ஸ்மார்ட் மீட்டர் திட்டம்: எதிர்ப்பு பிரச்சாரம்!
1 Nov 2026, 1:23 am

ஸ்மார்ட் மீட்டர் திட்டம்: எதிர்ப்பு பிரச்சாரம்!

உடுமலை, அக்.31-தமிழ்நாடு மின்வாரிய மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படுவதால் மின் நுகர்வோர், விவசாயிகள், சிறு, குறு தொழில் முனைவோர் மற்றும் வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.உடுமலை வட்ட தமிழ்நாடு மின்வாரிய கூட்டு நடடிக்கைக்குழு சார்பில் நடைபெற்ற இந்த பிரச்சாரம், உடுமலைப்பேட்டை பேருந்து நிலையம் மற்றும் முக்கிய கடைவீதிகளில் வெள்ளியன்று நடைபெற்றது. முன்னதாக மின் ஊழியர்கள், உடுமலை நகரத்திற்குள் மக்கள் நெருக்கமாக உள்ளபகுதிகளில், பொதுமக்களையும் வணிகர்களையும் நேரில் சந்தித்து ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கப்பட்டது. இப்பிரச்சாரத்தில், மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் கே. வெள்ளையங்கிரி, எஸ். ஜெகானந்தன், நிர்வாகிகள் தண்டபாணி, அங்கமுத்து மற்றும் எம்ப்ளாயீஸ் பெடரேசன் நிர்வாகி பாலதண்டபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தருமபுரி

தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற பிரச்சாரத்திற்கு, மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச்

செயலாளர் பி.ஜீவா தலைமை வகித்தார். இதில், மாவட்டச்செயலாளர் தீ.லெனின் மகேந்திரன், எல்பிஎப் மாவட்டச் செயலாளர் சக்திவேல், அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் அன்பழகன், ஏஇஎஸ்யூ மாவட்டச் செயலாளர் விநாயகமூர்த்தி, எம்ளாயீஸ் பெடரேசன் மாவட்டச் செயலாளர் கோகுல் தாஸ், என்எல்ஒ மாவட்டச் செயலாளர் தர்மலிங்கம்,ஏஐசிசிடியு மாநிலத் தலைவர் சி.முருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.