திறன் விளையாட்டுப் போட்டி சேலம் இளைஞர் சாதனை
25 Nov 2025, 3:29 pm
<p><strong>திறன் விளையாட்டுப் போட்டி சேலம் இளைஞர் சாதனை</strong></p>
<p>சேலம், நவ 25 - உலக அளவில் நடைபெற்ற திறன் விளையாட்டுப் போட்டியில் வட்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதலில் தங்கம் வென்று சாதனைப்படைத்த சேலம் இளைஞருக்கு சேலம் ரயில் நிலையத்தில் உற்சாக வர வேற்பு அளிக்கப்பட்டது. உலக அளவில் தாய்லாந்து நாட்டில் நடை பெற்ற சர்வதேச உலக திறனறிதல் போட்டி யில் இந்தியாவின் சார்பாக பங்கேற்ற சேலம் பெரிய புதூர் பகுதியை சேர்ந்த கே. சஞ்சய் கண்ணா வட்டு எறிதல் போட்டியில் தங்கப்பதக்கமும், ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கமும் குண்டு எறிதல் போட்டி யில் வெள்ளி பதக்கமும் வென்று சாதனை படைத்தார். இந்நிலையில், சேலம் வருகை தந்த கே.சஞ்சய் கண்ணாவுக்கு சேலம் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விளை யாட்டு வீரரின் தந்தை கண்ணன், நாமக்கல் கபடி கழக செயலாளர் தமிழ்ச்செல்வன், முன்னாள் ஆவின் மேலாளர் சிவலிங்கம், முன்னாள் கபடி வீரரும், காவல் அதிகாரியு மான கென்னடி ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பெரிய புதூர் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.</p>
