தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பெரும் போராட்டத்திற்கு தயாராகும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி நாடு முழுவதும் கிராம மகா பஞ்சாயத்துகள்

29 Sept 2026, 9:15 pm
பெரும் போராட்டத்திற்கு தயாராகும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி நாடு முழுவதும் கிராம மகா பஞ்சாயத்துகள்

பெரும் போராட்டத்திற்கு தயாராகும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி நாடு முழுவதும் கிராம மகா பஞ்சாயத்துகள்

புதுதில்லிநீண்ட காலப் போராட்டத்திற்குத் தயாராகும் வகையில், லக்கிம்பூர் கேரி தியாகிகள் நாளான அக்டோபர் 3 முதல்அக்டோபர் 23 வரை நாடு முழுவதும் கிராம மகா பஞ்சாயத்துகளை நடத்த ஐக்கிய விவசாயிகள் முன்னணி (எஸ்கேஎம்) அறைகூவல் விடுத்துள்ளது. கடந்த 2021 அக்டோபர் 3 அன்று, லக்கிம்பூர் கேரியில் போராட்டத்தில்ஈடுபட்ட விவசாயிகள் மீதுவாகனத்தை ஏற்றிப் படுகொலை செய்யப்பட்ட லவ்பிரீத் சிங், தல்ஜீத் சிங், நச்சத்தர்சிங், குருவிந்தர் சிங் மற்றும் பத்திரிகையாளர் ரதன் காஷ்யப் ஆகியோரின் தியாகத்தைப் போற்றும் வகையில்இந்த மகா பஞ்சாயத்துகள் நடத்தப்படுகின்றன.

போராட்டத்தைத் தீவிரப்படுத்த மூன்று முக்கிய தீர்மானங்கள் :

வருகிற நவம்பர் 26 முதல் விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து கிராமங்களை மையப்படுத்தி விவாதிக்கப்பட உள்ளது. இந்தக் கூட்டங்களில் மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன:

J 2021 டிசம்பர் 9 அன்று ஐக்கிய விவசாயிகள் முன்னணியுடன் செய்து கொள்ளப்பட்டஎழுத்துப்பூர்வஉறுதிமொழியை ஒன்றிய அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

J போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த 736 விவசாயிகளை கவுரவிக்கும் வகையில் தில்லி சிங்கு எல்லையில் தியாகிகள் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும்.

J வெளிப்படைத்தன்மையின்றி சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) மூலம் 13 கோடி வாக்காளர்களை நீக்கி, ஆளும்பாஜகவின் நலனுக்காகத் தேர்தலைத் திசைதிருப்பிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்கி வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு கிராம மகா பஞ்சாயத்தும் 10 தன்னார்வலர்களைத் தேர்ந்தெடுக்கும். சி2+50% குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டம், முழுமையான கடன் தள்ளுபடி, மின்சார தனியார்மயமாக்கல் மசோதா2025 மற்றும் தொழிலாளர் விரோத சட்டங்களை ரத்து செய்தல் உள்ளிட்ட 7 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தீவிரமான மக்கள் திரள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

கர்னாலில் பொதுக்குழு கூட்டம்

அக்டோபர் 12 அன்று ஹரியானா மாநிலம் கர்னாலில் நடைபெறும் ஐக்கிய விவ

சாயிகள் முன்னணியின் தேசிய கவுன்சில் மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் எதிர்காலப் போராட்ட நடவடிக்கைகள் மற்றும் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்த இறுதி முடிவு செய்யப்பட உள்ளன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.