சிவகாசி பட்டாசு தொழிலுக்கு உலகளவில் மிகப்பெரிய சந்தை வாய்ப்பு இருக்கிறது
14 Jun 2026, 11:41 pm
<p><strong>சிவகாசி பட்டாசு தொழிலுக்கு உலகளவில் மிகப்பெரிய சந்தை வாய்ப்பு இருக்கிறது</strong></p><p>அமைச்சர் கீர்த்தனா பேட்டி சென்னை, ஜூன் 14 - சிவகாசி பட்டாசு தொழி லுக்கு உலகளவில் மிகப் பெரிய சந்தை வாய்ப்புகள் இருப்பதாக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரி வித்துள்ளார். சீனாவுக்கு நிகராக தமிழ்நாடும் பட்டாசு ஏற்றுமதியில் சாதிக்க முடி யும் என்றும் அவர் கூறினார். தமிழகத்திற்கு முதலீடு களை ஈர்ப்பதற்காக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தென்கொரியா சுற்றுப்பய ணம் செய்தார். அங்கு பல்வேறு நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து பேசிய கீர்த்தனா, தமிழ கத்தில் முதலீடு செய்ய வரு மாறு அழைப்பு விடுத்தார். தனது தென்கொரியா சுற்றுப் பயணத்தை நிறைவு செய்துவிட்டு தமிழ்நாடு திரும்பிய அமைச்சர் கீர்த்தனா விருதுநகரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “பட்டாசு ஏற்று மதியில் சீனாவுக்கு நிக ராக தமிழ்நாடும் ஏற்றுமதி செய்ய வேண்டும். சீனா எல்லா நாடுகளுக்கும் ஏற்று மதி செய்து கொண்டிருக் கிறது. ஆனால், தமிழ்நாடு இவ்வளவு திறமையை வைத்துக் கொண்டு இன் னும் ஏற்றுமதி செய்யாமல் இருக்கிறோம். ஏற்றுமதியை சட்டத்திற்குட்பட்டு சரியாக எப்படி செய்ய முடியும் என்று கொள்கை உருவாக்கி ஏற்று மதி செய்ய வேண்டும். அப்படி செய்தால் விருதுநக ரின் தரமே உயர்ந்துவிடும். ஏனென்றால், நமக்கு பக்கத் திலேயே துறைமுகமும் உள்ளது. அதனால், எளிதாக கொண்டு செல்ல முடியும். சிவகாசியை பெரிய அள வுக்கு கொண்டு செல்ல முடி யும்” என்றார்.</p>
