தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழகத்தில் சமூக நீதிக்கு எட்டாக்கனியாகும் இடஒதுக்கீடு - ச.கருப்பையா

1 Oct 2026, 9:42 pm
தமிழகத்தில் சமூக நீதிக்கு எட்டாக்கனியாகும் இடஒதுக்கீடு - ச.கருப்பையா

தமிழகத்தில் சமூக நீதிக்கு எட்டாக்கனியாகும் இடஒதுக்கீடு - ச.கருப்பையா

இந்திய விடுதலைக்குப் பிறகு பல்வேறு துறைகளில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அடித்தட்டு மக்களுக்கான சமூக நீதி இன்னும் முழுமையாக எட்டப்படவில்லை என்பதற்குத் தமிழகத்தின் பல துறைகளில் நிலவும் விளிம்புநிலை மக்களின் பிரதிநிதித்துவப் பற்றாக்குறையே சாட்சியாக உள்ளது.

தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களின் பின்னடைவு காலிப் பணியிடங்களான (Back log Vacancies) சுமார் 27,641 பணி யிடங்கள் இன்றுவரை நிரப்பப்படாமல் இருப்பது

வருந்தத்தக்க சூழலாகும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் திராவிட முன்

னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளின் ஆட்சிக் காலங்களிலும் இத்தகைய காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான உரிய சிறப்பு முயற்சிகள் எடுக்கப்படவில்லை. மேலும், அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிலுள்ள முக்கியத் துறைகளில் பல ஆண்டுகளாகப் பட்டியல் மற்றும் பழங்குடியினர், பெண்கள் மற்றும் மாற்றுத்திற னாளிகளுக்கான உரிய இடஒதுக்கீடு முழுமை யாகநடைமுறைப்படுத்தப்படவில்லை.

உள்ளாட்சித்துறையும் பிரதிநிதித்துவ மறுப்பும்

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களால் கொண்டுவரப்பட்ட புதிய பஞ்சாயத்து ராஜ் சட்டம் மற்றும் நகர் பாலிகா சட்டத்தின் அடிப்படையில், உள்ளாட்சி அமைப்பு களில் தலைவர் பதவிகளுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், துணைத் தலைவர் பதவிகளுக்கும் ஊராட்சி செயலாளர் போன்ற அரசுப் பணிகளுக்கும் எந்தவிதமான இடஒதுக்கீடும் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. பெண் தலை வர்கள் உள்ள ஊராட்சிகளில் துணைத் தலை வர்களாகப் பெண்களையே நியமிப்பதுடன், ஆண் தலைவர்கள் உள்ள ஊராட்சிகளிலும் துணைத் தலைவர்களாகப் பெண்களை நியமிக்கும் முறையைக் கட்டாயமாக்க வேண்டி யது அவசியமாகும். தமிழகத்தில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளிலும் ஊராட்சி செயலாளர் மற்றும் எழுத்தர் பணியிடங்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர், ஆணையர்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் மூலம் நியமனங்கள் நடைபெறும் நிலையில், இதில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கான பிரதி நிதித்துவம் மறுக்கப்பட்டு வருவது கவனிக்கத்தக்கது.

இந்து சமய அற நிலையத்துறையும், அறங்காவலர் குழுக்களும்

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை யின் நேரடிக் கட்டுப்பாட்டில் 10,119 கோவில்களும், கட்டுப்பாட்டில் இல்லாத 36,222 கோவில்களும் என மொத்தம் 46,341 கோவில்கள் உள்ளன. இவற்றில் பல லட்சக் கணக்கில் வருமானம் ஈட்டும் கோவில்கள் முதல் சிறிய கோவில்கள் வரை பல பிரிவுகள் அடங்கியுள்ளன. இந்தியா சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட, இக்கோவில்களின் அறங்காவலர் குழு உறுப்பினர்களாகப் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பட்டியல்/ பழங்குடியின மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டாலும், ஒரு கோவிலில் கூட அறங்காவலர் குழுத் தலைவர் பதவியில் இவர்களுக்கு உரிய முறையில் வாய்ப்பளிக்கப் படாமல் சமூக நீதி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

நீதித்துறையும் அரசு வழக்கறிஞர் நியமனங்களும்

நடப்பு நிதியாண்டில் அரசுத் தரப்பில் சுமார் 2,800 அரசு வழக்கறிஞர்கள் (குற்ற வியல், உரிமையியல் மற்றும் கூடுதல் உரிமையியல் வழக்கறிஞர்கள்) நியமிக்கப்பட உள்ள னர். ஆனால், உச்சநீதிமன்றம், உயர் நீதி

மன்றங்கள் மற்றும் மாவட்ட, கீழமை நீதி மன்றங்களில் (Sub Courts) விளிம்புநிலை மக்க

ளுக்கான இடஒதுக்கீடு அடிப்படையில் அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படாதது நீதித்துறைக்குச் சவாலாக உள்ளது. சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்றகிளைகள், கடலூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களின் கீழமை நீதிமன்றங்களில் கூட முன்னுரிமைஅடிப்படையில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களுக்கு உரிய இடஒதுக்கீடுவழங்கப்படவில்லை

கூட்டுறவுத்துறையும் பணியாளர் நியமன நிலவரமும்

தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வந்தாலும், இவற்றின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கும், பெரும்பான்மை

யாகத் தலைவர்கள் மூலமாகத் தேர்ந்தெடு க்கப்படும் பணியாளர் நியமனங்களுக்கும் இடஒதுக்கீடு முற்றிலுமாக மறுக்கப்பட்டு வருகிறது.இதற்கு ஒரு சான்றாக, மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியத்தில் உள்ள 15 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் நிலவும் பணியாளர் விவரங்களைக் கீழ்க்கண்ட வாறு பட்டியலிடலாம்:தமிழகம் முழுவதும் உள்ள 4,561 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும் தலைவர், துணைத் தலைவர் மற்றும் பணியாளர் நியமனங்களில் இடஒதுக்கீட்டு முறை மீறப்பட்டு, பட்டியல், பழங்குடியினர், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் தேங்கிக்கிடக்கும் 27,641 பின்னடைவுக் காலிப் பணியிடங்களை சிறப்புத் தேர்வு மூலம் உடனடியாக நிரப்பிட வேண்டியது அவசியமாகும். மேலும், நீதித்துறை, இந்து சமய அறநிலையத்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் கூட்டுறவுத்துறை ஆகியவற்றில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களுக்கான உரிய பணி நியமனங்களைச் சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்தி, சமூக நீதியில் தமிழகம் தொடர்ந்து முன்மாதிரியாகத் திகழவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

வ.எண் பொறுப்பு மொத்த பணியிடங்கள் BC SC ST

1. செயலாளர் 15 15 - -

2. கிளார்க் 15 14 - 1

3. உதவி செயலாளர் 15 - - -

4. சேல்ஸ்மேன் 50 47 3 -

5. வாட்ச்மேன் 15 14 1 -

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.