திண்டுக்கல்லில் சமூக நல்லிணக்க இப்தார்
8 Mar 2026, 3:42 pm
<p><strong>திண்டுக்கல்லில் சமூக நல்லிணக்க இப்தார்</strong></p>
<p>திண்டுக்கல், மார்ச் 8- திண்டுக்கல் மாவட்ட ஐக்கிய ஜமா அத் பேரவை சார்பாக ஈத்கா மகாலில் ஞாயிற்றுக்கிழமை இப்தார் விழா நடைபெற்றது. கௌரவ ஆலோசகர் சி.கே.சி.எம்.மஹபூப்சுப ஹானி தலைமை வகித்தார். தலைவர் கே.எம்.ஏ.முகமது அலி முன்னிலை வகித்தார். திண்டுக்கல் நாடாளு மன்ற உறுப்பினர் ஆர்.சச்சி தானந்தம், பழனி எம்எல்ஏ செந்தில்குமார், மேயர் இள மதி ஜோதி பிரகாஷ், அப்துல் கடுமான் திபூர்சியஸ், அருட்தந்தை மரியநாதன், சிபிஎம் மாவட்டச் செயலா ளர் கே.பிரபாகரன், நகர ஒன்றிய நிர்வாகிகள் அரபு முகமது, சரத் குமார், கே.எஸ்.கணேசன், ஜோதி பாசு, பீர்முகமது யூசுபி, நிர் வாகி முகமது இலியாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
