மூளைச்சாவு அடைந்த சிவகாசி இளைஞரின் உடல் உறுப்பு தானம்
6 Jun 2026, 10:46 pm
<p><strong>மூளைச்சாவு அடைந்த சிவகாசி இளைஞரின் உடல் உறுப்பு தானம்</strong></p><p>ஏழு பேருக்கு மறுவாழ்வு மதுரை, ஜூன் 6- சிவகாசியைச் சேர்ந்த 27 வயது இளைஞர் சேவுக பாண்டி மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரது குடும் பத்தினர் மேற்கொண்ட உடல் உறுப்பு தானத்தின் மூலம் ஏழு பேருக்கு மறு வாழ்வு கிடைத்துள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள ஆனையூர் இந்திராநகரைச் சேர்ந்த சேவுகபாண்டி, கடந்த ஜூன் 3 ஆம் தேதி காலை இருசக்கர வாகனத் தில் சென்றபோது விபத்துக் குள்ளாகி தலையில் பலத்த காயமடைந்தார். முதலில் சிவகாசி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து மேல்சிகிச்சைக் காக ஜூன் 4 ஆம் தேதி அதி காலை மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை யின் தீவிர விபத்து சிகிச் சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். தலைக்காயப் பிரிவு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலை யில், ஜூன் 5 ஆம் தேதி மாலை அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்து வர்கள் அறிவித்தனர். இதை யடுத்து, அவரது பெற்றோர் மற்றும் சகோதரரின் ஒப்பு தலுடன் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்தனர். அதன்படி, ஜூன் 6 ஆம் தேதி மருத்துவ விதிமுறை களின்படி உடல் உறுப்புகள் அகற்றப்பட்டு பகிர்ந்தளிக் கப்பட்டன. சேவுகபாண்டி யின் ஒரு சிறுநீரகம், தோல் மற்றும் இரு கருவிழிகள் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டன. மற்றொரு சிறுநீரகம் தேனியில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கல்லீரல் மதுரையில் உள்ள வடமலையான் மருத்துவ மனைக்கு மருத்துவ நெறி முறைகளின்படி ஒதுக்கப் பட்டது. இந்த உடல் உறுப்பு தானத்தின் மூலம் மொத்தம் ஏழு பேர் பயனடைந்து மறு வாழ்வு பெற்றுள்ளனர். உடற்கூராய்வுக்குப் பின்னர், சேவுகபாண்டியின் உடல் உரிய மரியாதையுடன் காவல்துறை மூலம் குடும் பத்தினரிடம் ஒப்படைக்கப் பட்டது. மேலும், தமிழக அர சின் சார்பில் இறுதி மரி யாதை செலுத்தும் வகை யில், அவரது உடல் விருது நகர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சேவுகபாண்டியின் குடும்பத்தினரின் மனிதநேய மிக்க முடிவுக்கு மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை நிர்வாகம் நன்றியைத் தெரி வித்துள்ளது. மேலும், உடல் உறுப்பு தான நடைமுறை களில் ஒத்துழைப்பு வழங் கிய காவல்துறையினருக் கும் மருத்துவமனை சார் பில் பாராட்டு தெரிவிக்கப் பட்டுள்ளது.</p>
