தென்பெண்ணை ஆற்றில் மணல் கடத்தல் தீவிரம் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
28 Mar 2026, 4:13 pm
<p><strong>தென்பெண்ணை ஆற்றில் மணல் கடத்தல் தீவிரம் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை</strong></p>
<p>கிருஷ்ணகிரி, மார்ச் 28- தேர்தல் பணிகளில் அரசு அலுவலர்களும், காவல்துறையினரும் மும்முரமாக ஈடுபட்டுள்ள நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் மணல் திருட்டு அதிகரித்து வருவதாகச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். போச்சம்பள்ளி வட்டம், காவேரிப்பட்டினம் ஒன்றி யத்திற்கு உட்பட்ட நெடுங்கல் தடுப்பணைப் பகுதியில் தற்போது நீர்வரத்து இன்றி மணல் தேங்கியுள்ளது. தென்பெண்ணை ஆறு வறண்டு காணப்படுவதைச் சாதகமாகப் பயன்படுத்தி, சுண்டகாப்பட்டி, மோட்டூர் மற்றும் நெடுங்கல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சமூக விரோத கும்பல்கள் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆற்றில் தேங்கியுள்ள மணலைச் சிமெண்ட் சாக்கு மூட்டைகளில் கட்டி, கழுதைகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மூலம் மறைவான இடங்க ளுக்குக் கொண்டு செல்கின்றனர். அங்குச் சேகரிக்கப்படும் மணல், பின்னர் டிராக்டர் மற்றும் டிப்பர் லாரிகள் மூலம் கடத்தப்பட்டு சட்டவிரோத மாக விற்பனை செய்யப் படுகிறது. பாதிக்கப்படும் வாழ்வாதாரம் தொடர்ந்து மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்க ளின் குடிநீர் ஆதாரம் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதா ரம் கேள்விக்குறியாகி வரு வதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். உள்ளூர் அரசு அலு வலர்களுக்கு இந்த மணல் திருட்டு குறித்துத் தெரிந்திருந்தும், அவர்கள் ஏனோ தெரியாதது போல் மெத்தனமாக இருப்ப தாகச் சமூக ஆர்வலர் கள் ஆதங்கம் தெரிவிக்கின்ற னர். எனவே, மாவட்ட நிர்வாகமும் காவல்துறை யும் உடனடியாகத் தலை யிட்டு, ஆற்றில் மணல் திருடப்படுவதைத் தடுத்து நிறுத்தவும், கடத்தல்காரர் கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என இப்பகுதி மக்களும் விவ சாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
<p> </p>
