தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

12 Mar 2026, 4:20 pm
சென்னை விரைவு செய்திகள்

சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதர் நியமனம்

சென்னை, மார்ச் 12- சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் தலைமைப் பொறுப்பை மரியானா எல். நெய்ஷுலர் ஏற்றுக்கொண்டார். சர்வதேசப் பொருளாதார விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்ற இவர், ஏற்கெனவே மாஸ்கோ, துபாய் மற்றும் ஜெருசலேம் உள்ளிட்ட முக்கிய மையங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட வர். உலக அளவில் அதிக விசாக்களைக் கையாளும் மையங்களில் ஒன்றாகச் சென்னைத் தூதரகம் திகழ்வதால், மாணவர் மற்றும் வேலை விசாக்களுக்கான காத்திருப்பு காலத்தைக் குறைப்பதில் இவர் முக்கியப் பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேலூர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

வேலூர், மார்ச் 12- வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகத்திற்கு புதனன்று மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதில், நீதி மன்ற வளாகத்தில் நச்சு வாயு குப்பிகள் வைக்கப்பட்டிருப்ப தாகவும், பகல் 1:10 மணியளவில் வெடிகுண்டு வெடிக்கும் என்றும் தமிழில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் வெடிகுண்டு நிபு ணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் இரண்டு மணி நேரம் தீவிர சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் வெடிகுண்டு ஏதும் கண்டறியப்படாததால், அது வெறும் மிரட்டல் புரளி என்பது உறுதியானது. இந்தச் சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை

மேற்கொண்டு வருகின்றனர். விளைநிலங்களில் யானைகள் புகுந்து சேதம்

கே.வி.குப்பம், மார்ச் 12- வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மாளியாப்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்க ளில் கடந்த சில நாட்களாக யானைகள் புகுந்து விவ சாய நிலங்களைச் சேதப்படுத்தி வருகின்றன. செவ்வா யன்று  இரவு விளைநிலங்களுக்குள் புகுந்த யானைகள், அங்கிருந்த நெற்பயிர்கள் மற்றும் வாழைத் தோட்டங்களைப் பெருமளவில் நாசம் செய்தன. தகவலறிந்த காட்பாடி வனச்சரக அலுவலர் தலை மையிலான வனத்துறையினர், யானைகளை விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சேதமடைந்த பயிர்களை வருவாய்த்துறையினர் கணக்கெடுத்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், யானைகள் ஊடுருவலைத் தடுக்க நிரந்தரத் தீர்வு காணவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மண்ணிவாக்கம் கூட்ரோட்டில்  ஜீப்ரா கிராசிங் வசதி அமைத்திடுக  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

செங்கல்பட்டு, மார்ச் 12- செங்கல்பட்டு மாவட்டம், மண்ணி வாக்கம் கூட்ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள டிராபிக் சிக்னல் பொதுமக்களின் பாது காப்புக்கும் போக்குவரத்து ஒழுங்குக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த சிறப்பான நடவடிக்கைக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. அதே நேரத்தில், அந்த கூட்ரோட்டில் சாலையை கடக்க பொதுமக்களுக்கு ஜீப்ரா கிராசிங் வசதி இல்லாததால் பலர் ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்கொள்கிறார்கள். தினமும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட பலர் இந்தச் சந்திப்பைக் கடக்க வேண்டியுள்ளது. தெளிவான ஜீப்ரா கிராசிங் இல்லாததால் வாகன ஓட்டிகள் பாதசாரிகளை கவனிக்காமல் செல்லும் நிலையும் காணப்படுகிறது. ஜீப்ரா கிராசிங் அமைத்தால் பாதசாரிகள் பாதுகாப்பாக சாலையை கடக்க முடியும். பொதுமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மண்ணிவாக்கம் கூட்ரோட்டில் உடனடியாக ஜீப்ரா கிராசிங் அமைத்து தர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

செய்தி சேகரிக்க விடாமல் காவல் ஆய்வாளர் அராஜகம்  துணைக் கண்காணிப்பாளரிடம் பத்திரிகையாளர்கள் புகார்

மதுராந்தகம், மார்ச் 12-  செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதியில் சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து தொடர்பாக சிவசேனா கட்சியைச் சேர்ந்த தாமோதர பெருமாள் மற்றும் காக்கா பாலாஜி ஆகி யோரை போலீசார் கைது செய்தனர். இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல் நிலையத்திலிருந்து போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது, மது ராந்தகம் செய்தியாளர் கிருஷ்ணமூர்த்தி இக்காட்சிகளைத் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். வீடியோ எடுத்த செய்தியாளரை இடைமறித்த மேல்மருவத்தூர் காவல் ஆய்வாளர் சுரேந்திரன் தடுத்துள்ளார். செய்தியாளர் தனது பணியைத் தொடர்ந்த போது ஆத்திரமடைந்த ஆய்வாளர், செய்தியாளரின் செல்போனை வலுக்கட்டாயமாகப் பிடுங்க முயற்சித்தார் மேலும் அநாகரீகமாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. ஊடக சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் செயல்பட்ட சுரேந்திரன் மீது உடனடியாகத் துறை ரீதியான நட வடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மதுராந்தகம் பகுதி பத்திரிகையாளர்கள் ஒன்றிணைந்து மதுராந்தகம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை நடைபெற்ற பகுதியில் கிராம இளைஞர்கள் கண்காணிப்பு கேமரா

