சமூக நலத்துறை நிதி ஒதுக்கீடு சரிவு! ஒன்றிய அரசு பதிலைக் சுட்டிக்காட்டி ஆர். சச்சிதானந்தம் எம்.பி. விமர்சனம்!
8 Aug 2026, 8:44 pm

சமூக நலத்துறை நிதி ஒதுக்கீடு சரிவு! ஒன்றிய அரசு பதிலைக் சுட்டிக்காட்டி ஆர். சச்சிதானந்தம் எம்.பி. விமர்சனம்!

நாடாளுமன்றத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர், கல்வி, சுகாதாரம், கிராமப்புற வளர்ச்சி மற்றும் சமூக நலத்துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் உண்மையான செலவினங்கள் குறித்த விவரங்களை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் எழுப்பிய எழுத்துப்பூர்வக் கேள்விக்கு (எண்: 2503), ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி ஆகஸ்ட் 3, 2026 அன்று பதிலளித்தார்.

நிதி ஒதுக்கீடு மற்றும் செலவின விவரங்கள்

பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர், கல்வி, சுகாதாரம், கிராமப்புற வளர்ச்சி மற்றும் சமூக நலத்துறை பிரிவுகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும், பணவீக்கத்திற்கு ஏற்ப சரிசெய்யப்பட்ட உண்மையான (Real) மற்றும் பெயரளவு (Nominal) மாற்றங்கள் குறித்தும் ஆர். சச்சிதானந்தம் எம்.பி. கேள்வி எழுப்பியிருந்தார்.

ஒன்றிய அரசு அளித்துள்ள பதிலின் முக்கிய அம்சங்கள்:

Jபட்டியல் சாதியினர்: பட்ஜெட் ஒதுக்கீடு (BE) ₹42,219 கோடியும், உண்மையான செலவினம்

₹15,129 கோடியும் அதிகரித்துள்ளது. பெயரளவு மற்றும் உண்மையான ஒதுக்கீடு முறையே ₹85,221 கோடி மற்றும் ₹40,530 கோடி அதிகரித்துள்ளது.

Jபட்டியல் பழங்குடியினர்: பட்ஜெட் ஒதுக்கீடு ₹50,568 கோடியும், உண்மையான செல

வினம் ₹28,275 கோடியும் அதிகரித்துள்ளது. பெயரளவு மற்றும் உண்மையான ஒதுக்கீடு முறையே ₹76,858 கோடி மற்றும் ₹40,181 கோடி அதிகரித்துள்ளது.

Jகல்வித் துறை: பட்ஜெட் ஒதுக்கீடு ₹35,426 கோடியும், உண்மையான செலவினம் ₹36,630 கோடியும் அதிகரித்துள்ளது. பெயரளவு மற்றும் உண்மையான ஒதுக்கீடு முறையே ₹29,338 கோடி மற்றும் ₹1,988 கோடி அதிகரித்துள்ளது.

Jசுகாதாரத் துறை: பட்ஜெட் ஒதுக்கீடு ₹26,949 கோடியும், உண்மையான செலவினம் ₹9,550 கோடியும் அதிகரித்துள்ளது. பெயரளவு மற்றும் உண்மையான ஒதுக்கீடு முறையே ₹34,617 கோடி மற்றும் ₹10,466 கோடி அதிகரித்துள்ளது.

Jகிராமப்புற வளர்ச்சி: பட்ஜெட் ஒதுக்கீடு ₹1,21,000 கோடி அதிகரித்திருந்தாலும், கொரோனா தொற்றுக்குப் பிந்தைய ஆண்டுகளில் இயல்புநிலை திரும்பியதாலும் திட்டச் சுழற்சி முடிந்ததாலும் உண்மையான செலவினம் ₹37,017 கோடி குறைவாகவே இருந்துள்ளது.

Jசமூக நலம்: சமூக நலத்துறையின் பெயரளவு ஒதுக்கீடு ₹6,176 கோடி அதிகரித்திருந்தாலும், பணவீக்கத்தின் அடிப்படையில் (Real terms) ₹5,165 கோடி குறைவாகவே இருந்தது என அரசு ஒப்புக்கொண்டுள்ளது. கோவிட் பெருந்தொற்றுக் காலத்திற்குப் பிந்தைய ஆண்டுகளில் ஏற்பட்ட இயல்புநிலை மாற்றமே இதற்குக்காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர். சச்சிதானந்தம் எம்.பி. விமர்சனம்

ஒன்றிய அரசின் இந்தப் பதிலைக் சுட்டிக்காட்டி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம்

தனது விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார்.

சமூக நலத்துறைக்கான ஒதுக்கீடு பணவீக்கச் சரிசெய்தலின்படி பல கோடிகள் குறைந்து

விட்டதாகவும், கிராமப்புற வளர்ச்சித் துறைக்கான உண்மையான செலவினம் கடுமையாகக் குறைந்துள்ளதாகவும் அரசுத் தரவுகளே அம்பலப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார். கோவிட் காலத்தைக் காரணம் காட்டி மக்கள் நலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைப்பது ஏழை எளிய மக்களின் முதுகெலும்பை ஒடிக்கும் செயலாகும்.

கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக நலத்துறை போன்ற மிக முக்கியமான மனித வள மேம்பாட்டுத் துறைகளுக்குப் பெயரளவிலான கணக்குகளைக் காட்டுவதை விட்டுவிட்டு, உண்மையான தேவையின் அடிப்படையில் நிதியை உயர்த்தி வழங்கவும், ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாகச் செலவிடப்படுவதை உறுதி செய்யவும் ஒன்றிய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.