற்றப்பட்டுப் பாதுகாக்கப்பட்டது; சாதி புதிய முதலாளித்துவ அமைப்புக்குள்இணைக்கப்பட்டது. தீவிர நிலச் சீர்திருத்தம், சாதி ஒடுக்குமுறை ஒழிப்பு, அந்நிய நிதி மூலதனம் மற்றும் உள்நாட்டுஏகபோகத்திலிருந்து விடுதலை போன்ற ஜனநாயகக் கடமைகள் முடிக்கப்படவில்லை. எனவே நமதுதற்போதையகட்டம், நிலப்பிரபுத்துவ, ஏகாதிபத்திய, ஏகபோக எதிர்ப்பு கொண்ட மக்கள் ஜனநாயகப் புரட்சியை நடத்துவது. தொழிலாளி வர்க்கத் தலைமையே அது சோசலி சத்துக்குக் கடந்து செல்வதை உறுதி செய்யும்.பெருமுதலாளிகள் தலைமையிலான, அந்நிய நிதி மூலதனத்துடன் கைகோர்க்கும் முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ கூட்டணியே எதிரி. தொழிலாளி – விவசாயிகூட்டணியே மக்கள் ஜனநாயக அணியின் அடித்தளம். விவசாயத் தொழிலாளர்களும் ஏழை விவசாயிகளும் அடிப்படைக் கூட்டாளிகள்; நடுத்தர விவசாயிகள் நம்பகமானவர்கள்; ஏகபோக வணிகர் களால் நசுக்கப்படும் பணக்கார விவசாயிகள் ஊசலாடுபவர்கள் – குறிப்பிட்ட தருணங்களில் அவர்களையும் அணிக்குள் கொண்டுவரலாம்.நிலப்பிரபுத்துவ ஒழிப்பு; விவசாயத் தொழிலாளர் களுக்கும் ஏழை விவசாயிகளுக்கும் இலவச நிலம்;ஏகபோக ஒழிப்பு; ஜனநாயகப்படுத்தப்பட்ட பொதுத் துறை; வாழ்வதற்கான கூலி; சொத்துரிமை உட்படபெண்களுக்குச் சம உரிமை; உண்மையான மதச்சார்பற்ற அரசு; இலவசக் கல்வி, மருத்துவம்; மாநில சுயாட்சி; விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம், திரும்ப அழைக்கும் உரிமை – இவையே மக்கள் ஜனநாயகத்தின்இலக்கு. ஒவ்வொன்றும் ஏதோ ஒரு பிரிவின் விருப்பத்துக்குப் பதில் தருவதால்தான் அணி சாத்தியமாகிறது.

இந்தியச் சோசலிசத்தின் தனித் தன்மைகள்

முதலாவது, புரட்சிகரமான வர்க்கப் போராட்டம், சமூக நீதிப் போராட்டம் என்ற இரண்டு கால்களில் நடக்க வேண்டும். நிலப்பிரபுவும் கந்துவட்டிக்காரரும் பொதுவாக ஆதிக்கச் சாதியினராக உள்ளனர்; விவசாயத் தொழிலாளி பெரும்பாலும் தலித்களாக உள்ளனர். 2021–22-இல் பட்டியல் சாதியினருக்கு எதிரான குற்றங்கள் 13 சதவீதம் அதிகரித்தன. ஒன்றுக்காக மற்றொன்று காத்திருக்க முடியாது. இரண்டாவது,பெண் விடுதலை: பாலின வேலைப் பிரிவினைக்கு முடிவு, ஜனநாயகக் குடும்பச் சட்டம், சமூகக் குழந்தைப் பராமரிப்பு, சம ஊதியம், பெண்கள் மீதான வன்முறைக்குக் கடும் நடவடிக்கை. மூன்றாவது, ஜனநாயகம்: சோசலிச அரசியல் சாசனத்தின் கீழ் பல கட்சி முறை; ஒவ்வொரு மட்டத்திலும் அதிகாரம் கொண்ட மக்கள் மன்றங்கள்; சம அதிகாரக் கூட்டாட்சி; அனைத்து தேசிய மொழிகளுக்கும் சமத்துவம். நான்காவது, சுற்றுச்சூழல்: வெள்ளம், நிலச்சரிவு, புயல்கள், நகரங்களின் நச்சுக் காற்று என முதலாளித்துவக் கொள்ளையின் விளைவுகளை நாம் அனுபவிக்கிறோம்; வளர்ச்சியையும் சூழலியல் சமநிலையையும் இணைப்பதே திட்டமிடலின் அடிப்படை. ஐந்தாவது, தொழில்நுட்பம்: முதலாளித் துவப் பிடியில் செயற்கை நுண்ணறிவு வேலைகளைப்பறித்து, அதிகாரத்தைக் குவித்து, கண்காணிப்பைப் பெருக்குகிறது; சோசலிச இந்தியா தரவு ஏகாதிபத்தி யத்தைஎதிர்க்கும், பொதுவுடைமை டிஜிட்டல் தளங்க ளையும் அறிவுப் பொதுவெளியையும் உருவாக்கும். ஆறாவது,வேளாண் மாற்றம்: உற்பத்தித் திறனைப் பன்மடங்கு உயர்த்த வேண்டும்; ஆனால் கூட்டு உற்பத்திக்கு மாறுவது,அதில்தான் தங்கள் முன்னேற்றம் இருக்கிறது என்று சிறு விவசாயிகள் உணர்வதன் மூலமே நடக்கும்.

