தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விண்ணை முட்டும் விமானக் கட்டணம் : பயணத்தை குறைக்கும் இந்தியர்கள்

4 Nov 2026, 10:00 pm
விண்ணை முட்டும் விமானக் கட்டணம் : பயணத்தை குறைக்கும் இந்தியர்கள்

விண்ணை முட்டும் விமானக் கட்டணம் : பயணத்தை குறைக்கும் இந்தியர்கள்

புதுதில்லிதீபாவளி நெருங்கி விட்ட நிலையில் தனியார் விமான நிறுவனங்கள் விமானக் கட்டணத்தை 700 சதவீதம் வரை உயர்த்தியுள்ளன. இது தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல மனுவை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் அண்மையில் மறுத்ததுடன், “அவ்வளவு கட்டணம் இருந்தால் விமானத்தில்பயணிக்க வேண்டாம்” எனவும் கருத்துத் தெரிவித்திருந்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இந்நிலையில், இந்தியாவில் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை கடுமையாகச் சரிந்து வருவதாகத் திமின்ட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமானக் கட்டணங்கள் உயர்வு காரணமாக இந்தியர்கள் விமானப்பயணங்களைத் தவிர்த்து வருவதை சிவில் விமானப் போக்குவரத்து பொது இயக்ககம் (DGCA) மற்றும் பிற நிறுவனங்களின் புள்ளிவிவரங்கள் அடிப்படையில் தி மின்ட் தெரிவித்துள்ளது. இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து கடந்த 15 மாதங்களாக பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது. 2026 மே மாதத்தில் சராசரியாக112.5 பயணிகள் பயணித்துள்ளனர். இது ஜூன்மாதத்தில் 112.5 ஆகவும், ஜூலையில் 101.1 ஆகவும் சரிந்துள்ளது. ஆகஸ்ட் மாதம் 103.1 செப்டம்பர் மாதம் 102.9 என்ற அளவில் இருந்தாலும் கூடநிலைமை பெரியளவில் சீரடையவில்லை.2025 -2026 இல் நிலவிய அதிக மழைப்பொழிவு, இண்டிகோ (IndiGo) நிறுவனம் தொடர்ந்து விமானங்களை ரத்துசெய்தது, வர்த்தக மந்தநிலை மற்றும் மிக முக்கியமாக எரிபொருள் விலை உயர்வு ஆகியவை இச்சரிவுக்குமுக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

மேற்கு ஆசியப் பகுதியில் ஏற்பட்ட போர்ச் சூழல் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்ட போதிலும், அது விரைவில் மீண்டெழுந்தது. ஆனால், உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடர் பின்னடை

வையே சந்தித்து வருகிறது. 2026 ஜூன் மாதத்திலிருந்து சர்வதேச விமானப் பயணங்களின் அளவைக் காட்டிலும், உள்நாட்டு விமானப் பயணங்களின் வீழ்ச்சி விகிதம் மிக மோசமாகப் பதிவாகி

யுள்ளது.பணவீக்கத்தை விட 6 மடங்கு கட்டண உயர்வு அதேபோல பொதுவான போக்குவரத்து பணவீக்கத்தை விட விமானக் கட்டண உயர்வு மிக வேகமாகஅதிகரித்துள்ளது. 2026 செப்டம்பர் மாதத்தில் விமானக் கட்டண பணவீக்கம் 25.9 சதவிகிதம் என்ற உச்சத்தைத் தொட்டது. நாட்டின் பொதுவான போக்குவரத்துச் செலவு உயர்வைக் காட்டிலும் விமானக் கட்டணங்களின் உயர்வு 4 முதல் 6 மடங்கு வரை அதிகமாகஉள்ளது.தில்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற முக்கிய நகரங்களுக்கு இடையேயான விமானக் கட்டணம், இரண்டாம் வகுப்பு ஏசி இரயில் கட்டணத்தை விட சுமார்45 முதல் 186 சதவிகிதம் வரை கூடுதல் செலவு கொண்டதாக மாறியுள்ளது. சாதாரண நாட்களிலும் இது 25-30 சதவிகிதம் அதிகமாக இருக்கும்.

சர்வதேச வான்வழிப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) தரவுகளின்படி, இந்தியாவில் ஒரு சாதாரண குடிமகன் ஒரு விமான டிக்கெட்வாங்குவதற்குத் தேவையான பணத்தைச் சம்பாதிக்க சராசரியாக 17 நாட்கள் உழைக்க வேண்டியுள்ளது. பிற வளரும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது மிக மிகஅதிகமாகும்.

இந்நிலையில் அதிகரித்து வரும் விமான எரிபொருள் விலை மற்றும் இந்திய ரூபாயின் மதிப்புச் சரிவு ஆகியகாரணங்களால், வரும் நாட்களிலும் விமானக் கட்டணங்கள் உயர்ந்தே காணப்

படும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.