ஆக்கிரமிப்பு ஈக்களை பிடிக்கும் மோப்ப நாய்கள்
7 Feb 2026, 1:22 pm
<p><strong>ஆக்கிரமிப்பு ஈக்களை பிடிக்கும் மோப்ப நாய்கள்</strong></p>
<p>அமெரிக்காவில் ஆக்ரமிப்பு உயிரினமான லாந்தர் பூச்சிகளை (Lanternflies) இல்லாமல் செய்ய விஞ்ஞானிகள் ஒரு நூதன வழியை இப்போது பின்பற்றுகின்றனர். லாந்தர் பூச்சிகள் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகின்றன. இவை பிளான்ட்ஹாப்பர் (planthopper) என்ற வகை பூச்சிகளில் ஒன்று. குறிப்பாக பைரோப்ஸ் என்னும் பேரினத்தைச் சேர்ந்தவை. இவை அளவில் பெரியவை. தலை, ஒரு நீண்ட மூக்கு போன்ற அமைப்பைக் கொண்டவை. முட்டைகளை மோப்பம் பிடிக்கும் நாய்கள் பயிற்சி பெற்ற நாய்கள் மரங்கள், பழப் பயிர்களை ஆக்கிரமிக்கும் இந்த உயிரினங்க ளின் முட்டைகளை மோப்பம் பிடித்து அழித்து அவற்றின் பரவலை தடுக்கின்றன. உடலில் அடையாளங்களுடன், இலைகளில் தத்திச் செல்லும் இயல்புடைய இவை அமெரிக்கா வில் பத்தாண்டுகளுக்கு முன்பு முதல்முறை யாக கண்டுபிடிக்கப்பட்டன. கிழக்கு கடலோரப் பகுதிகள், மத்திய மேற்குப் பகுதிகளில் படிப் படியாகப் இவை பரவத் தொடங்கின. ஆனால் இப்போது அபரிமிதமான வேகத்து டன் பரவும் இவற்றின் வேகத்தை தாமதப்படுத்த விஞ்ஞானிகள் ஒரு புதிய ஆயுதத்தைக் கண்டு பிடித்துள்ளனர். பயிற்சி பெற்ற நாய்கள் இந்த பூச்சிகளின் முட்டைகள் பொரிக்கப்படும் முன்பே அவற்றை மோப்பம் பிடித்து அழிக்கின் றன. இவற்றால் மனிதர்களுக்கு தீங்கு ஏற்படு வதில்லை என்றாலும் இவை மரங்கள், பழப் பயிர்களை நாசப்படுத்துகின்றன. எழுபதிற்கும் மேற்பட்ட தாவரங்களின் சாற்றை குடிக்கும் இவை 2024 ஆம் ஆண்டில் இருந்து கிளீவ்லாந்து பகுதியில் உள்ள மரங்கள், குத்துச்செடிகள், பூங்கா பெஞ்சுகள், நிலப் பரப்பில் உள்ள பாறைகள், பாலங்களில் உள்ள தூண்களில் மறைந்திருக்கும் இந்த பூச்சி களின் முட்டைக் குவியல்களை தேடும் வேலை யை நான்கு நாய்கள் தொடங்கின. ஒவ்வொரு முட்டையும் 30 முதல் 50 பூச்சிகளை பொரிக்கும். “இத்திட்டம் தொடங்கியதில் இருந்து இது வரை நான்காயிரத்திற்கும் மேற்பட்ட முட்டைக் குவியல்கள் நாய்களால் அழிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் திராட்சை, மற்ற பழ மரங்கள், கடின மரப்பகுதிகளில் சாறு உறிஞ்சும் சுமார் 2,00,000 பூச்சிகள் கொல்லப்பட்டுள்ளன” என்று கிளீவ்லாந்து மாநகர பூங்கா பகுதியின் மூத்த சூழல் பாதுகாப்பு மேலாளர் கன்னீ ஹார்ஸ்மேன் (Connie Hausman) கூறுகிறார். கடந்த 2025 ஏப்ரலில்ஒரு சில மணி நேரத்திற் குள் இந்த நாய்கள் கிளீவ்லாந்து மாநகர பூங்கா விலங்கு காட்சிச் சாலையில் 1,100 முட்டைக் குவியல்களை கண்டுபிடித்து அழித்தன. என்றா லும் எல்லா நாய்களும் தம் விருப்பப்படி முட்டை களைத் தேடிச் செல்லமுடியாது. எல்லா நாய்க ளுக்கும் நல்ல மோப்பத் திறன் உண்டு. ஆனால் அவை அனைத்தும் இந்த வேலைக்கு தகுதி