தீக்கதிர் முக்கிய செய்திகள்
28 Oct 2026, 8:52 pm

பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய்

பிரேசில் தேர்தலில் லூலா வெற்றி பெற்ற பிறகு, அவருக்கு எதிராக போட்டியிட்ட வலதுசாரியான ஃப்ளாவியோபொல்சானரோ நாட்டிலிருந்து வெளியேறி அமெரிக்காவில் தஞ்சம் புகுந்துள்ளார். இஸ்ரேலில் வெளியாகி இருக்கும்தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் நேதன்யாகு வெற்றி கேள்விக்குறி என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது.அமெரிக்காவில் நடக்கும் இடைக்கால தேர்தலில் டிரம்ப்புக்கு ஆதரவு கிடைப்பது கடினம் என்கிற நிலை. தன்னை யாருமேவீழ்த்த முடியாது என்கிற கற்பனையில் இருந்த மனிதர்களுக்கு தேர்தல்கள் எதார்த்தத்தை காட்டிக் கொண்டிருக்கின்றன.

சிஜேபி தலைவர் அபிஜீத் திப்கே

ஆயிரக்கணக்கான இன்ஸ்டா பதிவுகளை ஒன்றிய அரசு தினசரி முடக்கிக் கொண்டிருக்கிறது. மக்கள் கேள்வி கேட்கும் தளம்தான் இன்ஸ்டாகிராம். கேள்விகளுக்கான நியாயங்கள் இன்ஸ்டாகிராமை தாண்டி சமூகத்தில் இருக்கின்றன. கணக்குகளை முடக்குவதால், கேள்விகள் முடங்கிவிடாது. அரசின் இந்த ஒடுக்குமுறை, மக்களிடம் இன்னும் கோபத்தைதான் மூட்டும்.

யூடியூபர் துருவ் ரதி

என்ன பதிவு என்றே பார்க்காமல் இணையப் பதிவுகளை முடக்கி வருகின்றனர். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இருந்து பல்வேறு பதிவுகளை நீக்க மோடி அரசு உத்தரவிட்டுள்ளதற்கு இதுதான் உதாரணம்.