தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

“வாசிப்பு, இயக்கமாக மாறினால்தான் சமூக மாற்றம் சாத்தியம்!”  பாராட்டு விழாவில் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் அழைப்பு

26 Mar 2026, 2:46 pm
“வாசிப்பு, இயக்கமாக மாறினால்தான் சமூக மாற்றம் சாத்தியம்!”  பாராட்டு விழாவில் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் அழைப்பு
<p><strong>&ldquo;வாசிப்பு, இயக்கமாக மாறினால்தான் சமூக மாற்றம் சாத்தியம்!&rdquo; &nbsp;பாராட்டு விழாவில் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் அழைப்பு</strong></p> <p>மதுரை, மார்ச் 26- &lsquo;செம்மலர்&rsquo; இதழின் ஆசிரியரும், மார்க்சிய எழுத்தாளருமான ச. &nbsp;தமிழ்ச்செல்வன் எழுதிய &ldquo;தமிழ்ச்சிறு கதையின் தடங்கள்&rdquo; என்ற ஆராய்ச்சி &nbsp;நூலுக்குச் சாகித்திய அகாடமி விருது கிடைத்துள்ளது. இதையொட்டி, மதுரை தீக்கதிர் வளாகத்தில் மார்ச் &nbsp;25 புதனன்று தீக்கதிர் இடைக்கமிட்டி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. தீக்கதிர் ஆசிரியர் எஸ்.பி. ராஜேந்தி ரன் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்துத் தனது உரையில், எளிய மக்களிடம் மார்க்சிய சிந்தனையை இலக்கிய மாகக் கொண்டு செல்லும் அறிவுசார் மரபைத் தமிழ்ச்செல்வன் உறுதியுடன் முன்னெடுத்துச் செல்வதாக குறிப்பிட்டார். &nbsp;இயக்கத்திற்கான பெருமை &nbsp;நிகழ்வில் பாராட்டுரை வழங்கிய கட்சியின் மாநில செயற்குழு உறுப்பி னர் மதுக்கூர் ராமலிங்கம் பேசுகை யில், &ldquo;விருது என்பது வாங்குவது அல்ல, பெறுவது. தற்காலிகமாக தடுக்கப்பட்டுப் பின் தமிழ்ச்செல்வ னுக்கு இந்த விருது கிடைத்தது அதன் பெருமையை உயர்த்தியுள்ளது. ஆயிரக்கணக்கான கதைகளை வாசித்து அவர் உருவாக்கிய ஆழ்ந்த &nbsp;ஆய்விற்கான அங்கீகாரம் இது. அவரை &lsquo;கட்சி எழுத்தாளர்&rsquo; என்று மட்டும் சுருக்கிவிட முடியாது; அனைத்து வாசகர்களாலும் ஏற்றுக் கொள்ளப்படும் இலக்கிய ஆளுமை அவர். புதிய தலைமுறையை வாசிப்புக்கு ஈர்க்கும் சக்தியான அவருக்குக் கிடைத்துள்ள இந்த விருது, தனிநபர் அங்கீகாரம் அல்ல, ஒட்டுமொத்த முற்போக்கு இலக்கிய இயக்கத்திற்குமான பெருமை&rdquo; என்று புகழாரம் சூட்டினார். வாசிப்பே சமூக மாற்றத்தின் திறவுகோல் நிறைவாக ஏற்புரை ஆற்றிய எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன், &ldquo;எனது எழுத்து வாழ்க்கையை உருவாக்கி யது &lsquo;செம்மலர்&rsquo; இதழும், கம்யூனிஸ்ட் இயக்க அனுபவங்களும்தான். விருது என்பது தற்காலிக அங்கீகாரம் என்றாலும், அதன் மூலம் புதிய வாசகர்களும், பிற மொழியாக்க வாய்ப்புகளும் உருவாகின்றன. அதே போல, &lsquo;திருப்பி அடித்த வரலாறு&rsquo; நூல் மூலம் கம்யூனிஸ்ட் இயக்க வர லாற்றைப் பதிவு செய்துள்ளோம். இந்த நூல், இளைஞர்களுக்கு வர லாற்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு முக்கிய ஆவணமாகத் திகழும். எனது எழுத்துக்களில் எனக்கு பெருமிதம் தருவது அந்த நூலுக்காக ஆற்றிய பணிதான். இன்றைய இயக்கங்களின் பலவீனமே வாசிப்பு இல்லாததுதான். புத்தகங்கள் என்பவை அலமாரியில் பூட்டி வைக்க அல்ல, வாசிப்பதற்கே! தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது வாசிக்க வேண்டும். அரைகுறை அறிவைத் தவிர்த்து, ஒரு படைப்பை முழுமையாக வாசித்து உள்வாங்க வேண்டும். வாசிப்பு என்பது மக்கள் இயக்கமாக மாற வேண்டும், அப்போதுதான் உண்மையான சமூக மாற்றம் சாத்தியமாகும்&rdquo; எனத் தனது உரையில் வலியுறுத்தினார். ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு முன்னதாகப் பேசிய விவசாயத் தொழிலாளர் சங்க அகில இந்திய துணைத் தலைவர் ஏ. லாசர், கம்யூ னிஸ்ட் இயக்க வரலாற்றை ஆவ ணப்படுத்திய அவரது &lsquo;திருப்பியடித்த வரலாறு&rsquo; நூல் எதிர்காலத் தலை முறைக்கான வழிகாட்டி என்றும், &nbsp;இயக்க வரலாற்றைப் புரிந்துகொள்ள இது ஒரு முக்கிய ஆதாரம் என்றும் கூறினார். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எஸ். பாலா பேசுகை யில், ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை வாசித்து, பல ஆண்டுகால உழைப்பில் அவர் உருவாக்கிய இந்த ஆய்வு நூல், உயர்நிலை ஆராய்ச்சிக்கு இணையானது எனப் &nbsp;பாராட்டினார். நிகழ்வில் வி. பரமேஸ்வரன், மா. கணேசன், இரா. விஜயராஜன், ஸ்ரீ ரசா, தி. வரதராஜன், அ.மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.