தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தெற்கு ரயில்வே புதிய தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியாக எஸ்.என். நாராயண் பொறுப்பேற்பு

13 May 2026, 10:17 pm
தெற்கு ரயில்வே புதிய தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியாக எஸ்.என். நாராயண் பொறுப்பேற்பு
<p><strong>தெற்கு ரயில்வே புதிய தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியாக எஸ்.என். நாராயண் பொறுப்பேற்பு</strong></p><p>மதுரை, மே 13- தெற்கு ரயில்வேயின் புதிய தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியாக எஸ்.என். நாரா யண் புதன்கிழமை பொறுப் பேற்றுக் கொண்டார். இதற்கு முன்பு அவர், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சரின் தனிச் செயலா ளராக பணியாற்றி வந்தார். 2010ஆம் ஆண்டு இந்திய ரயில்வே போக்கு வரத்து சேவையில் இணைந்த எஸ்.என்.நாராயண், பயணி கள் வசதி, ரயில்வே செயல் திறன், டிஜிட்டல் தகவல் தொடர்பு மற்றும் பொதுமக்கள் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தெற்கு ரயில்வேயின் பல்வேறு கோட்டங்களில் வர்த்தக மற்றும் இயக்கப் பிரிவுகளில் முக்கிய பொறுப்பு களை வகித்துள்ளார். தொட ர்ந்து, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரியல் தொழில்நுட்பத் துறையில் துணைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், திருச்சிராப்பள்ளி கோட்டத்தின் மூத்த கோட்ட வர்த்தக மேலாளர், தெற்கு ரயில்வே துணை தலைமை இயக்க மேலாளர் (போக்கு வரத்து பாதுகாப்பு), சென்னை மற்றும் பாலக்காடு கோட்டங்க ளின் கோட்ட வர்த்தக மேலா ளர், சேலம் கோட்ட இயக்க மேலாளர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பதவிகளையும் வகித் துள்ளார். இந்திய ரயில்வேயின் பல முக்கிய திட்டங்கள் மற்றும் கொள்கை செயல்பாடுகளி லும் அவர் பங்காற்றியுள்ளார். கோயம்புத்தூரில் உள்ள பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் இயந்திரவியல் பொறியியல் பட்டம் பெற் றுள்ள எஸ்.என்.நாராயண், இதற்கு முன்பு தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றிய எம்.செந்தமிழ்ச் செல்வனைத் தொடர்ந்து இந்தப் பொறுப்பை ஏற் றுள்ளார். எம்.செந்தமிழ்ச் செல்வன் தற்போது ராயபுரம் லோகோ ஷெட்டின் மூத்த கோட்ட மின்பொறியாளராக மாற்றப்பட்டுள்ளார். இத்தகவலை தெற்கு ரயில்வே மூத்த மக்கள் தொடர்பு அதிகாரி டி.ஓம் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.