தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஜந்தர் மந்தர் போராட்டம் மாணவர்களுக்கும் சோனம் வாங்சுக்கிற்கும் சம்யுக்த கிசான் மோர்ச்சா ஆதரவு

9 Jul 2026, 9:27 pm
ஜந்தர் மந்தர் போராட்டம் மாணவர்களுக்கும் சோனம் வாங்சுக்கிற்கும் சம்யுக்த கிசான் மோர்ச்சா ஆதரவு
<p><strong>ஜந்தர் மந்தர் போராட்டம் மாணவர்களுக்கும் சோனம் வாங்சுக்கிற்கும் சம்யுக்த கிசான் மோர்ச்சா ஆதரவு</strong></p><p>புதுதில்லி, ஜூலை 9 - தேசிய தேர்வு முகமையை ரத்து செய்யக் கோரியும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜி னாமா செய்ய வலியுறுத்தியும் தில்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் போராட்டத்தில் சம்யுக்த கிசான் மோர்ச்சா (SKM) அமைப்பினர் நேரில் பங்கேற்று தங்களது ஆதரவை தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள், சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மற்றும் சி.ஜே.பி தலைவர் அபிஜித் தீப்கே ஆகியோரை ஜூலை 7 அன்று விவசாய அமைப்புகளின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா பிரதிநிதிகள் நேரில் சந்தித்து தங்களது முழுமையான ஒற்றுமையை யும் ஆதரவையும் வெளிப்படுத்தினர். ஒன்றிய கல்வி அமைச்சரின் ராஜினாமா, ஊழல் நிறைந்த தேசிய தேர்வு முகமையை கலைப்பது, தேர்வு முறைகேடுகளால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவது மற்றும் இந்த முறைகேடுகளில் தொடர்புடைய குற்றவாளிகளை கடுமையாக தண்டிப்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை இந்த பிரதிநிதிகள் குழு ஆதரித்தது. இந்த குழுவில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் ஹன்னன் முல்லா, பி. கிருஷ்ணபிரசாத், புஷ்பேந்திர தியாகி, ராஜன் ஷிர்சாகர் மற்றும் பாரதிய கிசான் யூனியன் (திகாயத்) அமைப்பின் தல்ஜீத் சிங் தாகர் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கங்களின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். கல்வித்துறையின் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு உடனே செவிசாய்க்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.