முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

3 Jun 2026, 11:26 pm
சென்னை விரைவு செய்திகள்

எஸ்.ஜே.சூர்யா படப்பிடிப்பில் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி

சென்னை, ஜூன் 3- நடிகர் மற்றும் இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா இயக்கி, நடிக்கும் ‘கில்லர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்; மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். சென்னை பெரம்பூரில் உள்ள பின்னி மில் உள்ளரங்கில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் சண்டைக் காட்சி படப்பிடிப்பிற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. அப்போது, வெடிகுண்டு வெடிப்பது போன்ற காட்சிக்காகச் சிலிண்டரில் காஸ் நிரப்பியபோது அது எதிர்பாராதவிதமாக வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மதுரவாயலைச் சேர்ந்த மதன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பலத்த காயமடைந்த தினகரன், சூர்யா, சக்திவேல் ஆகிய மூவருக்கும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உள்ள ரங்கில் படப்பிடிப்பு நடந்ததால் இதற்காகப் போலீசாரிடம் அனுமதி பெறவில்லை எனக் கூறப்படும் நிலையில், போலீசார் இதுகுறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீச்சல் பழகிய போது மூழ்கி மாணவி உயிரிழப்பு!

ராணிப்பேட்டை, ஜூன் 3- வாலாஜா அருகே குளத்தில் நீச்சல் கற்றுக்கொண்டிருந்த 12-ஆம் வகுப்பு பள்ளி மாணவி, எதிர்பாராதவிதமாகத் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். வாலாஜாபேட்டை அடுத்த பூண்டி கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை - அம்மு தம்பதியரின் மகள் யாமினி (17). இவர் அப்பகுதியில் உள்ள பல்லப்பாறை குளத்தில் நீச்சல் பழகிய போது, எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்குச் சென்று தண்ணீரில் மூழ்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மாணவி யின் சடலத்தை மீட்டனர். அவரது உடல் பிரேத பரிசோத னைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து உள்ளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram