தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்குக! ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

1 Nov 2026, 1:30 am
ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்குக! ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
<p><strong>ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்குக! ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்</strong></p><p>சேலம், அக்.31-இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்திஎஸ்கேஎம் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் சேலம் கோட்டை பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையான எஸ் ஐ ஆர்-யை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்கேஎம் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் சனியன்று சேலம் கோட்டை பகுதியில் உள்ள பாரதஸ்டேட் வங்கி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவர் எ.அன்பழகன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலாளர் பூபேஸ், ஏஐகேஎம் மாவட்டத் தலைவர் அன்பு, ஐக்கிய விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் டி.கோவிந்தன், ஏஐ கேகேஎம்எஸ் மாவட்ட அமைப்பாளர் நடராஜன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சேகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி, சிபிஐ மாவட்டச் செயலாளர் என்.கே. செல்வராஜ், மாநிலக் குழு உறுப்பினர் ஏ.மோகன், ஐக்கிய விவசாயிகள் சங்க தலைவர் அரங்க. சங்கரய்யா, விஐகேஎம் மாநிலக் குழு உறுப்பினர் வி.அய்யந்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.