தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பெரிய பண முதலாளிகளை காப்பதற்காக சிறிய விடுதிகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை

12 Dec 2025, 4:54 pm
பெரிய பண முதலாளிகளை காப்பதற்காக சிறிய விடுதிகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை
<p><strong>பெரிய பண முதலாளிகளை காப்பதற்காக சிறிய விடுதிகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை</strong></p> <p>உதகை, டிச.12- நெல்லியாளம் பகுதியிலுள்ள பெரிய பண முதலாளிகளை காப்பதற்காக, சிறிய விடுதிகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்ததாக நகராட்சி நிர்வாகத்தினர் மீது புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து கூடலூர் மக்கள் இயக்கத்தி னர் தமிழக முதல்வர், நகராட்சிகள் நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதா வது: &lsquo;வணிக கட்டிட அனுமதி இல்லாமல் செயல்பட்டு வரும் தங்கும் விடுதிகளை பூட்டி &nbsp;சீல் வைக்க வேண்டும்&rsquo; என்ற உயர்நீதிமன் றத்தின் உத்தரவின் அடிப்படையில், நெல்லி யாளம் நகராட்சி எல்லைக்குள் ஏராளமான பெரிய விடுதிகள் சீல் வைக்க வேண்டிய கட் டாயம் ஏற்பட்டது. அவர்களை பாதுகாப்ப தற்காக குறிப்பிட்ட மூன்று விடுதிகளை மட் டும் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அவற் றில் ஒன்று நாடுகாணி பகுதியில் உள்ளது. இந்த விடுதிக்கு அனைத்து உரிமங்களும் முறையாக பெறப்பட்டுள்ளன. வட்டாட்சிய ரின் கட்டிட உரிமம் உட்பட அனைத்து தடை யில்லா சான்றுகளும் பெறப்பட்டு அனைத் தும் ஆய்வு செய்த பின்னர் நெல்லியாளம் நகராட்சி நிர்வாகம் இந்த விடுதிக்கு தொழில் உரிமம் வழங்கியுள்ளது. இதற்கான கால அள வும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை உள் ளது. அப்படி இருக்கும்போது உரிமம் வழங் கிய நகராட்சி நிர்வாகமே விடுதியை பூட்டி &nbsp;சீல் வைத்துள்ளது. அதிகார துஷ்பிரயோ கம் என்பதுடன், பெரிய பண முதலாளிகளை காப்பாற்றுவதற்காக, நீதிமன்றத்தில் கணக்கு காண்பிப்பதற்காக சிறிய விடுதியை இப்படி செய்துள்ளதாக சந்தேகப்படுகி றோம். எனவே, சட்டத்திற்கு புறம்பாக செயல் பட்ட நகராட்சி ஆணையர் மீதும் சம்பந்தப் பட்ட ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து, விடுதியை திறக்க உத்தரவிட வேண்டும். இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.