ஊர் கட்டுப்பாடு என்று சமூக விலக்கம்: காவல்துறையில் புகார்
1 Feb 2026, 3:51 pm
<p><strong>ஊர் கட்டுப்பாடு என்று சமூக விலக்கம்: காவல்துறையில் புகார்</strong></p>
<p>திருப்பூர், பிப்.1- தாராபுரத்தில் ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில், ஒருவரை குடும்பத் துடன் சமூக ரீதியாக ஒதுக்கி வைத் துள்ளனர். சட்டத்துக்குப் புறம்பான இதுபோன்ற காரியங்களில் ஈடுபடு வோர் மீது உரிய நடவடிக்கை எடுத்து பாதுகாப்பு வழங்கும் படி பாதிக்கப்பட்டவர் காவல் துறை யில் முறையிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் காட்டுநாயக்கன் தெருவில் கும ரேசன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இங்குள்ள சிலர் தங்களை ஊர் நாட்டாமை, ஊர் பெரியவர்கள் என்று சொல்லிக் கொண்டு, எந்தவித சட்ட அதிகாரமு மின்றி, ஊர் கட்டுப்பாடு என்ற பெய ரில் பொதுமக்கள் மீது சமூக ரீதியாக ஒதுக்கி வைக்கும் நடைமுறையை மேற்கொண்டு வருகின்றனர். கோவில் நிலம் தொடர்பான பொதுச்சுவர் பிரச்சனை காரண மாக, காட்டு நாயக்கன் தெருவில் வசித்து வந்த ஆறுமுகம் என்பவ ரது குடும்பத்தினரை ஊர் கூட்டம் நடத்தி சமூக ரீதியாக ஒதுக்கி வைத் துள்ளனர். இந்நிலையில், ஆறுமு கம் இறந்துவிட்ட தகவலறிந்து கும ரேசன் அவரது வீட்டிற்குச் சென்று மனிதாபிமான அடிப்படையில் இறுதி காரியங்களில் பங்கேற்றார். இதை காரணமாக கொண்டு ஊர் நாட்டாமை ஈஸ்வரன், தலைவர் கார்த்தி அப்பன், ஓடும் பிள்ளை காளி ரத்தினம் மற்றும் நிர்வாகிகள் எம்.சி. பரமசிவம், என்.முருகன், எம்.சத்தியமூர்த்தி, கே.திருமூர்த்தி (எ) ராஜன், பி. வெள்ளியங்கிரி ஆகியோர் கடந்த குடியரசு தினத் தன்று ஊர் கூட்டம் நடத்தி, கும ரேசனையும், அவரது குடும்பத்தின ரையும் சமூக ரீதியாக ஒதுக்கி வைப்பதாக தீர்மானம் நிறைவேற்றி யுள்ளனர். இந்த முடிவின் காரணமாக, கும ரேசனும் அவரது குடும்பத்தினரும் சமூக வாழ்வில் இருந்து விலக்கப் பட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ள னர். இதனால் தங்களது மனித மரி யாதை பாதிக்கப்பட்டுள்ளது. பாது காப்பு குறித்து அச்சம் உருவாகி யுள்ளது என்று தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளரிடம் கும ரேசன் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து, சனியன்று தாராபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் (பொ) குமாரிடம், மனு அளித்தார். குறிப்பாக, ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் இவ்வாறு தனிநபர் மற்றும் குடும்பங்களை சமூக ரீதியாக ஒதுக்கி வைப்பது சட்டத்திற்கு புறம் பானது. பொதுமக்களின் அமைதி யான வாழ்க்கையை பாதிக்கும் செயலாகும். எனவே, இத்தகைய செயலில் ஈடுபடும் மேற்கண்ட நபர் கள் மீது விசாரணை நடத்தி தனக் கும், தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். இது போன்ற ஊர் கட்டுப்பாடு நடவ டிக்கைகள் நடைபெறாமல் தடுக்க வும் குமரேசன் தனது புகார் மனு வில் கேட்டுக் கொண்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டக்குழு உறுப்பினர் என்.கனகராஜ் உடன் சென்று, இப் பிரச்சனையில் காவல் துறையினர் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக் கொண்டார். ஒரே சாதியை சேர்ந்தவர்கள் என்ற நிலை யில், இது தீண்டாமை கொடுமைக் குள் வராது. எனவே, காவல்துறை ஆய்வாளரை நேரில் அனுப்பி விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக டிஎஸ்பி குமார் உறுதி யளித்தார்.</p>