நம் முன் உள்ள கடமைகள்

ஒன்று, சோசலிச மாற்றுச் சிந்தனையை கட்சி முழுவதற்கும் அதற்கு அப்பாலும் கொண்டு செல்ல வேண்டும்; கட்சியின் ஒவ்வொரு மாநிலக் குழுவும்இதுகுறித்துக் கட்சிக் கல்வி நடத்த வேண்டும்; ஆலைத் தொழிலாளியும் விவசாயியும் மாணவரும்புரிந்துகொள்ளும் எளிய வெளியீடுகள் அனைத்து மொழிகளிலும் வர வேண்டும். இரண்டு, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான போராட்டத்தை கூட்டுறவு வேளாண்மையோடும், தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை உற்பத்தியில் தொழிலாளர் அதிகாரத்தோடும், சாதிக் கொடுமை எதிர்ப்பைச் சாதியற்ற சமூகத்தோடும், ஆறுகள் – காடுகள் பாதுகாப்பைச் சூழலியல் வளர்ச்சியோடும் இணைக்க வேண்டும். மூன்று, கட்சியை கட்ட வேண்டும்: கட்சியின் சுயேச்சையான வலிமை, இடதுசாரிகளுக்குப் புத்துயிர், இடது ஜனநாயகத் திட்டத்தைச் சுற்றி அணிதிரட்டல், பாஜக–ஆர்எஸ்எஸ்-ஐ பிரதான அபாயமாக எதிர்த்தல், தவறுகளைத் திருத்துக் கொள்வது - இதுவே 24வது

அகில இந்திய மாநாட்டின் வழி. நான்கு, மத நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தும் வாழ்வாதாரப் போராட்டங்களில் இணையத் தயாரானவர்களைப் பொறுமை யாக அணிதிரட்ட வேண்டும்; கம்யூனிஸ்டுகள் மத விரோதிகள் என்ற அவதூறால் மக்கள் வகுப்புவாதிகளின் கைகளில் விழ அனுமதிக்கக் கூடாது. ஐந்து,குறிப்பான நிலைமைகளைப் பற்றிய துல்லியமான ஆய்வு, வெகு மக்களுடன் உயிர்ப்புமிக்க தொடர்பு, உட்கட்சி ஜனநாயகத்துடன் ஜனநாயக மத்தியத்து வம், சுயேச்சையான மதிப்பீட்டுடன் சர்வதேசியம், புரட்சிகரநம்பிக்கை என்ற வழிமுறையை உறுதி யாகப் பற்ற வேண்டும்.நமது மக்கள், சமத்துவத்திற்கான கனவை நீண்ட காலம் சுமந்து வந்திருக்கிறார்கள். கனவைத் திட்டமாகவும், திட்டத்தை இயக்கமாகவும், இயக்கத்தைப் புதிய சமூகமாகவும் மாற்றும் பொறுப்பு மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியிடம் வந்திருக்கிறது. இந்திய நிலைமைகளில் சோசலிசம், 21-ஆம் நூற்றாண்டின் சோசலிசம் – இதுவே மாற்று. முன்னேறுவோம்!ஆதாரம்: பீப்பிள்ஸ் டெமாக்ரசி, நவம்பர் 15, 2026தமிழில் சுருக்கம் : எஸ்.பி.ஆர்.