சமூக வலைதளங்களை ஏவல் அமைப்புகளாக மாற்றுவதா?
9 Oct 2026, 9:58 pm

சமூக வலைதளங்களை ஏவல் அமைப்புகளாக மாற்றுவதா?

நாட்டின் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு எதிராகவும், வாக்காளர் பட்டியல்சிறப்புத் தீவிரத் திருத்தங்களைக் கண்டித்தும் புதுதில்லி ஜந்தர் மந்தரில் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் ஜனநாயகப் போராட்டத்தை முறியடிக்க ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களமிறங்கியுள்ளது.கைதுகள், போக்குவரத்துத் தடைகள், இணையத் துண்டிப்புகள் என அடக்குமுறைகள் ஒருபுறமிருக்க, மறுபுறம் சமூக வலைதளங்களின் மீதும் பாசிசத் தணிக்கைக் கத்தி பாய்ந்துள்ளது. ஒன்றிய மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள ரகசிய ‘கூடுதல் தீவிரக் கவனம்’ அறிவுறுத்தல், குடிமக்களின்அரசியலமைப்புச் சட்ட உரிமைகளையும் பேச்சுரிமையையும் நசுக்கும் மற்றொருநேரடித் தாக்குதலாகும்.

இந்த நடவடிக்கை என்பது வெறும் இணையப் பாதுகாப்புக்கான வழிமுறை அல்ல; மாறாக,உழைக்கும் மக்களின், ஜனநாயக சக்திகளின் நியாயமான கோபத்தையும் எதிர்ப்பையும் ஒடுக்குவதற்காக அரசும் கார்ப்பரேட் நிறுவனங்களும் கூட்டுச் சேர்ந்து நடத்தும் ஒடுக்குமுறையின் தொடர்ச்சியாகப் பார்க்க வேண்டியுள்ளது.

நாடாளுமன்ற விவாதங்களையோ அல்லது சட்டப்பூர்வமான விதிகளையோ மதிக்காமல், எஜமானர்களின் கட்டளைக்கு இணங்கத் திரைமறைவில் உருவாக்கப்படும் இத்தகைய நிர்வாகஉத்தரவுகள், ஜனநாயகத்தின் அடித்தளத்தையே தகர்த்துவிடும். ‘சமூக அமைதி’ என்றபோர்வையில், மக்கள் விரோதக் கொள்கைகளைக் கேள்வி கேட்கும் எளிய மக்களின் குரல்களைத் தணிக்கை செய்யக் கார்ப்பரேட் சமூக வலைதளநிறுவனங்களுக்கு மறைமுக அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

இந்திய அரசியல் சாசனம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளில் மிகமுக்கியமான ஒன்று கருத்துரிமையும் எழுத்துரிமையும் ஆகும். ஆனால், எந்தவொரு சட்டப் பிரிவின் கீழும் வராத, நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறாத இந்த மீட்டிங் அறிவுறுத்தல், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை அப்பட்டமாகக் காலில் போட்டு மிதிக்கிறது.

பாஜக அரசின் மீது வைக்கப்படும் எந்தவொரு நியாயமான விமர்சனத்தையும் சட்டம் அனுமதித்துள்ள வரம்புகளைத் தாண்டி, ‘சமூகஅமைதி’ என்ற பெயரில், ‘தவறான தகவல்’ முத்திரை குத்தி ஒடுக்க இது வழிவகை செய்கிறது.

மக்களின் உரிமைகளைக் காப்பதும், அரசின்ஜனநாயக விரோதப் போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுவதும் ஊடகங்கள் மற்றும் குடிமக்களின் தலையாய கடமையாகும். ஆனால், அதைக் குலைக்கும் வகையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இந்த எதேச்சதிகாரப் போக்கை ஒட்டுமொத்த ஜனநாயக சக்திகளும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும். ஒடுக்கப்படும் மக்களின் குரலாகச் சமூக வலைதளங்கள் இருக்க வேண்டிய தருணத்தில், அவற்றை அரசின் ஏவல் அமைப்புகளாக மாற்றும் இந்த ரகசியஅறிவுறுத்தலை அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.