அறந்தாங்கி செலக்சன் பள்ளியில் சமுக கண்காட்சி
16 Dec 2025, 3:51 pm
<p><strong>அறந்தாங்கி செலக்சன் பள்ளியில் சமுக கண்காட்சி</strong></p>
<p>அறந்தாங்கி, டிச.16- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி செலக்சன் கல்வி குழுமத்தின் ஒன்றான அறந்தாங்கி பஞ்சாத்தி-ஆலங்குடி சாலையில் உள்ள செலக்சன் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் சமூக கண்காட்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் கண்ணையா தலைமை வகித்தார். அறிவியல் கண்காட்சி போல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சிறப்புகளை படைப்புகளாக வடிவமைத்து, கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்தது. பண்டைய கால பயன்பாட்டில் உள்ள, கிடைப்பதில் அரிதான பொருட்களும் வைக்கப்பட்டு இருந்தன. 200 படைப்புகள் இருந்தன. சிறப்பு விருந்தினராக அறந்தாங்கி காவல் துறை அலுவலர் சரவணன் கலந்து கொண்டார். சிறப்பு அழைப்பாளர்களாக அறந்தாங்கி ரோட்டரி கிளப்பின் தலைவர் ரவிசங்கர், செயலாளர் காசிநாதன், நகர்மன்ற உறுப்பினர்கள் அசாருதீன், தீன் உள்ளிட்டவர்களும், பீர் சேக், ஜாகிர் உசேன் மற்றும் இருபால் பெற்றோர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.</p>
<p> </p>