மதுராந்தகம், மார்ச் 12- மதுராந்தகம் அடுத்த தேவாதூர் செல்லும் சாலையில், கடந்த 9ம் தேதி நள்ளிரவில் 14 வயது சிறுமியை அத்தி வாக்கம் ஏரிக்கு கடத்தி சென்று பாலியல் வன்கொடு செய்தனர்.  இதுதொடர்பாக, பாலாஜி,தாமோதர பெருமாள் ஆகிய இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், மேற்கண்ட பகுதி வனத்துறைக்கு சொந்த மான இடம் என்பதாலும் இருள் சூழ்ந்து காணப்படுவதாலும் மற்றும் போலீஸாரின் ரோந்து பணிகள் முறையாக இல்லாதத தால், அப்பகுதியில் தொடர் குற்ற சம்பவம் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் சிசிடிவி கேமரா அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்பேரில், மாரிபுத்தூர், காவாத்தூர் முருகம்பாக்கம் ஆகிய பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் ரூ.40 ஆயிரம் செலவில் சிசிடிவி கேமரா முருக்கம்பாக்கம் கூட்டு சாலை மாரிமுத்து கூட்டு சாலை ஆகிய பகுதி களில் பொருத்தப்பட்டது.  மேலும், கேமராவில் பதிவாகும் காட்சி களை கொண்டு போலீசார் உரிய நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும் மற்றும் முறையாக ரோந்து பணிகளில் போலீசார் ஈடுபட்டு, கிராம பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பூக்கடை பகுதி வழியாக பேருந்துகளை மீண்டும் இயக்கிய அரசுக்கு சிறு வியாபாரிகள் நன்றி

சென்னை, மார்ச் 12- சென்னை பிராட்வே பேருந்து நிலையம் ராயபுரம் பகுதிக்கு மாற்றப்பட்டதால், பூக்கடை என்.எஸ்.சி. போஸ் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியா பாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக சென்னை நகர சிறு வியாபாரிகள் சங்கம் சார்பில் அளிக்கப் பட்ட கோரிக்கையை ஏற்று, மீண்டும் 120, 35, 42, 242 ஆகிய நான்கு முக்கிய வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் அனுமதி அளித்துள்ளது. அரசின் இந்த விரைவான நட வடிக்கைக்குச் சங்கத்தின் பொதுச் செய லாளர் எம். அபுதாகிர் நன்றி தெரிவித்துள்  ளார். அதே வேளையில், வியாபாரிகள், பொதுமக்களின் வசதிக்காக விடுபட்ட கோயம்பேடு, தாம்பரம், திருவான்மியூர், செங்குன்றம், பெரம்பூர் உள்ளிட்ட இதர முக்கிய வழித்தடங்களில் பேருந்துகளை மீண்டும்  இயக்க போக்குவரத்து துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கேஸ் சிலிண்டர் முன்பதிவு  செய்ய 6 எளிய வழிகள்

புதுதில்லி, மார்ச் 12- நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் முன்பதிவு அதிகரித்துள்ளதால், தொலைபேசி அழைப்புகளில் ஏற்படும் தட்டுப்பாட்டைத் தவிர்க்க 6 மாற்று வழிகளை எரிவாயு முகவர்கள் பரிந்துரைத்துள்ளனர். வாடிக்கையாளர்கள் அந்தந்த நிறுவனங்களின் வாட்ஸ்அப் எண்கள் (இண்டேன்: 7588888824, எச்பி: 9222201122, பாரத்: 1800224344) மூலமாகவோ அல்லது குறுஞ்செய்தி வாயிலாகவோ எளிதாகப் பதிவு செய்யலாம். மேலும், ‘IndianOil ONE’, ‘HP Pay’, ‘Hello BPCL’ போன்ற அதிகாரப்பூர்வ செயலிகள் மற்றும் ஜிபே, போன்பே போன்ற தளங்கள் மூலமும் முன்பதிவு செய்து கட்டணம் செலுத்தலாம். இணைய வசதி இல்லாதவர்கள் நிறுவனங்களின் பிரத்யேக எண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தும் சிலிண்டர்களைப் பெற முடியும். சர்வர் நெரிசலால் அழைப்புகள் கிடைக்காத நிலையில், இத்தகைய நவீன வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் தேவையற்ற அலைச்சலைத் தவிர்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பட்டுள்ளது. மாணவர்களுக்காகவே  பிரத்யேக புதிய செல்போன்

சென்னை, மார்ச் 10- அதிக செயல்திறன்மிக்க ஐக்யூஓஓ பிராண்ட், மாணவர்களின் வேகமான வாழ்வியலுக்கு ஈடுகொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய ‘இசெட்11எக்ஸ்’ ஸ்மார்ட்போனை மார்ச் 12 அன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போனில் 7200 எம்ஏஎச் திறன் கொண்ட மிகப்பெரிய பேட்டரி இடம்பெற்றுள்ளது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 40 மணிநேரம் வீடியோ பார்க்கவும், 15 மணிநேரம் கேம் விளையாடவும் முடியும்.இதில் 44 வாட்ஸ் பிளாஷ் சார்ஜ் வசதி மற்றும் 6 வருட பேட்டரி உத்தரவாதம் வழங்கப்படுகிறது. மீடியாடெக் டைமென்சிட்டி 7400 டர்போ பிராசஸர் கொண்ட இது, கல்வி மற்றும் பொழுதுபோக்கு என அனைத்திற்கும் தடையற்ற வேகத்தை உறுதி செய்யும்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.