யானவை இல்லை. தம் திறனை வெளிப்படுத்த இதற்கான தேர்வில் அவை வெற்றிபெற வேண்டும். நாய்களுக்கும் தேர்வு இந்த திட்டம் வெர்ஜீனியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தலைமையில் செயல் படுகிறது. தனித்துவம் வாய்ந்த கறுப்புப் புள்ளி கள், பிரகாசமான சிவப்பு இறக்கை அடை யாளங்களால் சுலபமாகக் கண்டறியப்படும் இவை கிழக்கு ஆசியாவை தாயகமாகக் கொண்டவை. கநைன் மக்கள் அறிவியல் ஆய்வு (Canine Citizen Science Study) என்று அதிகாரப்பூர்வமற்ற பெயரில் அழைக்கப்படும் இத்திட்டத்திற்கு யுஎஸ் வேளாண் துறை நிதி யுதவி வழங்குகிறது. வெர்ஜீனியா தொழில்நுட்பப் பல்கலைக் கழகப் பேராசிரியர்களால் டெக்சாஸ் ஆய்வா ளர்களுடன் இணைந்து செல்லப் பிராணி களாக நாய்களை வளர்க்கும் உரிமையாளர் களிடம் இத்திட்டத்திற்கு நாய்களை அனுப்பி உதவுமாறு கோரப்பட்டது. தற்போது செய லில் ஈடுபட்டுள்ள நான்கு நாய்கள் வெர்ஜீனியா விஞ்ஞானிகளால் முட்டைகளை மோப்பம் பிடிக்க பயிற்சிகள் வழங்கப்பட்டன. இவை ஒரு முட்டைக் குவியலை கண்டு பிடித்தால் அவை தம் உரிமையாளரிடம் இருந்து பரிசு பெறுகின்றன. இவை மண் போல இருக்கும் முட்டைக் குவியல்களை தேய்த்து அழிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் பெண் பூச்சிகள் ஆகஸ்ட் கடைசி முதல் நவம்பர் வரை அல்லது முதல் உறைபனி காலத் தில் முட்டைகளை இடுகின்றன. குளிர்காலத் தில் வளர்ச்சி அடைந்த பூச்சிகள் உறைபனி யில் உறைந்து அழிகின்றன. ஆனால் அவை இடும் முட்டைக் குவியல்கள் உயிருடன் வாழ்கின்றன. இப்பூச்சிகள் மரங்களின் தண்டுகள், தொலைபேசிக் கம்பங்கள், பாறைகள், வாக னங்களின் அடிப் பகுதிகள் போன்ற பல்வேறு பரப்புகளில் முட்டைகளை இடுகின்றன. ஃப்ளிண்ட் (Flint) என்ற நாயின் உரிமையாள ரும் வெர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் இதற்காக பயிற்சி பெற்றவருமான சாலி டிக்கின்ஸன் (Sally Dickinson) இந்த திட்டத்தில் முன்னோடியாக உள்ளார். வெர்ஜீனியா தொழில்நுட்ப விவசாய மையத்திற்கு ஃப்ளிண்ட்டை அழைத்துச் சென்றபோது விஞ்ஞானிகளின் தேர்வில் ப்ளிண்ட் சிறந்த நுகரும் சக்தியைப் பெற்றி ருப்பதை அறிந்தார். டிக்கின்ஸன் மற்ற உரிமை யாளர்களிடமும் தங்கள் செல்லப் பிராணி களை பயிற்சிக்கு அழைத்துவரும்படி ஊக்கு வித்தார். எல்லா நாய்களும் நல்ல மோப்ப சக்தி உடையவை. முட்டைகளை அழிக்கும் திறன் எல்லா இன நாய்களுக்கும் உள்ளது. என்றாலும் மென்மையான மூக்குடைய நாய்களால் வெப்பமான சூழ்நிலையில் ஐந்து மணி நேரம் தொடர்ந்ந்து செயல்படமுடியாது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆக்கிரமிப்பு உயிரினங்களை அழிக்கும் இந்த மக்களின் பங்கேற்புடன் நடைமுறைப்படுத்தப்படும் புதிய திட்டம் சூழலுக்கு நட்புடையது. இது உலகிற்கு ஒரு முன் மாதிரியாக விளங்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.</p>
<p> </p>
