சின்னாளப்பட்டி பகுதிகளில் சின்ன வெங்காய விதை உற்பத்தி அதிகரிப்பு
20 Jan 2026, 2:46 pm
<p><strong>சின்னாளப்பட்டி பகுதிகளில் சின்ன வெங்காய விதை உற்பத்தி அதிகரிப்பு</strong></p>
<p>சின்னாளப்பட்டி, ஜன.20- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நடுப்பட்டி, மேலக்கோட்டை, அம்பாத்துரை, பச்ச மலையான் கோட்டை உள்ளிட்ட பகுதி களில் சின்ன வெங்காயப் பயிர்கள் பரவலாக சாகுபடி செய்யப்பட்டுள்ளன. சின்ன வெங்காயம் பொதுவாக இரண்டு முறைகளில் சாகுபடி செய்யப் படுகிறது. ஒன்று, விதை வெங்கா யத்தை நேரடியாக நடவு செய்து சாகு படி செய்வது. மற்றொன்று, வெங்காயப் பூக்களில் இருந்து பெறப்படும் விதை களை நாற்றாக வளர்த்து, பின்னர் நடவு செய்வது. இதில் இரண்டாவது முறையில் சாகுபடி செய்தால் மகசூல் அதிகம் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஒரு ஏக்கரில் சின்ன வெங்காயம் பயிரிடுவதற்கு சுமார் 500 கிலோ வரை விதை வெங்காயம் தேவைப்படு கிறது. ஒரு கிலோ விதை வெங்காயம் ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அறுவடை செய்யப்பட்டு 45 நாட்கள் கடந்த விதை வெங்காயத்தை மட்டுமே நடவு செய்ய முடியும் என்பதால், இந்த முறையில் செலவு அதிகமாகிறது. இதற்கு மாற்றாக, சின்ன வெங்கா யப் பூக்களில் இருந்து பெறப்படும் விதைகள் ஒரு ஏக்கருக்கு ஒன்றரை கிலோ மட்டுமே போதுமானதாக உள் ளது. இந்த விதைகள் ஒரு கிலோ ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை விற் பனை செய்யப்படுகின்றன. செலவு குறைவாக இருப்பதாலும், மகசூல் அதிகமாக கிடைப்பதாலும் பெரும்பாலான விவசாயிகள் இந்த முறையை விரும்பி வருகின்றனர். இதன் காரணமாக, சின்ன வெங்காய விதைகளுக்கு நல்ல வரவேற்பும், அதிக மவுசும் ஏற்பட்டுள் ளது. தற்போது சின்னாளப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சின்ன வெங்காயப் பூக்கள் பூத்துக் குலுங்கி, விதை உற்பத்திக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “விதை வெங்காயம் மூலம் நடவு செய்வதை விட, விதை மூலம் சாகுபடி செய்வதில் செலவு குறைந்து லாபம் அதிகம் கிடைக்கிறது. இதனால் சின்ன வெங்காய விதை களுக்கு நல்ல விலை கிடைக்கிறது” என்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் சின்ன வெங்காய விதைகளை கரூர், நாமக்கல், மதுரை, சென்னை, கோய ம்புத்தூர், தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் விவசாயிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.</p>
